My suffering is like the cocks fighting – Kurunthokai305

#MEMEthokai97

Situation: Thalaivan (hero) is in love with Thalaivi (Heroine). He was away from her to earn wealth for marriage or afraid of gossips. Thalaivi utters this poem to reveal her frustration. #MEMEthokai #Karkanirka

குறுந்தொகை 305, குப்பைக்கோழியார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கண் தர வந்த காம ஒள் எரி
என்பு உற நலியினும் அவரொடு பேணிச்
சென்று நாம் முயங்கற்கு அருங்காட்சியமே
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே,
உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார்,  5
குப்பைக் கோழித் தனிப்போர் போல,
விளி வாங்கு விளியின் அல்லது
களைவோர் இலை யாம் உற்ற நோயே.

kuṟuntokai 305, kuppaikkōḻiyār, marutat tiṇai – talaivi tōḻiyiṭam coṉṉatu
kaṇ tara vanta kāma oḷ eri
eṉpu uṟa naliyiṉum avaroṭu pēṇic
ceṉṟu nām muyaṅkaṟku aruṅkāṭciyamē
vantu añar kaḷaitalai avar āṟṟalarē,
uyttaṉar viṭāar pirittu iṭai kaḷaiyār,  5
kuppaik kōḻit taṉippōr pōla,
viḷi vāṅku viḷiyiṉ allatu
kaḷaivōr ilai yām uṟṟa nōyē.

குறுந்தொகை 305, குப்பைக்கோழியார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கண்கள் தந்ததனால் வந்த காமம் எனும் சுடர்விட்டு எரியும் நெருப்பு
என் எலும்பை வருத்துகின்றது எனினும், அவரை விரும்பிச்
சென்று நாம் தழுவிக்கொள்ள எண்ணுவது அரிய காட்சியே!
இங்கு வந்து என் துன்பத்தைத் நீக்க  அவர் முயலவில்லை!
நடத்துபவர் இல்லாமல், பிரித்துவிடுவும் ஆள்  இல்லாமல்,
குப்பைக்கோழிகள் தனியாகப் போர்புரிவதுப் போல
என்னை வாட்டும்வருத்தம் தாமாக அழிவதைத் தவிர
தீர்ப்பார் யாரும் இல்லை நான் உற்ற நோய்க்கு!

Kurunthokai 305, Kuppaikōliyār, Marutham Thinai – What the heroine said to her friend
Bright flame of desire which originated from my eyes is now piercing my bones and causing agony!
It is difficult for me to go and embrace him now!
He has not come to dispel my distress,
My suffering is like the cocks fighting one another
near the rubbish, not separated by the onlookers,
unless the distress ends on its own,
there is no one else dispel the agony!

Translated by Palaniappan Vairam Sarathy

notes:
This poem is often quoted to cite Cock fighting as sport in Tamil Culture

—-
Reference:

Tamil Lexicon – University of Madras

Learn Sangam Tamil

Tamilconcordance.in

கண் தர வந்த காம ஒள் எரி

kaṇ tara vanta kāma oḷ eri

கண்கள் தந்ததனால் வந்த காமம் எனும் சுடர்விட்டு எரியும் நெருப்பு

Eye – gave – come – love – bright – flame

என்பு உற நலியினும் அவரொடு பேணிச்

eṉpu uṟa naliyiṉum avaroṭu pēṇic

என் எலும்பை வருத்துகின்றது எனினும், அவரை விரும்பிச்

Bone – pinch/press – suffer- with him – cherish/protect/desire

சென்று நாம் முயங்கற்கு அருங்காட்சியமே

ceṉṟu nām muyaṅkaṟku aruṅkāṭciyamē

சென்று நாம் தழுவிக்கொள்ள எண்ணுவது அரிய காட்சியே!

Go – I/us – embrace/couplate – rare sight

வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே,

vantu añar kaḷaitalai avar āṟṟalarē,

இங்கு வந்து என் துன்பத்தைத் நீக்க  அவர் முயலவில்லை!

Come – distress/disease – expel – he – not perform

உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார்,  5

uyttaṉar viṭāar pirittu iṭai kaḷaiyār,  5

நடத்துபவர் இல்லாமல், பிரித்துவிடுவும் ஆள்  இல்லாமல்,

People who guide/enjoy – not remove -separate – trouble/gap –   not remove

குப்பைக் கோழித் தனிப்போர் போல,

kuppaik kōḻit taṉippōr pōla,

குப்பைக்கோழிகள் தனியாகப் போர்புரிவதுப் போல

rubbish/trash – cock/hen – lone war/one on one – alike

விளி வாங்கு விளியின் அல்லது

viḷi vāṅku viḷiyiṉ allatu

என்னை வாட்டும்வருத்தம் தாமாக அழிவதைத் தவிர

ruin/die – strike/hit – ruin/die – if not

களைவோர் இலை யாம் உற்ற நோயே.

kaḷaivōr ilai yām uṟṟa nōyē.

தீர்ப்பார் யாரும் இல்லை நான் உற்ற நோய்க்கு!

People to dispel – not – I – suffer – disease

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.