Mother hugged her and locked her up -Akananooru 150


#MEMEthokai98

Situation: Thalaivan (hero) is in love with Thalaivi (Heroine). Changes in Thalaivi’s physical appearance cause doubts in her mother, she locks Thalaivi in the house. Thozhi (friend) asks Thalaivan to save her. #MEMEthokai #Karkanirka

அகநானூறு 150, குறுவழுதியார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பின்னு விட நெறித்த கூந்தலும், பொன்னென
ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்பு விடக்
கண் உருத்து எழுதரு முலையும் நோக்கி,
எல்லினை பெரிது எனப் பன் மாண் கூறிப்,
பெருந்தோள் அடைய முயங்கி நீடு நினைந்து,  
அருங்கடிப் படுத்தனள் யாயே, கடுஞ்செலல்
வாள் சுறா வழங்கும் வளை மேய் பெருந்துறைக்
கனைத்த நெய்தல் கண் போல் மாமலர்
நனைத்த செருந்திப் போது வாய் அவிழ,
மாலை மணி இதழ் கூம்பக், காலைக்  10
கள் நாறு காவியொடு தண்ணென மலரும்
கழியும் கானலும் காண்தொறும் பல புலந்து,
வாரார் கொல் எனப் பருவரும்,
தார் ஆர் மார்ப, நீ தணந்த ஞான்றே.

akanāṉūṟu 150, kuṟuvaḻutiyār, neytaṟ tiṇai – tōḻi talaivaṉiṭam coṉṉatu
piṉṉu viṭa neṟitta kūntalum, poṉṉeṉa
ākattu arumpiya cuṇaṅkum, vampu viṭak
kaṇ uruttu eḻutaru mulaiyum nōkki,
elliṉai peritu eṉap paṉ māṇ kūṟip,
peruntōḷ aṭaiya muyaṅki nīṭu niṉaintu,  
aruṅkaṭip paṭuttaṉaḷ yāyē, kaṭuñcelal
vāḷ cuṟā vaḻaṅkum vaḷai mēy peruntuṟaik
kaṉaitta neytal kaṇ pōl māmalar
naṉaitta ceruntip pōtu vāy aviḻa,
mālai maṇi itaḻ kūmpak, kālaik  10
kaḷ nāṟu kāviyoṭu taṇṇeṉa malarum
kaḻiyum kāṉalum kāṇtoṟum pala pulantu,
vārār kol eṉap paruvarum,
tār ār mārpa, nī taṇanta ñāṉṟē.

அகநானூறு 150, குறுவழுதியார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பின்னி விடாததால் சுருள்கொண்ட கூந்தலும், பொன் போன்று
முலையில் தோன்றிய அழகுத்தேமலையும், மாராப்பு (மார்புக் கச்சு) மறைக்க இயலாமல் 
கண்  முதிர்ந்து எழுகின்ற முலையும் நோக்கி
உன் ஒளி/அழகு/பெருமை பெரிது என்று பல புகழ் கூறி
பெரிய தோளை அடைய அணைத்து, நீண்ட நேரம் நினைத்து
கடுமையான காவலில் வைத்துவிட்டாள் அவளுடைய தாய்; விரைந்து செல்லும்
வாள் மூக்குடைய சுறாமீன்கள் திரிகின்ற, சங்குகள் மேயும் பெரும் துறையினையுடைய –
இதழ்கள் நிறைந்த நெய்தலின் கண் போன்ற பெரிய பூக்கள் –
அரும்புவிட்ட செருந்தியின் மொட்டுகள் வாய் திறக்கும் போது,
மாலையில் முத்துப்போன்ற இதழ்கள் மூட, காலையில்
தேன் மணக்கும் குவளை மலர்களுடன் குளிர்விட்டு மலர்கின்ற –
உப்புநீர்ப் பரப்பையும் கடற்கரைச் சோலையியும் காணும்போதெல்லாம் பல துன்பம் மேற்கொண்டு 
அவன் வரமாட்டாரோ என்று கொதிப்பில்,
மாலை சூடிய மார்பினையுடையவனே! நீ அவளைப் பிரிந்தபொழுது

Akanānūru 150, Kuruvaluthiyār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
Seeing the hair that has become curly without braiding,
gold like pale marks which has started to appear on the raising breasts,
nipples that are becoming prominent and leaving impression of the bodice,
Mother hugged her broad shoulders, praised her, and locked her up !
Whenever she sees the grooves
on the broad shores where Sword fish moving fast,
conches grazing in big shore,
dense water lily with eye like big flowers
along with serunthi flowers closes its pearl like petals in the evening
And blossoms in the morning with blue lilies with fragrant honey!
where you spent time together,
she suffers thinking “will he come?”
she is boiling from the time you
the man wearing garland on the chest departed her!

Translated by Palaniappan Vairam Sarathy

Notes:

Mother is super intelligent in figuring out that surely her daughter would have attracted some lover and locks her up.

cerunti

https://sites.google.com/site/efloraofindia/species/m—z/o/ochnaceae/ochna

Ochna obtusata DC. var. obtusata

Small Tree

Western Ghats & Eastern Ghats, Moist Deciudous Forests

Flora of Tamil Nadu, VOL. I, 1983; Matthew, 1983

Coimbatore, Dharmapuri,  Kancheepuram, Madurai, Nilgiri,   Salem, Thanjavur, Tiruchchirappalli, Tirunelveli, Thiruvallur, Viluppuram 

Serundhi, Silandhi, Panjaram

காவி¹ kāvi – கருங்குவளை – karun Kuvalai -> ரெட்


Reference:

Tamil Lexicon – University of Madras

Learn Sangam Tamil

Tamilconcordance.in

பின்னு விட நெறித்த கூந்தலும், பொன்னெ

piṉṉu viṭa neṟitta kūntalum, poṉṉeṉa

பின்னி விடாததால் சுருள்கொண்ட கூந்தலும், பொன் போன்று

Braid -remove/form -wavy – tresses, gold alike

ஆகத்து அரும்பிசுணங்கும், வம்பு விடக்

ākattu arumpiya cuṇaṅkum, vampu viṭak

முலையில் தோன்றிய அழகுத்தேமலையும், மாராப்பு (மார்புக் கச்சு) மறைக்க இயலாமல் 

body/breast – bud/raise – freckles/pale patch – bodice – appear/expose

கண் உருத்து எழுதரு முலையும் நோக்கி,

kaṇ uruttu eḻutaru mulaiyum nōkki,

கண்  முதிர்ந்து எழுகின்ற முலையும் நோக்கி

nipple – become mature  – raise – breast – see 

எல்லினை பெரிது எனப் பன் மாண் கூறிப்,

elliṉai peritu eṉap paṉ māṇ kūṟip,

உன் ஒளி/அழகு/பெருமை பெரிது என்று பல புகழ் கூறி

Splendor – big/great – saying – many – excellent/great- say,

பெருந்தோள் அடைய முயங்கி நீடு நினைந்து,  

peruntōḷ aṭaiya muyaṅki nīṭu niṉaintu,  

பெரிய தோளை அடைய அணைத்து, நீண்ட நேரம் நினைத்து

Broad – shoulders – become – embrace – future/extended – thinking

அருங்கடிப் படுத்தனள் யாயே, கடுஞ்செலல்

aruṅkaṭip paṭuttaṉaḷ yāyē, kaṭuñcelal

கடுமையான காவலில் வைத்துவிட்டாள் அவளுடைய தாய்; விரைந்து செல்லும்

Great- rebuke/restrain – kept – mother – swift – moving

வாள் சுறா வழங்கும் வளை மேய் பெருந்துறைக்

vāḷ cuṟā vaḻaṅkum vaḷai mēy peruntuṟaik

வாள் மூக்குடைய சுறாமீன்கள் திரிகின்ற, சங்குகள் மேயும் பெரும் துறையினையுடைய –

Sword fish – advance – conch – graze – big shore

கனைத்த நெய்தல் கண் போல் மாமலர்

kaṉaitta neytal kaṇ pōl māmalar

இதழ்கள் நிறைந்த நெய்தலின் கண் போன்ற பெரிய பூக்கள் –

Dense – waterliliy – eyes – alike – big flower

நனைத்த செருந்திப் போது வாய் அவிழ,

naṉaitta ceruntip pōtu vāy aviḻa,

அரும்புவிட்ட செருந்தியின் மொட்டுகள் வாய் திறக்கும் போது,

wet/moist/flower bud – ceruthi flower – bud – petals – bloom

மாலை மணி இதழ் கூம்பக், காலைக்  10

mālai maṇi itaḻ kūmpak, kālaik  10

மாலையில் முத்துப்போன்ற இதழ்கள் மூட, காலையில்

Evening – sapphire – petals – close – morning

கள் நாறு காவியொடு தண்ணென மலரும்

kaḷ nāṟu kāviyoṭu taṇṇeṉa malarum

தேன் மணக்கும் குவளை மலர்களுடன் குளிர்விட்டு மலர்கின்ற –

Honey – smelling – blue water lilly – cold – blossom

கழியும் கானலும் காண்தொறும் பல புலந்து,

kaḻiyum kāṉalum kāṇtoṟum pala pulantu,

உப்புநீர்ப் பரப்பையும் கடற்கரைச் சோலையியும் காணும்போதெல்லாம் பல துன்பம் மேற்கொண்டு 

Backwater- groove on sea side – appear – many suffering

வாரார் கொல் எனப் பருவரும்,

vārār kol eṉap paruvarum,

அவன் வரமாட்டாரோ என்று கொதிப்பில்,

Come – will he? – so – boil

தார் ஆர் மார்ப, நீ தணந்த ஞான்றே.

tār ār mārpa, nī taṇanta ñāṉṟē.

மாலை சூடிய மார்பினையுடையவனே! நீ அவளைப் பிரிந்தபொழுது

Garland – wear – chest of yours – you – departed – time

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.