War for Love – Paripatal 9

#MEMEthokai100

Situation: Murugan (Hero/God)has an arranged marriage with Devasena, but falls in love with Valli and marries her too. Now, Devasena and Valli are at loggerheads. #MEMEthokai #Karkanirka

பரிபாடல் 9, செவ்வேள், குன்றம்பூதனார்
ஊழ் ஆரத்து தேய் கரை நூக்கி, புனல் தந்த
காழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பின்,
கேழ் ஆரம் பொற்ப வருவானைத் தொழாஅ,
வாழிய மாயா! நின் தவறு இலை; எம் போலும் 30
கேழ் இலார் மாண் நலம் உண்கோ திரு உடையார்
மென்தோள் மேல் அல்கி நல்கலம் இன்று?
வை எயிற்று எய்யா மகளிர் திறம் இனிப்
பெய்ய உழக்கும் மழைக் கா; மற்று ஐய!
கரையா வெந்நோக்கத்தால் கை சுட்டி, பெண்டின் 35
இகலின் இகந்தாளை, அவ் வேள் தலைக் கண்ணி
திருந்து அடி தோயத் திறை கொடுப்பானை,
வருந்தல் என அவற்கு மார்பு அளிப்பாளை,
குறுகல் என்று ஒள்ளிழை கோதை கோலாக
இறுக இறுக யாத்துப் புடைப்ப;    40
ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல,
இருவர் வான் கிளி ஏற்பில் மழலை,
செறி கொண்டை மேல் வண்டு சென்று பாய்ந்தன்றே,
வெறி கொண்டான் குன்றத்து வண்டு.
தார் தார் பிணக்குவார்; கண்ணி ஓச்சித் தடுமாறுவார்   45
மார்பு அணி கொங்கை வார் மத்திகையாப் புடைப்பார்
கோதை வரிப் பந்து கொண்டு எறிவார்
பேதை மட நோக்கம் பிறிதாக, ஊத
நுடங்கு நொசி நுசுப்பார், நூழில் தலைக்கொள்ள
கயம்படு கமழ் சென்னிக் களிற்று இயல் கைம்மாறுவார்    50
வயம்படு பரிப் புரவி மார்க்கம் வருவார்;
தேர் அணி அணி கயிறு தெரிபு வருவார்;
வரி சிலை வளைய மார்பு உற வாங்குவார்;
வாளி வாளிகள் நிலைபெற மறலுவார்;
தோள் வளை ஆழி சுழற்றுவார்; 55
மென் சீர் மயில் இயலவர்
வாள் மிகு வய மொய்ம்பின்
வரை அகலத்தவனை, வானவன் மகள்
மாண் எழில் மலர் உண்கண்
மட மொழியவர் உடன் சுற்றி, 60
கடி சுனையுள் குளித்து ஆடுநரும்,
அறை அணிந்த அருஞ் சுனையான்
நற உண் வண்டாய் நரம்பு உளர்நரும்,
சிகை மயிலாய்த் தோகை விரித்து ஆடுநரும்,
கோகுலமாய்க் கூவுநரும், 65
ஆகுலம் ஆகுநரும்
குறிஞ்சிக் குன்றவர் மறம் கெழு வள்ளி தமர்
வித்தகத் தும்பை விளைத்தலான், வென் வேலாற்கு
ஒத்தன்று தண் பரங்குன்று.

paripāṭal 9, cevvēḷ, kuṉṟampūtaṉār
ūḻ ārattu tēy karai nūkki, puṉal tanta
kāḻ ārattu am pukai cuṟṟiya tār mārpiṉ,
kēḻ āram poṟpa varuvāṉait toḻāa,
vāḻiya māyā! niṉ tavaṟu ilai; em pōlum 30
kēḻ ilār māṇ nalam uṇkō tiru uṭaiyār
meṉtōḷ mēl alki nalkalam iṉṟu?
vai eyiṟṟu eyyā makaḷir tiṟam iṉip
peyya uḻakkum maḻaik kā; maṟṟu aiya!
karaiyā vennōkkattāl kai cuṭṭi, peṇṭiṉ 35
ikaliṉ ikantāḷai, av vēḷ talaik kaṇṇi
tiruntu aṭi tōyat tiṟai koṭuppāṉai,
varuntal eṉa avaṟku mārpu aḷippāḷai,
kuṟukal eṉṟu oḷḷiḻai kōtai kōlāka
iṟuka iṟuka yāttup puṭaippa;    40
oruvar mayil oruvar oṇ mayilōṭu ēla,
iruvar vāṉ kiḷi ēṟpil maḻalai,
ceṟi koṇṭai mēl vaṇṭu ceṉṟu pāyntaṉṟē,
veṟi koṇṭāṉ kuṉṟattu vaṇṭu.
tār tār piṇakkuvār; kaṇṇi ōccit taṭumāṟuvār   45
mārpu aṇi koṅkai vār mattikaiyāp puṭaippār
kōtai varip pantu koṇṭu eṟivār
pētai maṭa nōkkam piṟitāka, ūta
nuṭaṅku noci nucuppār, nūḻil talaikkoḷḷa
kayampaṭu kamaḻ ceṉṉik kaḷiṟṟu iyal kaimmāṟuvār    50
vayampaṭu parip puravi mārkkam varuvār;
tēr aṇi aṇi kayiṟu teripu varuvār;
vari cilai vaḷaiya mārpu uṟa vāṅkuvār;
vāḷi vāḷikaḷ nilaipeṟa maṟaluvār;
tōḷ vaḷai āḻi cuḻaṟṟuvār; 55
meṉ cīr mayil iyalavar
vāḷ miku vaya moympiṉ
varai akalattavaṉai, vāṉavaṉ makaḷ
māṇ eḻil malar uṇkaṇ
maṭa moḻiyavar uṭaṉ cuṟṟi, 60
kaṭi cuṉaiyuḷ kuḷittu āṭunarum,
aṟai aṇinta aruñ cuṉaiyāṉ
naṟa uṇ vaṇṭāy narampu uḷarnarum,
cikai mayilāyt tōkai virittu āṭunarum,
kōkulamāyk kūvunarum, 65
ākulam ākunarum
kuṟiñcik kuṉṟavar maṟam keḻu vaḷḷi tamar
vittakat tumpai viḷaittalāṉ, veṉ vēlāṟku
ottaṉṟu taṇ paraṅkuṉṟu.

பரிபாடல் 9, செவ்வேள், குன்றம்பூதனார்
முதிர்ந்த சந்தன மரங்களை  உள்ளக் கரையைக் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து வெள்ளம் கொண்டுவந்த
வயிரம் பாய்ந்த சந்தனக் கட்டையின் அழகிய புகை சூழ்ந்து, மாலை அணிந்த மார்பில்
ஒளிரும் ஆரத்தை அழகுசெய்ய [வெள்ளத்தில் இருந்துக் காப்பாற்ற] வருபவனைத் (முருகனை) தொழுது,
(தேவசேனை), “வாழ்க, மாயவனே! உன் தவறு இல்லை, எம்மைப் போன்று
[பிரிவால்] ஒளி இழந்தவர் உனது பெரும் நலத்தை அனுபவிக்க இயலுமோ?, அழகு/அருள் உடையோர்
மென்மையான தோளின்மேல் எழுந்தருளி அவர்க்கு அருள்செய்வாய் அல்லவா,
கூர்மையான பற்களையுடைய, உன் தன்மையை புரியாத மகளிரின் (நிலை), இனி
மழை பெய்ய வேண்டி வருந்தும் சோலையைப் போன்றது, இல்லையா ஐயனே!” என்று
கரையாத வெறிக்கொண்ட பார்வையுடன் கையால் சுட்டி கூறி, பெண்ணால் (வள்ளி) 
வந்த ஊடலை எண்ணிப் பகைக்கொண்டாள் (தேவசேனை), அந்த வேள் கொண்டவன் தன் தலைமாலை
(தேவசேனையின்) திருத்தமான அடியில் படும்படியாக அவளுக்குக் கப்பம் கொடுக்க,
“வருந்தாதே” என்று கூறி அவனுக்குத் தன் மார்பினைக் (தேவசேனை) கொடுக்க,
“நிறுத்து” என்று ஒளிரும் அணிகலன் அணிந்த வள்ளி, தன் மாலையை  கோலாகக் கொண்டு
அவனை இறுக்கமாகக் கட்டி, அடிக்க, 
ஒருவரின் மயில் மற்றொருவரின் மயிலோடு போர்தொடங்க,
இருவருடைய வான் கிளிகளும் மழலைக் குரலால் திட்டிக்கொள்ள,
தேவசேனையின் செறிவான கொண்டையின்மேல் இருந்த வண்டின்மேல் பாய்ந்தது
வெறியாட்டத்தை ஏற்கும் முருகனின் திருப்பரங்குன்றத்தில் வசிக்கும்வள்ளியின் வண்டு;
மாலையோடு மாலையை பின்னும் படி வீசிவர், தலைமாலையை உயர்த்தி எரிய தடுமாறுவார்,
மார்பில் அணியும் தம் முலையின் கச்சினையே சாட்டையாகக் கொண்டு அடித்துக்கொள்வார்,
தமது மாலைகளை வரியுடைப் பந்துகளாக ஒருவர்மேல் ஒருவர் எறிவார்,
பேதைப் பெண்களின் மென்மையான பார்வை பகையாக மாற, ஊதினால்
வளையும் மெல்லிய இடையுடையோர் போர் தொடுக்க,
(மத) நீர் படர்ந்த தலையுடைய யானைகளைப் போலக்  கையை வளைத்துப் போரிடுவார்,
வெற்றிக்குதவும் வேகத்தையுடைய குதிரைகளின் நடைக்  கொண்டுவருவர்,
தேருக்கு அணியாகும் அழகிய கயிற்றை இழுப்பதைப் போலப் (சடைகளைப் இழுத்துப்) போரிடுவார்,
தொடுக்கப்பட்ட வில்லினை வளைப்பது போல மார்பில் இறுக்கி (எதிரிகளை) வளைப்பர்,
(விழி) அம்புகளுக்கு எதிர் அம்பு பாய, நிலைத்து நிற்க போரிடுவர்,
தோள்வளைகளைச் சக்கரம் சுழற்றுவார்,
மென்மையான மயிலின் சாயலைக் கொண்டவர் 
ஒளி மிகு வலிமையான தோள்களையும்
மலை போன்ற மார்பினையுடையவன்  (முருகன்),  வானவன் (இந்திரன்) மகள் (தேவசேனையின்)
மாண் எழில் மலர் போன்ற மையிட்ட கண்களையும்
மட மொழி பேசும் தோழியர் உடன் சுற்றி
[வள்ளிக்கு அஞ்சி] காவலுடைய சுனையில் குளித்து ஆடுவோரும்,
பாறைகளை அணிகலனாகக் கொண்ட அரிய சுனையில்
தேனை உண்ணும் வண்டுகளாக யாழினை இசைப்போரும்,
மயிற்கொண்டைக் கொண்ட  மயிலின் தோகைபோல் [கூந்தலை]  விரித்து ஆடுபவர்களும்,
குயில் போலக் கூவுபவரும்,
துன்பங்களை தங்குவோராக நிற்க,
குறிஞ்சி நிலத்துக் குறவரின் வீர  மகளாகிய வள்ளியின் தோழிமார்
திறமையோடு போரிட்டு தும்பை அணியும் வண்ணம் வெற்றி பெற்று நின்றனர், வெற்றி  வேலுடையவனுக்கு [முருகனுக்கு]
பொருத்தமானக் குளிர்ந்த திருப்பரங்குன்றம் போல;

Paripatal 9, Murukan, Poet: Kundrampoothanār
As the shores with long standing sandals wood wear away due to the floods, Murugan who adorns garland on his chest came to save the beauty of Devasenai who adorns lustrous pearl necklace as smoke of the hard sandalwood circulates.
“Long live the one of who is capable of illusion! It is not your mistake, would it be possible for women like me who have lost their lustre cannot enjoy your grace?
You seem to pour your grace on beautiful women with soft shoulders, while women with sharp teeth and who do not understand what you are capable of, suffer waiting for you like the grooves waiting for rain! Isn’t it my lord?”, Devasanai said with her eyes not losing her fury, as she was in a war path with Valli who brought her sorrow. the man with lance (Murugan) immediately payed his tribute by bowing his head in such a way that his head wreath touched her perfect feet.
“Don’t worry”, she said and offered him her chest for solace.
“Cease, move no more” , said Valli who adorned bright ornaments. She clasped Murugan tighter and tighter, took her garland and used it as a rod to beat him!
(the war began)
Valli’s peacock had started a war with Devasena’s peacock
Both of their celestial parrots went into a word war with their child’s voice
Bee on the thick headknot of Devasena was attacked by bees of Valli’s Thiruparankundram where Muruga accepts Veriyattam (fury dance)
Their garland intertwined a they threw at each other,
Their breast cloth was lashed as their whip at each other,
Their garlands were made into a ball and thrown at each other,
Naiveness deserted the Simple minded girls
With waist which would bend if blown
And carnage ensured
As they took the nature of the male elephant
Moist with rut spread on its soft head.
They charged at each other like the swift victorious horses,
And pulled each others hair like pulling ornamental bridle that adorns the chariot,
They charged rapidly like trotting victorious horses.
They placed tightly strung bow on their chest and
Shot arrows over and over again
to gain victory in their fight!
They whirled their armlets as discuss
Soft natured of the girls who were like peacock
Now followed Indra’s daughter Devasena,
the wife of the Muruga who had strong shoulders
like that of a wide mountain.
Naive girls with excellent eyes like beautiful flowers
Afraid of Valli, some played in protected mountain springs,
Some played music near the springs adorning rocks
like the buzzing of the honey bees ,
Some danced like the crested peacocks ,
Some sang like the Koels
Bearing their sorrows,
As friends of Lustrous Valli,
the brave mountain girl
Adorned the Tumbai (sign of victory)
And appeared like the Thriuparankundram
Of the lord with white lance!

Translated by Palaniappan Vairam Sarathy

Notes:
Valli was married to Murugan in Thirupparankundram which is one of the 6 sacred adobes of Murugan

Reference:

Tamil Lexicon – University of Madras

Learn Sangam Tamil

Tamilconcordance.in

ஊழ் ஆரத்து தேய் கரை நூக்கி, புனல் தந்த
ūḻ ārattu tēy karai nūkki, puṉal tanta
முதிர்ந்த சந்தன மரங்களை  உள்ளக் கரையைக் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து வெள்ளம் கொண்டுவந்த
long standing/old -Sandalwood trees – to wear away -shore – push/breakdown – river – give

காழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பின்,
kāḻ ārattu am pukai cuṟṟiya tār mārpiṉ,
வயிரம் பாய்ந்த சந்தனக் கட்டையின் அழகிய புகை சூழ்ந்து, மாலை அணிந்த மார்பில்
hard/firm – Sandalwood trees – beautiful- smoke – circulate – garland – chest

கேழ் ஆரம் பொற்ப வருவானைத் தொழாஅ,
kēḻ āram poṟpa varuvāṉait toḻāa,
ஒளிரும் ஆரத்தை அழகுசெய்ய [வெள்ளத்தில் இருந்துக் காப்பாற்ற] வருபவனைத் (முருகனை) தொழுது,
lustre/brilliance –  Necklace of pearls or gems- Beautifully/elegantly – one who comes – pray

வாழிய மாயா! நின் தவறு இலை; எம் போலும் 30
vāḻiya māyā! niṉ tavaṟu ilai; em pōlum 30
(தேவசேனை), “வாழ்க, மாயவனே! உன் தவறு இல்லை, எம்மைப் போன்று
Long live – one who is capable of illusion! – yours – mistake – not – me –  alike

கேழ் இலார் மாண் நலம் உண்கோ திரு உடையார்
kēḻ ilār māṇ nalam uṇkō tiru uṭaiyār
[பிரிவால்] ஒளி இழந்தவர் உனது பெரும் நலத்தை அனுபவிக்க இயலுமோ?, அழகு/அருள் உடையோர்
lustre/brilliance –  those who don’t have – excellence – beauty/virtue – experience/enjoy – beauty – who have

மென்தோள் மேல் அல்கி நல்கலம் இன்று?
meṉtōḷ mēl alki nalkalam iṉṟu?
மென்மையான தோளின்மேல் எழுந்தருளி அவர்க்கு அருள்செய்வாய் அல்லவா,
Soft shoulders – over the top – arrive/stay – good – container/ boat [fill with goodness] – dont you

வை எயிற்று எய்யா மகளிர் திறம் இனிப்
vai eyiṟṟu eyyā makaḷir tiṟam iṉip
கூர்மையான பற்களையுடைய, உன் தன்மையை புரியாத மகளிரின் (நிலை), இனி
Sharp – teeth – not understand – girls – nature – from now

பெய்ய உழக்கும் மழைக் கா; மற்று ஐய!
peyya uḻakkum maḻaik kā; maṟṟu aiya!
மழை பெய்ய வேண்டி வருந்தும் சோலையைப் போன்றது, இல்லையா ஐயனே!” என்று
To Pour – suffer – rain- groove – besides – lord

கரையா வெந்நோக்கத்தால் கை சுட்டி, பெண்டின் 35
karaiyā vennōkkattāl kai cuṭṭi, peṇṭiṉ 35
கரையாத வெறிக்கொண்ட பார்வையுடன் கையால் சுட்டி கூறி, பெண்ணால் (வள்ளி) 
Not reduced – hot/furious look she gave – hands point out – women (valli)

இகலின் இகந்தாளை, அவ் வேள் தலைக் கண்ணி
ikaliṉ ikantāḷai, av vēḷ talaik kaṇṇi
வந்த ஊடலை எண்ணிப் பகைக்கொண்டாள் (தேவசேனை), அந்த வேள் கொண்டவன் தன் தலைமாலை
Caused strife between lovers (murugan and teivanai) – creating enmity – He- with lance (murugan) – Wreath worn on the head 

திருந்து அடி தோயத் திறை கொடுப்பானை,
tiruntu aṭi tōyat tiṟai koṭuppāṉai,
(தேவசேனையின்) திருத்தமான அடியில் படும்படியாக அவளுக்குக் கப்பம் கொடுக்க,
precise/orderly – foot – come in contact – tribute – he gave 

வருந்தல் என அவற்கு மார்பு அளிப்பாளை,
varuntal eṉa avaṟku mārpu aḷippāḷai,
“வருந்தாதே” என்று கூறி அவனுக்குத் தன் மார்பினைக் (தேவசேனை) கொடுக்க,
Suffer not – Saying so -to him -her chest -she offered

குறுகல் என்று ஒள்ளிழை கோதை கோலாக
kuṟukal eṉṟu oḷḷiḻai kōtai kōlāka
“நிறுத்து” என்று ஒளிரும் அணிகலன் அணிந்த வள்ளி, தன் மாலையை  கோலாகக் கொண்டு
Abandon -saying so – one wearing bright jewel – garland – as stick

இறுக இறுக யாத்துப் புடைப்ப;    40
iṟuka iṟuka yāttup puṭaippa;    40
அவனை இறுக்கமாகக் கட்டி, அடிக்க, 
Tighten- tighten – tie – beat

ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல,
oruvar mayil oruvar oṇ mayilōṭu ēla,
ஒருவரின் மயில் மற்றொருவரின் மயிலோடு போர்தொடங்க,
One of their- peacock – other’s – bright – peacock – battle

இருவர் வான் கிளி ஏற்பில் மழலை,
iruvar vāṉ kiḷi ēṟpil maḻalai,
இருவருடைய வான் கிளிகளும் மழலைக் குரலால் திட்டிக்கொள்ள,
Both of their – celestial – parrots – not agree – prattle

செறி கொண்டை மேல் வண்டு சென்று பாய்ந்தன்றே,
ceṟi koṇṭai mēl vaṇṭu ceṉṟu pāyntaṉṟē,
தேவசேனையின் செறிவான கொண்டையின்மேல் இருந்த வண்டின்மேல் பாய்ந்தது
Thick – Hair knot – top – bee – go – pounce

வெறி கொண்டான் குன்றத்து வண்டு.
veṟi koṇṭāṉ kuṉṟattu vaṇṭu.
வெறியாட்டத்தை ஏற்கும் முருகனின் திருப்பரங்குன்றத்தில் வசிக்கும்வள்ளியின் வண்டு;
Fury dance- accept man (murugan’s) – Thiruparankundram (valli’s) – Bee

தார் தார் பிணக்குவார்; கண்ணி ஓச்சித் தடுமாறுவார்   45
tār tār piṇakkuvār; kaṇṇi ōccit taṭumāṟuvār   45
மாலையோடு மாலையை பின்னும் படி வீசிவர், தலைமாலையை உயர்த்தி எரிய தடுமாறுவார்,
Garland – garland – to make it interwine – garland on head- throw – struggle/shake/tremble

மார்பு அணி கொங்கை வார் மத்திகையாப் புடைப்பார்
mārpu aṇi koṅkai vār mattikaiyāp puṭaippār
மார்பில் அணியும் தம் முலையின் கச்சினையே சாட்டையாகக் கொண்டு அடித்துக்கொள்வார்,
Chest – wear – Brest – long – whip -Strike

கோதை வரிப் பந்து கொண்டு எறிவார்
kōtai varip pantu koṇṭu eṟivār
தமது மாலைகளை வரியுடைப் பந்துகளாக ஒருவர்மேல் ஒருவர் எறிவார்,
Garland – stripped – ball – take – through

பேதை மட நோக்கம் பிறிதாக, ஊத
pētai maṭa nōkkam piṟitāka, ūta
பேதைப் பெண்களின் மென்மையான பார்வை பகையாக மாற, ஊதினால்
Simple minded Girl – naive/ignorant – vision/sight – split/separate –  breath/blow

நுடங்கு நொசி நுசுப்பார், நூழில் தலைக்கொள்ள
nuṭaṅku noci nucuppār, nūḻil talaikkoḷḷa
வளையும் மெல்லிய இடையுடையோர் போர் தொடுக்க,
shake/wave/bend – thin – waist of women – carnage – take it 

கயம்படு கமழ் சென்னிக் களிற்று இயல் கைம்மாறுவார்    50
kayampaṭu kamaḻ ceṉṉik kaḷiṟṟu iyal kaimmāṟuvār    50
(மத) நீர் படர்ந்த தலையுடைய யானைகளைப் போலக்  கையை வளைத்துப் போரிடுவார்,
soft – spread – head – male  elephant – nature- partake/assurp 

வயம்படு பரிப் புரவி மார்க்கம் வருவார்;
vayampaṭu parip puravi mārkkam varuvār;
வெற்றிக்குதவும் வேகத்தையுடைய குதிரைகளின் நடைக்  கொண்டுவருவர்,
Victorious – fast /swift – horse – path – come

தேர் அணி அணி கயிறு தெரிபு வருவார்;
tēr aṇi aṇi kayiṟu teripu varuvār;
தேருக்கு அணியாகும் அழகிய கயிற்றை இழுப்பதைப் போலப் (சடைகளைப் இழுத்துப்) போரிடுவார்,
Charriot – adorn – ornament/beauty – rope – appear/know – come

வரி சிலை வளைய மார்பு உற வாங்குவார்;
vari cilai vaḷaiya mārpu uṟa vāṅkuvār;
தொடுக்கப்பட்ட வில்லினை வளைப்பது போல மார்பில் இறுக்கி (எதிரிகளை) வளைப்பர்,
String tied – bow – bend – chest – near – shoot/string/pull

வாளி வாளிகள் நிலைபெற மறலுவார்;
vāḷi vāḷikaḷ nilaipeṟa maṟaluvār;
(விழி) அம்புகளுக்கு எதிர் அம்பு பாய, நிலைத்து நிற்க போரிடுவர்,
Arrow – arrows – permanence/stand to get – fight

தோள் வளை ஆழி சுழற்றுவார்; 55
tōḷ vaḷai āḻi cuḻaṟṟuvār; 55
தோள்வளைகளைச் சக்கரம் சுழற்றுவார்,
Fore arm – armlet – like discuss/weapon – they will whirl 

மென் சீர் மயில் இயலவர்
meṉ cīr mayil iyalavar
மென்மையான மயிலின் சாயலைக் கொண்டவர் 
Soft – fine  – peacock – nature 

வாள் மிகு வய மொய்ம்பின்
vāḷ miku vaya moympiṉ
ஒளி மிகு வலிமையான தோள்களையும்
Sword/bright   – abundant – strong – shoulder

வரை அகலத்தவனை, வானவன் மகள்
varai akalattavaṉai, vāṉavaṉ makaḷ
மலை போன்ற மார்பினையுடையவன்  (முருகன்),  வானவன் (இந்திரன்) மகள் (தேவசேனையின்)
Mountain – wide one  – celestial man/Indira – daughter

மாண் எழில் மலர் உண்கண்
māṇ eḻil malar uṇkaṇ
மாண் எழில் மலர் போன்ற மையிட்ட கண்களையும்
Excellent – beauty – flower – khol rimmed eyes

மட மொழியவர் உடன் சுற்றி, 60
maṭa moḻiyavar uṭaṉ cuṟṟi, 60
மட மொழி பேசும் தோழியர் உடன் சுற்றி
Igorant/naive – speakers  –  along – roam/follow 

கடி சுனையுள் குளித்து ஆடுநரும்,
kaṭi cuṉaiyuḷ kuḷittu āṭunarum,
[வள்ளிக்கு அஞ்சி] காவலுடைய சுனையில் குளித்து ஆடுவோரும்,
protected/excluded – mountain springs – bath – playing girls

அறை அணிந்த அருஞ் சுனையான்
aṟai aṇinta aruñ cuṉaiyāṉ
பாறைகளை அணிகலனாகக் கொண்ட அரிய சுனையில்
rock – wear – rare – mountainspring one

நற உண் வண்டாய் நரம்பு உளர்நரும்,
naṟa uṇ vaṇṭāy narampu uḷarnarum,
தேனை உண்ணும் வண்டுகளாக யாழினை இசைப்போரும்,
Honey – drink – bee – veins/string – instrument players

சிகை மயிலாய்த் தோகை விரித்து ஆடுநரும்,
cikai mayilāyt tōkai virittu āṭunarum,
மயிற்கொண்டைக் கொண்ட  மயிலின் தோகைபோல் [கூந்தலை]  விரித்து ஆடுபவர்களும்,
Crest on head  – peacock – feather – spread – dance

கோகுலமாய்க் கூவுநரும், 65
kōkulamāyk kūvunarum, 65
குயில் போலக் கூவுபவரும்,
Koel – sound/call/hoot  – those who call out

ஆகுலம் ஆகுநரும்
ākulam ākunarum
துன்பங்களை தங்குவோராக நிற்க,
confusion/sorrow – some became

குறிஞ்சிக் குன்றவர் மறம் கெழு வள்ளி தமர்
kuṟiñcik kuṉṟavar maṟam keḻu vaḷḷi tamar
குறிஞ்சி நிலத்துக் குறவரின் வீர  மகளாகிய வள்ளியின் தோழிமார்
Kurinchi – mountain people – brave – lusturous – Valli -friend/relative

வித்தகத் தும்பை விளைத்தலான், வென் வேலாற்கு
vittakat tumpai viḷaittalāṉ, veṉ vēlāṟku
திறமையோடு போரிட்டு தும்பை அணியும் வண்ணம் வெற்றி பெற்று நின்றனர், வெற்றி  வேலுடையவனுக்கு [முருகனுக்கு]
accomplishment – Tumbai? – blossomed – white – man with lance

ஒத்தன்று தண் பரங்குன்று.
ottaṉṟu taṇ paraṅkuṉṟu.
பொருத்தமானக் குளிர்ந்த திருப்பரங்குன்றம் போல;
Alike – cool – Tiruparakudram

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.