Like a women experiencing first pregnancy – Kurunthokai 287


#MEMEthokai86

Situation: Thalaivan (hero) is in love with Thalaivi (Heroine) and is far away to earn wealth. He has decided to leave Thalaivi to earn wealth and promised to return before the monsoon rains. Thozhi (friend) utters this poem. #MEMEthokai #karkanirka

குறுந்தொகை 287, கச்சிப்பேட்டு நன்னாகையார், முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி, காதலர்
இன்னே கண்டுந் துறக்குவர் கொல்லோ,
முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ
ஒதுங்கல் செல்லாப் பசும் புளி வேட்கைக்
கடுஞ்சூல் மகளிர் போல, நீர் கொண்டு  5
விசும்பி இவர்கல்லாது தாங்குபு புணரிச்
செழும் பல் குன்றம் நோக்கிப்
பெருங்கலி வானம் ஏர்தரும் பொழுதே?

kuṟuntokai 287, kaccippēṭṭu naṉṉākaiyār, mullait tiṇai – tōḻi talaiviyiṭam coṉṉatu
amma vāḻi tōḻi, kātalar
iṉṉē kaṇṭun tuṟakkuvar kollō,
munnāl tiṅkaḷ niṟai poṟuttu acaii
otuṅkal cellāp pacum puḷi vēṭkaik
kaṭuñcūl makaḷir pōla, nīr koṇṭu  5
vicumpi ivarkallātu tāṅkupu puṇaric
ceḻum pal kuṉṟam nōkkip
peruṅkali vāṉam ērtarum poḻutē?

குறுந்தொகை 287, கச்சிப்பேட்டு நன்னாகையார், முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
வாழ்க தோழி! காதலர்
இங்கேயே உன்னை கண்டபின்பும் பிரிந்துசெல்வாரோ?
பன்னிரண்டு [மூன்றுமுறை நான்கு]  மாதம் நிறை கருவைத் தாங்கித் அசந்து
நடக்க முடியாமல் பச்சைப் புளியின்மீது கொண்ட வேட்கையையுடைய
கடுமையான கர்ப்பம் கொண்ட மகளிர் போல, நீர் சுமந்துகொண்டு
வானத்தில் ஏறஇயலாத அந்தச் நீர் கருவை தாங்கி ஒன்றோடு ஒன்று கலந்து
செழிப்பான பல மலைகுன்றை நோக்கி
பெருத்த ஆரவாரத்துடன் மேகங்கள் எழுகின்ற இந்தக் கார்ப்பருவத்திலே

Kurunthokai 287, Kachipēttu Nannākaiyār, Mullai Thinai – What the heroine’s friend said to her
Long live my friend!
Like a women experiencing first pregnancy,
bearing the child for twelve months,
getting exhausted and unable to move, desiring fresh tamarind,
The clouds carry rain and raise up with uproar towards the mountains!
Will he be able to leave you seeing your state now?

Notes:
கடுஞ்சூல் – kaṭuñcūl – Difficult pregnancy usually the first time
—-
Reference:

Tamil Lexicon – University of Madras

Learn Sangam Tamil

Tamilconcordance.in

அம்ம வாழி தோழி, காதலர்

amma vāḻi tōḻi, kātalar

வாழ்க தோழி! காதலர்

Long live friend – lover

இன்னே கண்டுந் துறக்குவர் கொல்லோ,

iṉṉē kaṇṭun tuṟakkuvar kollō,

இங்கேயே உன்னை கண்டபின்பும் பிரிந்துசெல்வாரோ?

now/this moment – See – seperation – will he 

முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசை

munnāl tiṅkaḷ niṟai poṟuttu acaii

பன்னிரண்டு [மூன்றுமுறை நான்கு]  மாதம் நிறை கருவைத் தாங்கித் அசந்து

Three time four – month – complete – bear/adjust/wait – exhausted 

ஒதுங்கல் செல்லாப் பசும் புளி வேட்கைக்

otuṅkal cellāp pacum puḷi vēṭkaik

நடக்க முடியாமல் பச்சைப் புளியின்மீது கொண்ட வேட்கையையுடைய

Move away/walk – Not move – fresh – tamarind – desire/appitite

கடுஞ்சூல் மகளிர் போல, நீர் கொண்டு  5

kaṭuñcūl makaḷir pōla, nīr koṇṭu  5

கடுமையான கர்ப்பம் கொண்ட மகளிர் போல, நீர் சுமந்துகொண்டு

First pregnancy – ladies – alike – wate – carry/possess

விசும்பி இவர்கல்லாது தாங்குபு புணரிச்

vicumpi ivarkallātu tāṅkupu puṇaric

வானத்தில் ஏறஇயலாத அந்தச் நீர் கருவை தாங்கி ஒன்றோடு ஒன்று கலந்து

Cloud – he walk away – embrace/couplate

செழும் பல் குன்றம் நோக்கிப்

ceḻum pal kuṉṟam nōkkip

செழிப்பான பல மலைகுன்றை நோக்கி

Rich – many/abundant – hill – towards

பெருங்கலி வானம் ஏர்தரும் பொழுதே?

peruṅkali vāṉam ērtarum poḻutē?

பெருத்த ஆரவாரத்துடன் மேகங்கள் எழுகின்ற இந்தக் கார்ப்பருவத்திலே

Big sound/ Uproar – sky/cloud – raising – time

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.