Moon come near my son – Akananooru 54


#MEMEthokai99

Situation: Thalaivan is far away in a battlefield fighting with his king, leaving his lover (Thalaivi) lonely. He is desperate to meet her soon! #MEMEthokai #Karkanirka

அகநானூறு 54, மாற்றூர் கிழார் மகனார் கொற்றங்கொற்றனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,
வேந்தனும் வெம்பகை தணிந்தனன், தீம் பெயல்
காரும் ஆர்கலி தலையின்று தேரும்
ஓவத்து அன்ன கோபச் செந்நிலம்
வள்வாய் ஆழி உள் உறுபு உருளக்  5
கடவுக, காண்குவம் பாக, மதவு நடைத்
தாம்பு அசை குழவி வீங்கு சுரை மடியக்,
கனையலம் குரல் கால் பரி பயிற்றிப்,
படுமணி மிடற்ற பய நிரை ஆயம்
கொடு மடி உடையர் கோல் கைக் கோவலர்  10
கொன்றை அம் குழலர் பின்றைத் தூங்க,
மனை மனைப் படரும் நனை நகு மாலைத்
தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன்
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலைப்
புன் காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர்  15
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி,
“முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்
பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி,
வருகுவை ஆயின் தருகுவென் பால்” என
விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றித்,  20
திதலை அல்குல் எம் காதலி
புதல்வன் பொய்க்கும் பூங்கொடி நிலையே.

akanāṉūṟu 54, māṟṟūr kiḻār makaṉār koṟṟaṅkoṟṟaṉār, mullait tiṇai – talaivaṉ tērppākaṉiṭam coṉṉatu
viruntiṉ maṉṉar aruṅkalam teṟuppa,
vēntaṉum vempakai taṇintaṉaṉ, tīm peyal
kārum ārkali talaiyiṉṟu tērum
ōvattu aṉṉa kōpac cennilam
vaḷvāy āḻi uḷ uṟupu uruḷak  5
kaṭavuka, kāṇkuvam pāka, matavu naṭait
tāmpu acai kuḻavi vīṅku curai maṭiyak,
kaṉaiyalam kural kāl pari payiṟṟip,
paṭumaṇi miṭaṟṟa paya nirai āyam
koṭu maṭi uṭaiyar kōl kaik kōvalar  10
koṉṟai am kuḻalar piṉṟait tūṅka,
maṉai maṉaip paṭarum naṉai naku mālait
taṉakkeṉa vāḻāp piṟarkku uriyāḷaṉ
paṇṇaṉ ciṟukuṭip paṭappai nuṇ ilaip
puṉ kāḻ nellip paiṅkāy tiṉṟavar  15
nīr kuṭi cuvaiyiṉ tīviya miḻaṟṟi,
“mukiḻ nilāt tikaḻtarum mūvāt tiṅkaḷ
poṉṉuṭait tāli eṉ makaṉ oṟṟi,
varukuvai āyiṉ tarukuveṉ pāl” eṉa
vilaṅku amark kaṇṇaḷ viral viḷi payiṟṟit,  20
titalai alkul em kātali
putalvaṉ poykkum pūṅkoṭi nilaiyē.

அகநானூறு 54, மாற்றூர் கிழார் மகனார் கொற்றங்கொற்றனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
புதிய மன்னர்களின் அரிய அணிகலன்களைத் திறையாகக் கொட்ட
வேந்தனும் வெப்பமிகு பகைமை தனிதது; இனிமையான மழை பெய்ததால்
மேகமும் பேரொலி எழுப்புகிறது; தேரை
ஓவியம் போன்ற, இந்திரகோபம் போன்று செம்மண் நிலத்தில்
உறுதியான சக்கரங்களை அழுத்தி பதித்து உருள,
விரைந்து செலுத்துக! காண்போம் பாகனே! மயக்கமான நடையுடன்
கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்றுகள் (தம்) பெருத்த மடியைக் குடித்துக் சுருக்கக்
கனைக்கும் குரலுடன் காலால் தாவித் பாய்ந்து
ஒலிக்கும் மணிகள் கழுத்தில் கட்டப்பட்ட பால் சுரக்கும் பசுக்கள் கூட்டம்
(பண்டம் இடுதற்காக) வளைத்துக்கட்டிய மடிப்பினையுடைய, கோலைக் கையிலே கொண்ட கோவலர் (மாடு மேய்ப்போர்),
கொன்றக்கனியால் குழலிசைப்பவராய்ப் பின்னால் மெதுவே நடந்துவர,
வீடுகள்தோறும் செல்லும், மொட்டுகள் மலரும், மாலை நேரத்தில்;
தனக்கென வாழாமல் பிறர்க்கு எல்லாம் உரியவனான
பண்ணனின் சிறுகுடித் தோட்டத்திலுள்ள, நுண்ணிய இலைகளையும்
புல்லிய விதைகளையும் கொண்ட நெல்லியின் பசுங்காயைத் தின்றவர்
நீர் குடிக்கும்போது பெறும் சுவையைப் போல, இனிய மொழிகளைக் கூறி,
வளரும் நிலவினால் விளங்கும் பிறைமதியே!
(கழுத்தில்)பொன்சங்கிலி அணிந்த என் மகன் இருப்பிடம் தெரிந்து
வந்தால் (உனக்குப்) பால் தருவேன் என்று
ஓரக்கண்ணால் பார்த்தவளாய் விரலால் (நிலவை) மீண்டும் மீண்டும் அழைத்து,
தேமல் படர்ந்த அல்குலையுடைய என் காதலி,
புதல்வனிடம் பொய்யாகக் கூறும் பூங்குடியின் நிலையை(காண்போம் பாகனே)

Akanānūru 54, Matroor Kilār Makanār Kotrankotranār, Mullai Thinai – What the hero said to his charioteer
King’s furious enmity has diluted, as the new kings gave precious ornaments as tribute!
Sweet showers pour with uproar to mingle with red dye alike red earth,
which looks like painting! Charioteer ride fast to us see her!
Let the strong wheel cause imprints as they roll!
As evening spreads across houses, flower open their buds,
Herds of Cow hearing the intense voice of the calves,
with beautiful walk, moving around tied to the rope
Moves swiftly causing its neck bell to sound,
to contract its swollen udder by feeding them,
the cowherds with cloth bags and sticks, playing their lutes made with laburnum
Follow them slowly!
My wife, who is like flower vine, with beauty spots on her venus mons and tranquil eyes!
Lies to my young son, who prattles sweetly like the taste of water after eating
Fresh Gooseberry of Sirukudi of King pannan who did not live for himself but for others
Summoning the moon with her fingers
“ waxing moon who gives brightness and who never ages, if you come and join my son with gold necklace
I will give you milk”

Translated by Palaniappan Vairam Sarathy

கோபம்² kōpam , n. < indra-gōpa. 1. Cochineal, Coccus cœti; தம்பலப்பூச்சி

http://sangacholai.in/Essays-4.1.html

—-
Reference:

Tamil Lexicon – University of Madras

Learn Sangam Tamil

Tamilconcordance.in

விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,

viruntiṉ maṉṉar aruṅkalam teṟuppa,

புதிய மன்னர்களின் அரிய அணிகலன்களைத் திறையாகக் கொட்ட

New – king – precious ornament – tribute

வேந்தனும் வெம்பகை தணிந்தனன், தீம் பெயல்

vēntaṉum vempakai taṇintaṉaṉ, tīm peyal

வேந்தனும் வெப்பமிகு பகைமை தனிதது; இனிமையான மழை பெய்ததால்

King’s – heated/furious enmity – dilute – sweet – rains/showers

காரும் ஆர்கலி தலையின்று தேரும்

kārum ārkali talaiyiṉṟu tērum

மேகமும் பேரொலி எழுப்புகிறது; தேரை

Roar/cloud – uproar – to rain – mingle

ஓவத்து அன்ன கோபச் செந்நிலம்

ōvattu aṉṉa kōpac cennilam

ஓவியம் போன்ற, இந்திரகோபம் போன்று செம்மண் நிலத்தில்

Painting – alike – cochineal – red earth

ள்வாய் ஆழி உள் உறுபு உருளக்  5

vaḷvāy āḻi uḷ uṟupu uruḷak  5

உறுதியான சக்கரங்களை அழுத்தி பதித்து உருள,

Strong mouth – wheel – inside – move/suffer/permanent – roll

கடவுக, காண்குவம் பாக, மதவு நடைத்

kaṭavuka, kāṇkuvam pāka, matavu naṭait

விரைந்து செலுத்துக! காண்போம் பாகனே! மயக்கமான நடையுடன்

You ride – lets see – charioteer, beautiful/intoxicated – walk

தாம்பு அசை குழவி வீங்கு சுரை மடியக்,

tāmpu acai kuḻavi vīṅku curai maṭiyak,

கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்றுகள் (தம்) பெருத்த மடியைக் குடித்துக் சுருக்கக்

Rope to tie cattle – walk/walk slowly/move – calf – swell –  udder – shrink

கனையலம் குரல் கால் பரி பயிற்றிப்,

kaṉaiyalam kural kāl pari payiṟṟip,

கனைக்கும் குரலுடன் காலால் தாவித் பாய்ந்து

intense/sound – voice – leg – quick – pass

படுமணி மிடற்ற பய நிரை ஆயம்

தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன்

koṭu maṭi uṭaiyar kōl kaik kōvalar  10

(பண்டம் இடுதற்காக) வளைத்துக்கட்டிய மடிப்பினையுடைய, கோலைக் கையிலே கொண்ட கோவலர் (மாடு மேய்ப்போர்),

Cloth bags- Possess – rod/stick – hand – cowherds

கொடு மடி உடையர் கோல் கைக் கோவலர்  10

koṉṟai am kuḻalar piṉṟait tūṅka,

கொன்றக்கனியால் குழலிசைத்து பின்னால் மெதுவே நடந்து,

Laburnum – action – lute players – behind – walk slowly

கொன்றை அம் குழலர் பின்றைத் தூங்க,

maṉai maṉaip paṭarum naṉai naku mālait

வீடு வீடாக செல்லும், மொட்டுகள் மலரும், மாலை நேரத்தில்;

House – house – spread – flowerbud – bloom – evening

மனை மனைப் படரும் நனை நகு மாலைத்

taṉakkeṉa vāḻāp piṟarkku uriyāḷaṉ

தனக்கென வாழாமல் பிறர்க்கு எல்லாம் உரியவனான

Not for him – live – others – possession/relative

பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலைப்

paṇṇaṉ ciṟukuṭip paṭappai nuṇ ilaip

பண்ணனின் சிறுகுடித் தோட்டத்திலுள்ள, நுண்ணிய இலைகளையும்

Bard – village/sirukudi village – garden – small – leaves

புன் காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர்  15

puṉ kāḻ nellip paiṅkāy tiṉṟavar  15

சிறு விதைகளையும் கொண்ட நெல்லியின் பசுமையானக் காயைத் தின்றவர்

Small – seed- Indian gooseberry – green -fruit – one who eat

நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி,

nīr kuṭi cuvaiyiṉ tīviya miḻaṟṟi,

நீர் குடிக்கும்போது அனுபவிக்கும் சுவையைப் போல, இனிய மழலை மொழி பேசி,

Water – drink – taste – sweet – speak softly/prattle like kid

முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்

“mukiḻ nilāt tikaḻtarum mūvāt tiṅkaḷ

“வளரும் நிலவொளி தரும்  மூப்பில்லா நிலவே!

To appear (growing)/waning – moon – brightness give – not become old – moon

பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி,

poṉṉuṭait tāli eṉ makaṉ oṟṟi,

பொன் சங்கிலி அணிந்த என் மகன் அருகில்

Made of gold – child’s necklet – my – son – to become one/united

வருகுவை ஆயின் தருகுவென் பால்” என

varukuvai āyiṉ tarukuveṉ pāl” eṉa

வருவாய் என்றால் தருவேன் (உனக்குப்) பால்” என்று

If you come – then – I give you – milk – saying

விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றித்,  20

vilaṅku amark kaṇṇaḷ viral viḷi payiṟṟit,  20

ஓரக்கண்ணால் அமைதியான பார்த்தவளாய் விரலைக்கொண்டு (நிலவை) மீண்டும் மீண்டும் அழைத்து,

That which is transverse, across – tranquil – one with eyes – finger – summon – instruct/speak

திதலை அல்குல் எம் காதலி

titalai alkul em kātali

தேமல் படர்ந்த அல்குலையுடைய என் காதலி,

Yellow spots – Venus mons – my – lover

புதல்வன் பொய்க்கும் பூங்கொடி நிலையே.

putalvaṉ poykkum pūṅkoṭi nilaiyē.

புதல்வனிடம் பொய் கூறும் பூங்குடியின் நிலையை

Son – lying – flower vine – status

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.