Day is sweet, Night is painful – Kurunthokai 353


#MEMEthokai88

Situation: Thalaivan (hero) is in love with Thalaivi (heroine). He meets her secretly every night. Now,Thalaivi cannot meet him in night. #MEMEthokai #karkanirka

குறுந்தொகை 353, உறையூர் முதுகூற்றனார், குறிஞ்சித் திணை  – தோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
ஆர்கலி வெற்பன் மார்பு புணையாகக்
கோடு உயர் நெடு வரைக் கவாஅன் பகலே
பாடு இன் அருவி ஆடுதல் இனிதே,
நிரை இதழ் பொருந்தாக் கண்ணோடு இரவில்
பஞ்சி வெண்திரிச் செஞ்சுடர் நல் இல்  5
பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ
அன்னை முயங்கத் துயில் இன்னாதே.

kuṟuntokai 353, uṟaiyūr mutukūṟṟaṉār, kuṟiñcit tiṇai  – tōḻi coṉṉatu, ciṟaippuṟattāṉāka irunta talaivaṉ kēṭkumpaṭi
ārkali veṟpaṉ mārpu puṇaiyākak
kōṭu uyar neṭu varaik kavāaṉ pakalē
pāṭu iṉ aruvi āṭutal iṉitē,
nirai itaḻ poruntāk kaṇṇōṭu iravil
pañci veṇtiric ceñcuṭar nal il  5
piṉṉu vīḻ ciṟupuṟam taḻīi
aṉṉai muyaṅkat tuyil iṉṉātē.

குறுந்தொகை 353, உறையூர் முதுகூற்றனார், குறிஞ்சித் திணை  – தோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
ஆரவாரம் மிகுந்த மலைநாட்டுத் தலைவனின் மார்பை படகாக
உயர்ந்த உச்சிகளைக் கொண்ட மலையின் சரிவுகளில், பகலில்
பாட்டைப்போல் ஓசையெழுப்பும் இனிய அருவியில் நீராடுவது இனிது;
வரிசையாய் இருக்கும் இமைகள் மூடாத கண்ணோடு, இரவில்
பஞ்சால் செய்த வெண்  திரியின் செம்மையான சுடர் ஒளிபரவும்  நல்ல வீட்டில்
பின்னல் விழும் முதுகைத் தழுவி
அன்னை அணைத்திருக்க தூங்குவது இம்சையாகவும்!.

Kurunthokai 353, Uraiyūr Muthukootranār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
Daytimes are sweet,
as you can use the chest of the man from uproarious mountains,
as a raft to play in the waterfalls from the high peaks and broad slope!
When you can’t close your eyelids, in the good house lit by red flames on the white cotton thread,
where you try to sleep with your mother hugging your my small back with falling braids,
the nights are painful!

Translated by Palaniappan Vairam Sarathy


—-
Reference:

Tamil Lexicon – University of Madras

Learn Sangam Tamil

Tamilconcordance.in

ஆர்கலி வெற்பன் மார்பு புணையாகக்

ārkali veṟpaṉ mārpu puṇaiyākak

ஆரவாரம் மிகுந்த மலைநாட்டுத் தலைவனின் மார்பை படகாக

uproar/shouting – chief of kurinchi tract – chest – as a raft/unite

கோடு உயர் நெடு வரைக் கவாஅன் பகலே

kōṭu uyar neṭu varaik kavāaṉ pakalē

உயர்ந்த உச்சிகளைக் கொண்ட மலையின் சரிவுகளில், பகலில்

sumit- high – broad -mountain – slope- morning

பாடு இன் அருவி ஆடுதல் இனிதே,

pāṭu iṉ aruvi āṭutal iṉitē,

பாட்டைப்போல் ஓசையெழுப்பும் இனிய அருவியில் நீராடுவது இனிது;

Singing – sweet – waterfall – bath/play – sweet

நிரை இதழ் பொருந்தாக் கண்ணோடு இரவில்

nirai itaḻ poruntāk kaṇṇōṭu iravil

வரிசையாய் இருக்கும் இமைகள் மூடாத கண்ணோடு, இரவில்

Orderly/spread over – eyelid – not close – eyes – night

பஞ்சி வெண்திரிச் செஞ்சுடர் நல் இல்  5

pañci veṇtiric ceñcuṭar nal il  5

பஞ்சால் செய்த வெண்  திரியின் செம்மையான சுடர் ஒளிபரவும்  நல்ல வீட்டில்

Cotton – white – thread – red flame – good – house

பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ

piṉṉu vīḻ ciṟupuṟam taḻīi

பின்னல் விழும் முதுகைத் தழுவி

Braided – falling – back – embrace/touch

அன்னை முயங்கத் துயில் இன்னாதே.

aṉṉai muyaṅkat tuyil iṉṉātē.

அன்னை அணைத்திருக்க தூங்குவது இம்சையாகவும்!.

Mother – embrace/hug – sleep – painful

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.