Tamil classical love poetry extending its influence into religion. Nammalavar was one of the first exponents to use Tamil Love themes into his poems on Mal. His profound love for God is expressed in these poems. Here he imagines to be a girl who is in love with the lord.
வாரிக்கொண் டுன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை யொழியவென் னில்முன்னம்
பாரித்து, தானென்னை முற்றப் பருகினான்,
காரொக்கும் காட்கரையப்பன் கடியனே. 9.6.10
I thought of peeling you and swallowing you whenever I see you,
But you ate me whole before I could and ruined my desire!
Lord of Katkarai, who resembles rain clouds, is cruel!
Poet: Nammalvar
Translated by Palaniappan Vairam Sarathy
உன்னைக் காணும் பொழுது, வாரி அனைத்து உன்னை விழுங்க எண்ணி
ஆர்வத்துடன் இருந்த என்னை அழித்து எனக்கு முன்
செயல்பட்டு என்னை முழுவதுமாகப் பருகிவிட்டாய்!
கார் மேகம் போன்ற நிறத்தை கொண்ட காட்கரையப்பன் கடுமையானவன்!

Reference:
Hymns of Drowning – A.K.Ramanujan
http://www.ibiblio.org/sripedia/ebooks/tvm/tvm9-6.html
Tamil Lexicon – University of Madras
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
Peel – possess/get – you – swallow – if I see – thinking
ஆர்வுற்ற என்னை யொழிய என்னில் முன்னம்
Desiring – me – ruin/empty – me – before
பாரித்து தான் என்னை முற்றப் பருகினான்
Appear/prepare/cause – you – me – whole – drink/eat/enjoy
கார் ஒக்கும் காட்கரை யப்பன் கடியனே.
Rain/cloud – resemble – lord of Kaatkarai – is curel man