Today is big day – Kurunthokai 146


#MEMEthokai69

Situation: Thalaivan (hero) is in love with Thalaivi (Heroine). He was away from her to earn wealth for marriage or afraid of gossips. He has made up his mind and come to Thalaivi’s village to ask her hand in marriage. Thozhi (Thalaivi’s friend) informs her about his arrival. #MEMEthokai #karkanirka

குறுந்தொகை 146, வெள்ளிவீதியார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ,
தண்டுடைக் கையர், வெண்தலைச் சிதவலர்,
‘நன்று நன்று’ என்னும் மாக்களோடு,
‘இன்று பெரிது’ என்னும் ஆங்கணது அவையே. 5

kuṟuntokai 146, veḷḷivītiyār, kuṟiñcit tiṇai – tōḻi talaiviyiṭam coṉṉatu
amma vāḻi tōḻi! nammūrp
pirintōrp puṇarppōr iruntaṉar kollō,
taṇṭuṭaik kaiyar, veṇtalaic citavalar,
‘naṉṟu naṉṟu’ eṉṉum mākkaḷōṭu,
‘iṉṟu peritu’ eṉṉum āṅkaṇatu avaiyē. 5

குறுந்தொகை 146, வெள்ளிவீதியார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது

வாழ்க தோழியே! நம் ஊரில்
பிரிந்தோரைச் சேர்த்து வைப்போர் இருக்கின்றார்கள் அல்லவா?
தண்டினைப் பிடித்த கையினரும், வெள்ளைமுடித் தலையில் தலைப்பாகைக் கட்டியிருப்போர்,
‘நன்று நன்று’ என்று சொல்லும் ஊர் மக்களோடு
‘இன்று பெரிய நாள்’ என்று கூறினர், நம் ஊரினர் கூடிய அவையில்!

Kurunthokai 146, Velliveethiyār, Kurinji Thinai – What the heroine’s friend said to her about the wedding arrangements
Long live my friend!
We have people in our village who unite those separated!
Elders with walking sticks and turban on their white hairs have gathered together with people who said “Good, Good”
“Today is big day” they announced in that assembly!

Translated by Palaniappan Vairam Sarathy

—-
Reference:

Tamil Lexicon – University of Madras

Learn Sangam Tamil

Tamilconcordance.in
—–

அம்ம வாழி தோழி! நம்மூர்ப்

amma vāḻi tōḻi! Nammūrp

வாழ்க தோழியே! நம் ஊரில்

Long live my friend – our village

பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ,

pirintōrp puṇarppōr iruntaṉar kollō, பிரிந்தோரைச் சேர்த்து வைப்போர்

இருக்கின்றார்கள் அல்லவா?

Those separated – to unite – people there – isnt it? 

தண்டுடைக் கையர், வெண்தலைச் சிதவலர்,

taṇṭuṭaik kaiyar, veṇtalaic citavalar,

தண்டினைப் பிடித்த கையினரும், வெள்ளைமுடித் தலையில் தலைப்பாகைக் கட்டியிருப்போர்,

Stick – handers, white head – towel/strip of cloth on people

‘நன்று நன்று’ என்னும் மாக்களோடு,

‘naṉṟu naṉṟu’ eṉṉum mākkaḷōṭu,

‘நன்று நன்று’ என்று சொல்லும் ஊர் மக்களோடு

good  – good – they say – people

‘இன்று பெரிது’ என்னும் ஆங்கணது அவையே.  5

‘iṉṟu peritu’ eṉṉum āṅkaṇatu avaiyē.  5

‘இன்று பெரிய நாள்’ என்று கூறினர், நம் ஊரினர் கூடிய அவையில்!

Today – big – they say – in that place – assembled people

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.