He has not come back, but the jasmine has bloomed – Kurunthokai 22


#MEMEthokai85

Situation: Thalaivan (hero) is in love with Thalaivi (Heroine) and is far away to earn wealth. He promised to return before the monsoon rains. Rains have poured, flowers have blossomed. Thalaivi utters this poem. #MEMEthokai #karkanirka

குறுந்தொகை 221, உறையூர் முதுகொற்றனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அவரோ வாரார், முல்லையும் பூத்தன,
பறி உடைக் கையர் மறி இனத்து ஒழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும்,
ஆடுடை இடைமகன் சென்னிச்
சூடிய எல்லாம் சிறு பசு முகையே.  5

kuṟuntokai 221, uṟaiyūr mutukoṟṟaṉār, mullait tiṇai – talaivi tōḻiyiṭam coṉṉatu
avarō vārār, mullaiyum pūttaṉa,
paṟi uṭaik kaiyar maṟi iṉattu oḻiyap
pāloṭu vantu kūḻoṭu peyarum,
āṭuṭai iṭaimakaṉ ceṉṉic
cūṭiya ellām ciṟu pacu mukaiyē.  5

குறுந்தொகை 221, உறையூர் முதுகொற்றனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அவரோ வரவில்லை; முல்லையும் பூத்தன;
பனையோலையைக் குடையாகக் கையிலுடைய இடையர் ஆட்டுக்கூட்டத்தை ஓட்டிச்செல்ல,
பாலோடு வந்து [பண்டமாற்றி] கூழோடு  திரும்பிச்செல்லும் 
ஆடுகளையுடைய இடையனது தலையுச்சியில்
சூடிய எல்லாம் சிறு பசுமையான மொட்டுக்களே!

Kurunthokai 221, Uraiyūr Muthukotranār, Mullai Thinai – What the heroine said to her friend
He has not come back, but the jasmine has bloomed.
Leaving the herd of sheeps with people holding palm leaves [as umbrella]
The shepherd came with milk and departed with gruel.
He adorned blooming fresh bud all over his head!

[to remind me of his promise that he would come before the jasmine bloomed!]

Translated by Palaniappan Vairam Sarathy

notes:
இடைமகன் iṭai-makaṉ , n. < id. +. Cowherd or shepherd; இடையன்.

பறி³ paṟi , n. < பறி²-. 5. Mat of palm leaf; பனை யோலைப் பாய்.

முல்லை-mullai

—-
Reference:

Tamil Lexicon – University of Madras

Learn Sangam Tamil

Tamilconcordance.in

அவரோ வாரார், முல்லையும் பூத்தன,

avarō vārār, mullaiyum pūttaṉa,

அவரோ வரவில்லை; முல்லையும் பூத்தன;

He – not come – jasmine – bloomed

பறி உடைக் கையர் மறி இனத்து ஒழியப்

paṟi uṭaik kaiyar maṟi iṉattu oḻiyap

பனையோலையைக் குடையாகக் கையிலுடைய இடையர் ஆட்டுக்கூட்டத்தை ஓட்டிச்செல்ல,

Palm leaf as mat – possess – hands (people with )- sheep – herd – leave off

பாலொடு வந்து கூழொடு பெயரும்,

pāloṭu vantu kūḻoṭu peyarum,

பாலோடு வந்து [பண்டமாற்றி] கூழோடு  திரும்பிச்செல்லும் 

With milk – come – with gruel – leave/depart

ஆடுடை இடைமகன் சென்னிச்

āṭuṭai iṭaimakaṉ ceṉṉic

ஆடுகளையுடைய இடையனது தலையுச்சியில்

Possess goat – shepherd – head

சூடிய எல்லாம் சிறு பசு முகையே.  5

cūṭiya ellām ciṟu pacu mukaiyē.  5

சூடிய எல்லாம் சிறு பசுமையான மொட்டுக்களே! 

wear/adorne – all – small – fresh – blossoming bud

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.