Shades of love moves on love and despair of young girls who see their king on procession (Ula) and fall deeply in love with him!
நாணொருபால் வாங்க நலனொருபால் உள்நெகிழ்ப்பக்
காமருதோட் கிள்ளிக்கென் கண்கவற்ற – யாமத்
திருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போலத்
திரிதரும் பேருமென் நெஞ்சு. – 32
My shyness is pulling me one side
My virtue is crushing me inside the other side
But my eyes are attracted to Killi
with desirous shoulders
My heart is wandering like an
Ant any caught between fire on both ends!
Poet: Unknown
Translated by Palaniappan Vairam Sarathy
வெட்கம் ஒருப் பக்கம் இழுக்க, அவனை கண்டால் காதலில் வீழ்ந்து விடுவேன் என்று எண்ணி என் பெண்ணலம் மற்றறொருப் பக்கம் இழுக்க, என்னுள் நெகிழ ஆசையை தூண்டும் தோளையுடை கிள்ளி என் கண்களை கவர்ந்து இழுக்கும் இரவு நேரத்தில் இருப்பக்க தீக்கொள்ளிக்கு நடுவே சிக்கிய எறும்பு போல என் மனம் இரு எண்ணங்களுக்கு நடுவே சிக்கித் தவிக்கின்றது
————–
Poem is on a Chola king.

————–
About Muttollaiyiram (Three Times Nine Hundred)
Anthology of poems on on Pandya,Chera, Chola kings. Poet: anonymous
The work should have been 900 poems on each of Chera,Chola,Pandya kings. But only 46 on Chola, 23 on Chera, 60 on Pandya kings have survived.
The poems are dated to between end of 6th-10th c. A.D .According Dr.Kamil Zvelebil the collection ‘Contains some exquisite and delicate verses of high craftsmanship. Some portions showing the king’s procession developed later into ula. The work must have been very popular and influential since it is often quoted and referred to by commentators. ‘
Reference:
Tamil Literature – Kamil Zvelebil
Lexicon of Tamil Literature – Kamil Zvelebil
Muttollaiyram – Central institute of Classical Language edition
Tamil Lexicon – University of Madras
———————————-
நாண் ஒருபால் வாங்க நலன் ஒருபால் உள் நெகிழ்ப்பக்
Shyness – one side – pull – virtue/beauty – one side – inside – blossom/crush/seperate
காமருதோள் கிள்ளிக்கு என் கண் கவற்ற யாமத்து
Desirable/beauty – Shoulder – Killi – my – eyes – attract – night
இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு போலத்
Two sided – fire – inside – ant – alike
return – seperate – my – heart
அழகான வருணனை!