#MEMEthokai70
Situation: Thalaivan (hero) is in love with Thalaivi (Heroine).Thalaivi is not able to meet Thalaivan in their meeting place as Thozhi is with her family. Thozhi (Thalaivi’s friend) utters this poem. #MEMEthokai #karkanirka
குறுந்தொகை 392, தும்பிசேர் கீரனார், குறிஞ்சித் திணை – தோழி தும்பியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அம்ம வாழியோ, அணிச் சிறைத் தும்பி!
நன்மொழிக்கு அச்சமில்லை! அவர் நாட்டு
அண்ணல் நெடுவரைச் சேறி ஆயின்,
கடமை மிடைந்த துடவை அம் சிறு தினைத்
துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை 5
தமரின் தீராள் என்மோ, அரசர்
நிரை செலல் நுண் தோல் போலப்
பிரசந்தூங்கு மலை கிழவோற்கே.
kuṟuntokai 392, tumpicēr kīraṉār, kuṟiñcit tiṇai – tōḻi tumpiyiṭam coṉṉatu, ciṟaippuṟattāṉāka irunta talaivaṉ kēṭkumpaṭi
amma vāḻiyō, aṇic ciṟait tumpi!
naṉmoḻikku accamillai! avar nāṭṭu
aṇṇal neṭuvaraic cēṟi āyiṉ,
kaṭamai miṭainta tuṭavai am ciṟu tiṉait
tuḷar eṟi nuṇ tukaḷ kaḷaiñar taṅkai 5
tamariṉ tīrāḷ eṉmō, aracar
nirai celal nuṇ tōl pōlap
piracantūṅku malai kiḻavōṟkē.


குறுந்தொகை 392, தும்பிசேர் கீரனார், குறிஞ்சித் திணை – தோழி தும்பியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
வாழ்க! அணி அணியாக சிறகுகளைக் கொண்ட தும்பியே!
நன்மொழி சொல்வதற்கு அச்சம் வேண்டாம்; தலைவன் நாட்டிலுள்ள
உயர்ந்த மலைக்குச் செல்வாய் ஆயின்,
மான்கள் கூட்டமாக இருக்கும் சோலையிலுள்ள அழகிய சிறுதினையில்
களை எடுப்பதால் எழுந்த நுண்ணிய புழுதி படிந்த களையெடுப்போரின் தங்கை
தம் உறவினர் விட்டு இன்னும் விலகவில்லை என்று சொல்! அரசர்களின்
வரிசையாகச் செல்லும் நுண்மையான தோல் கேடயதைப் போல
தேன்கூடுகள் தொங்கும் மலையைச் சேர்ந்த தலைவனுக்கு!


Kurunthokai 392, Thumpisēr Keeranār, Kurinji Thinai – What the heroine’s friend said to the dragonfly, as the hero listened nearby
Long live, oh dragonfly with beautiful wings!
Do not fear to say good words!
If you reach the loft tall mountains of my friend’s lover,
tell the man of mountain country where
rows of honeycomb hanging from the tree looks like the king’s finely crafted leather shield,
That younger sister
of the people who got dirty removing weeds in the millet fields where Sambur deers crowd,
cannot leave her relatives!
Translated by Palaniappan Vairam Sarathy
notes:
தும்பி tumpi – 1. Elephant; யானை. (பிங்.) 2. [K. Tu. tumbi, M. tumpi.] Bee; 3. Male bee; ஆண்வண்டு. (திவா.) 4. Dragon-fly; ஒருவகைக் கருவண்டு.
கடமை³ kaṭamai , n. < கடம் + ஆ. [K. kaḍave, M. kaḍamāṉ, Tu. kaḍama.] An elk; ஒருவகை மரை
மரை¹ marai , n. 1. [K. mare.] Sambur, Indian elk; மான்வகை. 2. Bison; wild cow. See கவயம்
—-
Reference:
Tamil Lexicon – University of Madras
Learn Sangam Tamil
Tamilconcordance.in
—
அம்ம வாழியோ, அணிச் சிறைத் தும்பி!
amma vāḻiyō, aṇic ciṟait tumpi!
வாழ்க! அணி அணியாக சிறகுகளைக் கொண்ட தும்பியே!
Long live, beautiful/ornamental – wings – dragonfly/bee
நன்மொழிக்கு அச்சமில்லை! அவர் நாட்டு
naṉmoḻikku accamillai! avar nāṭṭu
நன்மொழி சொல்வதற்கு அச்சம் வேண்டாம்; தலைவன் நாட்டிலுள்ள
Good words – not fear – his – country
aṇṇal neṭuvaraic cēṟi āyiṉ,
உயர்ந்த மலைக்குச் செல்வாய் ஆயின்,
Respected ones/lord’s/lofty – tall – mountains – reach – if you
கடமை மிடைந்த துடவை அம் சிறு தினைத்
kaṭamai miṭainta tuṭavai am ciṟu tiṉait
மான்கள் கூட்டமாக இருக்கும் சோலையிலுள்ள அழகிய சிறுதினையில்
Sambur deer – crowded – groove/fields – beautiful – italian millet
துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை 5
tuḷar eṟi nuṇ tukaḷ kaḷaiñar taṅkai 5
களை எடுப்பதால் எழுந்த நுண்ணிய புழுதி படிந்த களையெடுப்போரின் தங்கை
Weed – destroy/hack – fine – dust – weed removers – young sister
tamariṉ tīrāḷ eṉmō, aracar
தம் உறவினர் விட்டு இன்னும் விலகவில்லை என்று சொல்! அரசர்களின்
Relatives – not leave – say/tell – kings
nirai celal nuṇ tōl pōlap
வரிசையாகச் செல்லும் நுண்மையான தோல் கேடயதைப் போல
Arranged in order – hang – fine craftsmanship – leather shield – alike
பிரசந்தூங்கு மலைகிழவோர்க்கே.
piracantūṅku malai kiḻavōṟkē.
தேன்கூடுகள் தொங்கும் மலையைச் சேர்ந்த தலைவனுக்கு!
Honey comb – mountain country man