My partner to play – Ainkurunooru 72


#MEMEthokai68

Situation: Thalaivan (hero) who is married to Thalaivi (heroine) and thinks about the time he was happy with Thalaivi (heroine). #MEMEthokai #karkanirka

ஐங்குறுநூறு 72, ஓரம்போகியார், மருதத் திணை – தலைவன் தோழியிடம் சொன்னது
வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழைத்
திதலை அல்குல், துயல்வரும் கூந்தல்,
குவளை உண்கண், ஏஎர் மெல்லியல்,
மலர் ஆர் மலிர் நிறை வந்தெனப்,
புனலாடு புணர் துணை ஆயினள் எமக்கே.

aiṅkuṟunūṟu 72, ōrampōkiyār, marutat tiṇai – talaivaṉ tōḻiyiṭam coṉṉatu
vayal malar āmpal kayil amai nuṭaṅku taḻait
titalai alkul, tuyalvarum kūntal,
kuvaḷai uṇkaṇ, ēer melliyal,
malar ār malir niṟai vanteṉap,
puṉalāṭu puṇar tuṇai āyiṉaḷ emakkē.

ஐங்குறுநூறு 72, ஓரம்போகியார், மருதத் திணை – தலைவன் தோழியிடம் சொன்னது
வயலில் மலர்ந்த ஆம்பல் மலர் சேர்த்து அமைந்த அசையும் தழை ஆடையும், தேமல் படர்ந்த அல்குலும் அசைந்தாடும் கூந்தலும்,
குவளை போன்ற மைபூசிய கண்களும் உடைய அழகிய மென்மையானவள்
மலர்களைப் பரப்பி வெள்ளம் நிறைந்து வந்தபோது
புனலில் புணர்வதற்கு துணை ஆனாள் எனக்கு!

Ainkurunūru 72, Ōrampōkiyār, Marutham Thinai – What the hero said to the heroine’s friend
Beautiful soft natured girl,
With Swaying dress ,
made from stems of waterlilies from the field,
Kohl filled eyes like water lily,
Swaying hair,
Venus mons with beauty spots,
became my partner to play and embrace
in the streams which was fed by
the floods
which came with beautiful flowers

Translated by Palaniappan Vairam Sarathy

Notes:
திதலை அல்குல் – titalai alkul

Alkul – straight meaning is pubic mons, vaginal area. This is the primary meaning used in Sangam literature. Women’s beauty is described by her breast and vaginal areas in these poems. Avoiding recency bias (of victorian era costumes), being topless or naked were common due to weather in Ancient India and Tribal cultures. Translators and commentators usually avoid this meaning to make poems palatable for all readers. They usually use waist or side as a substitute.

அல்குல் alkul (p. 140) – n. < id. [M. alkiṭam.] 1. Side; பக்கம். கவைத்தாம்பு தொடுத்த காழூன் றல் குல் (பெரும்பாண். 244). 2. Waist; அரை. பூந்து கில்சே ரல்குல் காமரெழில் விழலுடுத்து (திவ். பெரு மாள். 9, 7). 3. Pudendum muliebre; பெண்குறி. (திருக்கோ. 9.)

Thithilai in this context is described as beauty spots on Labia. This could be either mole or natural dark spots on vaginal area or it could be spots of oil glands known as Fordyce spots.

திதலை titalai (p. 1876)

Yellow spots on the skin, considered beautiful in women; தேமல். பொன்னுரை கடுக்குந் திதலையர் (திருமுரு. 145). 2. Pale complexion of women after confinement; ஈன்ற பெண்களுக் குள்ளவெளுப்புநிறம். ஈன்றவ டிதலைபோல் (கலித். 32).

Per Lexicon description this could be yellow spots which look like gold sparkle as in the image depicting Fordyce spots.

ஆம்பல் āmpal


—-
Reference:
Tamil Lexicon – University of Madras
Learn Sangam Tamil
Tamilconcordance.in

வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழைத்

vayal malar āmpal kayil amai nuṭaṅku taḻait

வயலில் மலர்ந்த ஆம்பல் மலர் சேர்த்து அமைந்த அசையும் தழை ஆடையையும்,

Field – flower – waterlilly – neck/stem – create/combine – sway – leaves

திதலை அல்குல், துயல்வரும் கூந்தல்,

titalai alkul, tuyalvarum kūntal,

தேமல் படர்ந்த அல்குலும் அசைந்தாடும் கூந்தலையும்,

Spotted – venus mons – swaying – hair/tresses

குவளை உண்கண், ஏஎர் மெல்லியல்,

kuvaḷai uṇkaṇ, ēer melliyal,

குவளை போன்ற மைபூசிய கண்களையும் உடைய அழகிய மென்மையானவள்

Water lilly alike – khol filled eye – beautiful – soft natured woemn

மலர் ஆர் மலிர் நிறை வந்தெனப்,

malar ār malir niṟai vanteṉap, 

மலர்களைப் பரப்பி வெள்ளம் நிறைந்து வந்தபோது

Flower – beautiful – to flood – full – come

புனலாடு புணர் துணை ஆயினள் எமக்கே.

puṉalāṭu puṇar tuṇai āyiṉaḷ emakkē.

புனலில் புணர்வதற்கு துணை ஆனால் எனக்கு!

Play in water – embrace – partner – became -for me

4 Comments

  1. அசையும் தழை ஆடையையும்,தேமல் படர்ந்த அல்குலும் அசைந்தாடும் கூந்தலையும், //
    இங்கு ஆடையையும், கூநதலையும் என்று இருப்பதனால் அல்குலையும்/ அலுகிலினையும் என்று இருக்கவேண்டும்.

  2. புனலில் புணர்வதற்கு துணை ஆனால் எனக்கு!/ Grammatically not possible.
    மாறாக, புனலாடும் உற்ற துணை ஆயினாள் = புனலாடு புணர் துணை ஆயினள்// புனலாடு என்னும் வினைத்தொகை அடி பெயரெச்சமாகச் செயல்படும். எனவே ‘புனலாடும்’ என்று பெயரெச்சமாகக்கொள்ளலாம். புணர் என்னும் வினைத்தொகை அடி பெயரெச்சமாக ‘புணரும்’ என்று எடுத்தால் புனலாடும் என்பதனோடு முரண்படும். எனவே அதனைப் பெயரடைப்பொருளில் ‘உற்ற’ என்னும் பொருளில் எடுக்கலாம்.
    எனவே, என்னுடைய வாக்கிய அமைப்பு: மெல்லியல்… புனலாடும் உற்ற துணையாக ஆயினாள்.
    மாறாக, புனலில் என்று எடுக்கமுடியாது ஏனென்றால் புனாலாடு என்பதில் ஏழாம் வேற்றுமை இல் உருபு இல்லை. ஆடு என்னும் வினைத்தொகை அடி (வேர்ச்சொல்) தான் உள்ளது. புணவதற்கு என்றும் எடுக்கமுடியாது. அங்கும் நான்காம் வேற்றுமை ‘கு’ இல்லை. (பொருட்டு-பொருள்)

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.