#MEMEthokai87
Situation: Thalaivan (hero) is in love with Thalaivi (Heroine) and their love is rejected by Thalaivi’s parents. They elope. Thalaivi’s mother has change of heart and utters this poem. #MEMEthokai #karkanirka
ஐங்குறுநூறு 399, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும்,
எம் மனை வதுவை நன் மணம் கழிகெனச்
சொல்லின் எவனோ மற்றே, வென்வேல்
மை அற விளங்கிய கழல் அடிப்
பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே?
aiṅkuṟunūṟu 399, ōtalāntaiyār, pālait tiṇai – talaiviyiṉ tāy coṉṉatu
num maṉaic cilampu kaḻīi ayariṉum,
em maṉai vatuvai naṉ maṇam kaḻikeṉac
colliṉ evaṉō maṟṟē, veṉvēl
mai aṟa viḷaṅkiya kaḻal aṭip
poy val kāḷaiyai īṉṟa tāykkē?


ஐங்குறுநூறு 399, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
உங்கள் வீட்டில் காலின் சிலம்பைக் கழற்றும் சடங்கினை நடத்தினாலும்,
எங்கள் வீட்டில் மணப்பெண்ணின் திருமண சடங்கை நடத்தலாம் என்று
யாராவது சொன்னால் தான் என்ன? வெற்றி வேலையும்
குற்றமற விளங்கும் கழல் அணிந்த காலினையும் உடைய,
பொய்கூறுவதில் வல்லவனான அந்த காளையை பெற்ற தாயிடம்
Ainkurunūru 399, Ōthalānthaiyār, Pālai Thinai – What the heroine’s mother said
Would you tell the mother of the youth
who has bright lance,wears faultless shining warrior anklet
And capable of lying,
That
“Anklet removing [pre-wedding] ceremony may be complete in your house,
the wedding ceremony for our bride can happen in our house”
Translated by Palaniappan Vairam Sarathy
Notes:


சிலம்பு கழித்தல் – cilampu kaḻittal – Narrinai 279, Akam 315, 385
Notes from Kamil Zvelebil


–
Reference:
Tamil Lexicon – University of Madras
Learn Sangam Tamil
Tamilconcordance.in
Literary conventions in Akam Poetry – Kamil Zvelebil
நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும்,
num maṉaic cilampu kaḻīi ayariṉum,
உங்கள் வீட்டில் காலின் சிலம்பைக் கழற்றும் சடங்கினை நடத்தினாலும்,
Your – house – anklet – removal – perform
எம் மனை வதுவை நன் மணம் கழிகெனச்
em maṉai vatuvai naṉ maṇam kaḻikeṉac
எங்கள் வீட்டில் மணப்பெண்ணின் திருமணச் சடங்கை நடத்தலாம் என்று
My house – good – bride groom – good – wedding ceremony – proceed
colliṉ evaṉō maṟṟē, veṉvēl
யாராவது சொன்னால் தான் என்ன? வெற்றி வேலையும்
To Say – ! – besides/again – Bright/victorious – lance
mai aṟa viḷaṅkiya kaḻal aṭip
குற்றமற விளங்கும் கழல் அணிந்த காலினையும் உடைய,
Fault – removed – shine – warrior anklet – feet
பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே?
poy val kāḷaiyai īṉṟa tāykkē?
பொய்கூறுவதில் வல்லவனான அந்த காளையைப் பெற்ற தாயிடம்
Lie – great – youth – beget – for mother