‘Poet who criticized the prevalent religious beliefs -Civavakiyar poems – Civavakaiyam’


Civakaviyar is one of Cittars who heavily criticized the established religious structure and caste system of his period. I have given two poems below which echo this feelings,

செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்


செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர்


உம்மதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்


அம்பலம் நிறைந்தநாதர் ஆடல்பாடல் ஆகுமோ!

In bricks and in granite,

in the red rubbed lingam,

in copper and brass,

is Siva’s adobe-

thats what you tell us,

and you are wrong.

Stay where you are

and study your own selves.

Then you will BECOME

the Temple of GOD,

full of his dance and spell

and song.

……..
…..
..
பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?


இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?


பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?


பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே!

What does it mean – a Pariah woman?

What does it mean – a Brahmin women?

Is there any difference in flesh,

skin,or bones?

Do you feel any difference when you sleep

with a Pariah or Brahmin woman?

Poet: Civavakaviyar

Translated by Kamil V Zvelebil

பறைச்சி paṟaicci
, n. Fem. of பறையன். A Paṟaiya woman; பறைக்குடிப்பெண்.

பனவன் paṉavaṉ
, n. cf. Pkt. baṃhaṇa. Brahmin; பார்ப்பான். திருப்பெருந்துறை யுறையும் பனவன் (திருவாச. 34, 3).

போகம் pōkam

n. < bhōga. 1. Enjoyment of eight kinds. See அஷ்டபோகம். 2. Pleasure, happiness; இன்பம். போகம் வைத்த பொழில் (தேவா. 639, 9). 3. Sexual enjoyment; புணர்ச்சி.

—————————————————————————————————————————————————————-

————————————————————————————————————————————————–

Please post your comments.

Follow behindwoods on Twitter

Follow blog in Face book http://www.facebook.com/group.php?gid=83270822979&ref=mf

Orkut community http://www.orkut.com/Community.aspx?cmm=49797549

Subscribe Karkanirka

Stumble It!

Top Blogs

Advertisement

5 Comments

  1. Hi,

    Good.

    Can you just clear one of my related doubts .

    If a Brahmin woman is called as a “panathi” what is the equivalent term for a brahmin male ?

  2. panatti- brahmin woman
    panavan- brahmin
    panavu -brahmin characteristic
    From Cologne online Tamil Lexicon

  3. I am posting the comments about this blog by Dr.N.Kannan from Mintamil google group .

    > செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
    > செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர்
    > உம்மதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்
    > அம்பலம் நிறைந்தநாதர் ஆடல்பாடல் ஆகுமோ!

    சித்தர்களைத் தத்துவார்த்தமாக எப்படிப் புரிந்து கொள்வது என்பதில் ஒரு
    தெளிவின்மை இருக்கிறது. மேற்சொன்ன சிவவாக்கியர் பாடல் தெளிவாக அத்வைத
    நிலை பற்றிப் பேசுகிறது. உள்ளிருக்கும் நாதனைக் கண்ட பின் அவனுக்கு குண
    நலன்கள் கொடுத்து, ஒரு கற்சிலையாக அதாவது மூர்த்தியாக ஏன் வழிபட
    வேண்டும்? என்று கேட்கிறது இப்பாடல். வேடிக்கையாக இருக்கிறது! காலத்தால்
    பிற்பட்ட இப்போக்கு உண்மையில் வேத வழிபாட்டை முன் வைப்பது போல் படுகிறது.
    வேத நெறியில் “தெய்வம்” என்பதை ஒளி வடிவமாக பார்த்தனர். மேலும்,
    தெய்வங்களுக்கு நாம் செய்யும் நிவேதனங்கள் அக்னி எனும் நெருப்பின் வழியாக
    எடுத்துச் செல்லப்படுகிறது என்பதும் வேத வழியே! எனவே வேத நெறியில் உருவ
    வழிபாடு என்பது கிடையாது.

    ஆகமங்கள் வேறுன்றத் தொடங்கிய இந்தியாவில் இறைவனுக்கு கோயிலமைத்து, உருவ
    வழிபாடுகள், உற்சவங்கள் அமைத்து வழிபடும் முறை வருகிறது. இதன் பின்னுள்ள
    தத்துவம் என்னவெனில்? உள்கிடக்கும் (கடவுள்) இறைவனே வெளியிலும் உள்ளான்
    என்பது. அவனை உள்ளேயும் காணலாம். அற்புதமான குணநலன்கள் கொண்ட
    மூர்த்தியாகவும் காணலாம். மூர்த்தங்களுக்குப் பின்னால் புராண, இதிகாசக்
    கதைகள் தேவைப்படுகின்றன. அப்போதுதான் உருவத்திற்குப் பொருள் வரும்.
    ‘கண்ணனெனும் கருந்தெய்வம்’ என்று சொல்லும் போது கண்ணனின் பெருமைகள்
    பற்றிய கதைகள் தேவை. பாகவதம் தேவைப்படுகிறது!

    சித்தர்கள் பேசுவது யோகவழி. ஆனால் முனிவர்களும், யோகிகளும் ‘ஹரி, ஹரி’
    என்று தொழும் பேரரவம் கோயிலில் கேட்பதாகச் சொல்வது பக்தி. பக்தி
    தோன்றியது தென்னகத்தில், அங்கேயே இதற்கான எதிர்க்குரலும்
    ஒலித்திருக்கிறது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது?

    சித்தர்கள் பக்தி மார்க்கத்தை ஏற்காததேன்?

    > பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
    > இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
    > பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?
    > பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே!

    இதுகூட வெளியில் சமூகச் சமன்பாடு பற்றிப் பேசுவது போல் தோன்றினாலும்,
    தத்துவார்த்தமாக அத்வைதமே பேசுகிறது!

    சித்தர்கள் உளக்கிடக்கை என்னவென்று யாராவது “ஆசார்ய ஹிருதயம்”
    எழுத்தியிருக்கிறார்களோ?

    கண்ணன்

  4. wonderful lines vairam.

    reminded of the famous parliament of religions speech of Swami Vivekananda

    “As the different streams having their sources in different places all mingle their water in the sea, so, O Lord, the different paths which men take, through different tendencies, various though they appear, crooked or straight, all lead to Thee!” and “Whosoever comes to Me, through whatsoever form, I reach him; all men are struggling through paths that in the end lead to Me.

    and this one…

    I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true. As different streams having different sources all mingle their waters in the sea, so different tendencies, various though they appear, crooked or straight, all lead to God.

  5. Tamil Lexiconனின் படி பனவன் என்பதே பார்ப்பணன் என்று பொருள் படும். பணவன் வேறு, பனவன் வேறு. பணத்தி என்பது பணக்காரி என்று பொருள் படும் என்பது என் கருத்து.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.