‘who are you? Why are you blocking my way?’ – Akananooru 390


#MEMEthokai90

Situation: Thalaivan (Hero) has fallen in love with Thalaivi (heroine), he narrates this incident to his friend. #MEMEthokai #karkanirka

அகநானூறு 390, அம்மூவனார், நெய்தற் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் அல்லது தன் நண்பனிடம் சொன்னது
உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி,
அதர்படு பூழிய சேண் புலம் படரும்
ததர் கோல் உமணர் பதி போகும் நெடுநெறிக்
கண நிரை வாழ்க்கை தான் நன்று கொல்லோ?
வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள, 
ஐது அகல் அல்குல் கவின் பெறப் புனைந்த
பல் குழைத் தொடலை ஒல்கு வயின் ஒல்கி,
“நெல்லும் உப்பும் நேரே ஊரீர்!
கொள்ளீரோ?” எனச் சேரிதொறும் நுவலும்,
“அவ் வாங்கு உந்தி அமைத் தோளாய்! நின்  
மெய் வாழ் உப்பின் விலை எய்யாம்?” எனச்
சிறிய விலங்கினமாகப், பெரிய தன்
அரி வேய்  உண் கண் அமர்த்தனள் நோக்கி,
“யாரீரோ எம் விலங்கியீர்?” என
மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற  15
சில் நிரை வால் வளைப் பொலிந்த
பல் மாண் பேதைக்கு ஒழிந்தது, என் நெஞ்சே.

akanāṉūṟu 390, ammūvaṉār, neytaṟ tiṇai – talaivaṉ taṉ neñciṭam allatu taṉ naṇpaṉiṭam coṉṉatu
uvar viḷai uppiṉ koḷḷai cāṟṟi,
atarpaṭu pūḻiya cēṇ pulam paṭarum
tatar kōl umaṇar pati pōkum neṭuneṟik
kaṇa nirai vāḻkkai tāṉ naṉṟu kollō?
vaṇar curi mucci muḻutum maṉ puraḷa,
aitu akal alkul kaviṉ peṟap puṉainta
pal kuḻait toṭalai olku vayiṉ olki,
“nellum uppum nērē ūrīr!
koḷḷīrō?” eṉac cēritoṟum nuvalum,
“av vāṅku unti amait tōḷāy! niṉ
mey vāḻ uppiṉ vilai eyyām?” eṉac
ciṟiya vilaṅkiṉamākap, periya taṉ
ari vēy uṇ kaṇ amarttaṉaḷ nōkki,
“yārīrō em vilaṅkiyīr?” eṉa
mūral muṟuvalaḷ pērvaṉaḷ niṉṟa 15
cil nirai vāl vaḷaip polinta
pal māṇ pētaikku oḻintatu, eṉ neñcē.

அகநானூறு 390, அம்மூவனார், நெய்தற் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் அல்லது தன் நண்பனிடம் சொன்னது
கடல் சார்ந்த நிலத்தில் விளையும் உப்பின் விலையைக் கூவி,
பாதையில் படும்  புழுதியையுடைய, தொலை தூர ஊர் பயணிக்கும்,
நுனி சிதைந்த [வண்டிமாட்டை அடிக்கும்] கோலையுடைய உமணர் (உப்புவாணிகர்கள்) செல்லும் நெடிய வழியில்
இனத்தாருடன் கூடிச்செல்லுகின்ற வாழ்க்கை தான் நன்று அல்லவோ
வளைந்து சுருண்ட கொண்டை முழுவதும் புரளும்படி
அழகிய, அகலமான அல்குல்  அழகு பெறும்படி உடுத்திய
பல இலைகளால் செய்த தழையாடை இடை அசையும்பொழுதெல்லாம் அசைய
“நெல்லும் உப்பும் [இடையால்] சமம் ஊர் மக்களே!”,
வாங்கிக் கொள்வீர்களா? என்று சேரிதோறும் கூவும்
அழகிய வளைந்த தொப்புளையும், மூங்கில் போன்ற தோளினையும் உடையவளே! உனது
உடம்பிலே வாழ்கின்ற உப்பின் (வியர்வையின்) விலையை நான் அறியலாமா? ‘ என
சிறிதே நான் வழிவிடாமல் நிற்க, பெரிய தன்
கூர்மையுடன் மலர்ந்த  மைப்பூசிய  கண்களினால் யுத்தம் செய்பவள் போல் என்னை நோக்கி
“யார் நீ ? ஏன் வழிவிட மறுக்கிறாய்?” என
புன்முறுவல் பூத்து சிறிது தள்ளிச்சென்று  நிற்க
சில வரிசையாக வெண்மையான வளையல்களால் பொலிவுற்ற
பல நலன்களையுடைய இளம்பெண்ணின் பின்னால் போனது என் நெஞ்சே!

Akanānūru 390, Ammoovanār, Neythal Thinai, What the hero said to his heart, or to his friend
Sprinkling salt grown in the salt pans
The clan of salt farmers and their master,
with blunt cane [used to direct their cattle],
Who lived their life traveling to remote places,
passed on the long dusty roads
announcing the price of their salt.
She who had curly hair made into tuft
with beautifully parted pubic mons,
adorned many leaf garment ,to add more beauty,
which shake as her hips shake!
She announced to the village,
‘Salt for equal weight of paddy,
do you want to buy?’
‘One with beautiful curved navel and bamboo arms,
I would like to understand the price to obtain salt residing in your body [sweat]!’
Saying so I blocked her way.
She with her piercing eye painted black
Asked ‘who are you? Why are you blocking my way?’
And gave a smile and turned over.
My heart has left me to go with the great flourishing girl
who had adorned rows of conch bangles!

Translated by Palaniappan Vairam Sarathy

Notes:

Love between outsider and the native [ a theme that continues till date even hollywood – Avtar]

Song with very similar scenes – https://www.youtube.com/watch?v=slRJTOvrb7Q

Salt is commodity which has to come from seas shores. Had high risk of getting damaged on the way unlike agricultural produce. [they are useless if they fall down or get wet]. Risk and rarity makes this being equated with value of paddy. Even as last as 1950s white rice was a very expensive commodity.

உமணர் – umaṇar – Salt manufacturers/farmers -merchants

1. Member of the ancient caste of salt-makers; உப்பமைக்கும் சாதியான். (திவா.) 2. Dealer in salt; உப்புவாணிகன்.

—-
Reference:

Tamil Lexicon – University of Madras

Learn Sangam Tamil

Tamilconcordance.in


உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி,

uvar viḷai uppiṉ koḷḷai cāṟṟi,

கடல் சார்ந்த நிலத்தில் விளையும் உப்பின் விலையைக் கூவி,

sea/saltyland – grow – salt – price – announce

அதர்படு பூழிசேண் புலம் படரும்

atarpaṭu pūḻiya cēṇ pulam paṭarum

பாதையில் படும்  புழுதியையுடைய, தொலை தூர ஊர் பயணிக்கும்,

road/path – dust – long/remote/spacious – place/path -spread/pass

ததர் கோல் உமணர் பதி போகும் நெடுநெறிக்

tatar kōl umaṇar pati pōkum neṭuneṟik

நுனி சிதைந்த [வண்டிமாட்டை அடிக்கும்] கோலையுடைய உமணர் (உப்புவாணிகர்கள்) செல்லும் நெடிய வழியில்

Sprinkling – cane/rod – salt farmers – master – going – long – way /path 

கண நிரை வாழ்க்கை தான் நன்று கொல்லோ?

kaṇa nirai vāḻkkai tāṉ naṉṟu kollō?

இனத்தாருடன் கூடிச்செல்லுகின்ற வாழ்க்கை தான் நன்று அல்லவோ

Clan – full – life – that – good – isnt it

வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள

vaṇar curi mucci muḻutum maṉ puraḷa, 

வளைந்து சுருண்ட கொண்டை முழுவதும் புரளும்படி

Curly hair – spiral -Tuft of hair  – wholly – endure – soiled/roll

ஐது அகல் அல்குல் கவின் பெறப் புனைந்த

aitu akal alkul kaviṉ peṟap puṉainta

அழகிய, அகலமான அல்குல்  அழகு பெறும்படி உடுத்திய

Beautifully – parted-venus monds – beautiful – attain – adorn/decorate

பல் குழைத் தொடலை ஒல்கு வயின் ஒல்கி,

pal kuḻait toṭalai olku vayiṉ olki,

பல இலைகளால் செய்த தழையாடை இடை அசையும்பொழுதெல்லாம் அசைய

Many – leaf garment – hanging – shake – waist/side – shake

“நெல்லும் உப்பும் நேரே ஊரீர்!

“nellum uppum nērē ūrīr!

“நெல்லும் உப்பும் [இடையால்] சமம் ஊர் மக்களே!”,

Paddy – salt – straight/equal – people of the village

கொள்ளீரோ?” எனச் சேரிதொறும் நுவலும்,

koḷḷīrō?” eṉac cēritoṟum nuvalum,

வாங்கிக் கொள்வீர்களா? என்று சேரிதோறும் கூவும்

Will you take – say – across the village – declare

அவ் வாங்கு உந்தி அமைத் தோளாய்! நின் 

“av vāṅku unti amait tōḷāy! niṉ  

அழகிய வளைந்த தொப்புளையும், மூங்கில் போன்ற தோளினையும் உடையவளே! உனது

Beautiful – Curved – navel – Bamboo – arms – your

மெய் வாழ் உப்பின் விலை எய்யாம்?” எனச்

mey vāḻ uppiṉ vilai eyyām?” eṉac

உடம்பிலே வாழ்கின்ற உப்பின் (வியர்வையின்) விலையை நான் அறியலாமா? ‘ என

Body – reside – salt – price – understand? – so

சிறிய விலங்கினமாகப், பெரிய தன்

ciṟiya vilaṅkiṉamākap, periya taṉ

சிறிதே நான் வழிவிடாமல் நிற்க, பெரிய தன்

Small – not give way- big – her

அரி வேய்  உண் கண் அமர்த்தனள் நோக்கி,

ari vēy  uṇ kaṇ amarttaṉaḷ nōkki,

கூர்மையுடன் மலர்ந்த  மைப்பூசிய  கண்களினால் யுத்தம் செய்பவள் போல் என்னை நோக்கி

Piercing – blossom/spying – eating/painted black – eyes – desire/war/settlesee

“யாரீரோ எம் விலங்கியீர்?” என

“yārīrō em vilaṅkiyīr?” eṉa

“யார் நீ ? ஏன் வழிவிட மறுக்கிறாய்?” என

Who are you – my – way block why – saying

மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற  15

mūral muṟuvalaḷ pērvaṉaḷ niṉṟa  15

புன்முறுவல் பூத்து சிறிது தள்ளிச்சென்று  நிற்க

tooth/smile – smile/happiness – she turn over – stand

சில் நிரை வால் வளைப் பொலிந்த

cil nirai vāl vaḷaip polinta

சில வரிசையாக வெண்மையான வளையல்களால் பொலிவுற்ற

few/some – row – great/white – bangles – flourish

பல் மாண் பேதைக்கு ஒழிந்தது, என் நெஞ்சே.

pal māṇ pētaikku oḻintatu, eṉ neñcē.

பல நலன்களையுடைய இளம்பெண்ணின் பின்னால் போனது என் நெஞ்சே!

Many – greatness – innocent girl – vacate – my heart

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.