Songs from 4 regions in praise of the King – Silapadikaram


Back to my favorite epic Silapadikaram . Illango Adikal all through his book would have tried to reflect lives of the people of various regions like cowherds, farmers,sailors,mountaineers etc.

Situation: Chera King Senguttuvan has defeated the Aryan kings who stood in his way while he made a journey to bring rocks from Himalayas to build a Idol for Kannagi the Pattini Theivam. He has now returned to Vanji.

All the people are celebrating and in typical style of Illango, people form different regions sing a song in praise of their victorious King.

“நால் வகை நிலப் பாடல்களையும் கேட்டுக் கோப்பெருந்தேவி மகிழ, செங்குட்டுவன் வஞ்சி மா நகர் வந்து சேர்தல்”

அமை விளை தேறல் மாந்திய கானவன்
கவண் விடு புடையூஉக் காவல் கைவிட,
வீங்கு புனம் உணீஇய வேண்டி வந்த
ஓங்கு இயல் யானை தூங்கு துயில் எய்த,
வாகை, தும்பை, வட திசைச் சூடிய
வேக யானையின் வழியோ, நீங்குஒ என,
திறத்திறம் பகர்ந்து, சேண் ஓங்கு இதணத்து,
குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்-

அமை விளை தேறல் மாந்திய கானவன் – மூங்கிலின் கண் விளைந்த கள்ளையுண்ட வேட்டுவன், கவண்விடு புடையூஉக் காவல் கைவிட – கவண்கற்களை விடுத்துப் புடைக்கின்ற காவலினைக் கைவிடுதலால், வீங்குபுனம் உணீஇய வேண்டி வந்த – பெரிய தினைப்புனத்தில் உண்ணுதலை விரும்பிவந்த, ஓங்கியல் யானை தூங்குதுயில் எய்த – உயர்ந்த இயல்புடைய யானை அயர்ந்து உறக்கமடைய, வாகை தும்பை வடதிசைச் சூடிய – வாகையையும் தும்பையையும் வடநாட்டின் கண் முடித்த, வேக யானையின் வழியோ நீங்கென – விரைந்த செலவினையுடைய யானை வரும்வழியிற் செல்வாய் இவ்விடம்விட்டு நீங்குவாய் என்று, திறத்திறம் பகர்ந்து சேண் ஓங்கு இதணத்துக் குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்-அரசனுடைய வெற்றித் திறங்களைத் திறப்பண்ணினாற் கூறிச் சேணிலே உயர்ந்த பரணின்மீ திருந்து குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாடலையும்

Song of the Mountain girls

“Short be the road of him who returns,

mounted on his racing elephant,

wearing the wreath of albizzia

and northern diospyros.”

Seated on the Hill side slopes, the girls laughed as they greeted the forest guards.Drunk on the honey taken from the hives bees build in the bamboo forest, they forgot to throw stones at the wild elephants leaving the dark jungle to rest in millet fields.

“உழவர் பாணி”

வட திசை மன்னர் மன் எயில் முருக்கி,
கவடி வித்திய கழுதை ஏர் உழவன்,
குடவர் கோமான், வந்தான்; நாளை,
படு நுகம் பூணாய், பகடே! மன்னர்
அடித் தளை நீக்கும் வௌ஢ளணி ஆம்ஒ எனும்
தொடுப்பு ஏர் உழவர் ஓதைப் பாணியும்-

வடதிசை மன்னர் மன்னெயில் முருக்கி – வட நாட்டு அரசர்களின் நிலைபெற்ற மதிலை அழித்து, கவடி வித்திய கழுதை ஏருழவன் – வௌ வரகை விதைத்த கழுதை பூட்டிய ஏரினை உழுவோனாகிய, குடவர் கோமான் வந்தான் – குடநாட்டினர் தலைவன் வந்தனன், நாளைப் படுநுகம் பூணாய் பகடே மன்னர் அடித்தளை நீக்கும் வௌ ளணியாம் எனும் – நாளை பகையரசர்களின் காற்றளையை நீக்குவதாகிய அரசன் பிறந்த நாட் பெரு மங்கலமாகும் ஆகலின் பகடே நீயும் நுகம்பூண்டு உழாயாவாய் என்னும், தொடுப்பேர் உழவர் ஓதைப்பாணியும் – விழாக்கொண்டு உழும் உழவர் முழக்கமாகிய மருதப் பாடலும்்்

The rough peasents,too could be heard singing as they ploughed their fields:

“Then after he had razed the fortresses

of northern kings, the Kudavar ruler

sent donkeys to plough up the ground

where proud towns of enemies had stood,

and sowed white millet on thier sites.

And now he has returned.O my bullocks,

you shall be freed from yokes today.

It is the birthday of the King,

and every prisoner will be unchained.”

“கோவலர் பாணி”
தண் ஆன் பொருநை ஆடுநர் இட்ட,
வண்ணமும், சுண்ணமும், மலரும், பரந்து;
விண் உறை வில் போல் விளங்கிய பெரும் துறை,
வண்டு உண மலர்ந்த, மணித் தோட்டுக் குவளை
முண்டகக் கோதையொடு முடித்த குஞ்சியின்
முருகு விரி தாமரை முழு மலர் தோய,
குருகு அலர் தாழைக் கோட்டுமிசை இருந்து,
வில்லவன வந்தான்; வியன் பேர் இமயத்துப்
பல் ஆன் நிரை யொடு படர்குவிர் நீர்ஒ என,
காவலன் ஆன் நிரை நீர்த்துறை படீஇ,
கோவலர் ஊதும் குழலின் பாணியும்-

தண்ஆன் பொருநை ஆடுநர் இட்ட-குளிர்ந்த ஆன் பொருநையில் நீராடுவோர் இட்ட, வண்ணமும் சுண்ணமும் மலரும் பரந்து – தொய்யிற் குழம்பும் பொற் சுண்ணமும் மலர்களும் பரவி, விண் உறை விற்போல் விளங்கிய பெருந்துறை – இந்திர வில்லைப்போல் விளங்குகின்ற பெரிய நீர்த் துறைகளில், வண்டுஉண மலர்ந்த மணித்தோட்டுக் குவளை – வண்டுகள் உண்ணுமாறு மலர்ந்த நீலமணி போலும் நிறம்பொருந்திய இதழ்களையுடைய குவளை மலர்களை, முண்டகக் கோதையொடு முடித்த குஞ்சியின் – முள்ளிப்பூ மாலையுடன் முடித்த குடுமியின்கண், முருகுவிரி தாமரை முழுமலர் தோய – மணம்விரியும் தாமரையின் முழுமலரும் பொருந்துமாறு அணிந்து, குருகுஅலர் தாழைக் கோட்டுமிசை இருந்து – குருகுபோலும் பூ அலர்ந்த தாழையின் கிளைமீது இருந்துகொண்டு, வில்லவன் வந்தான் – விற்கொடியையுடைய சேரலன் வந்தான், வியன்பேர் இமயத்துப் பல்ஆன் நிரையொடு படர்குவிர் நீர் என – அகன்ற பெரிய இமயமலையினின்றும் அவன் கொணர்ந்த பல ஆனிரைகளுடன் நீவிரும், சேர்வீர் என்று, காவலன் ஆன்நிரை நீர்த்துறை படீஇ- அரசனுடைய ஆனினங்களை நீர்த்துறையிலே படிவித்து, கோவலர் ஊதும் குழலின் பாணியும் – ஆயர்கள் ஊதும் வேய்ங் குழலின் பாடலும்

On the steps leading down to the river An-Porunai,soap paste,scented paste,scented powders and the flower garlands of the bathers spread their colors like rainbow. From there could be heard the clear sounds of the shepherd’s flutes and voices raised in song:

“The archer has returned,

bringing a herd,well fed,

from the famed Himalaya.

Dear little sheep,you

shall play with these foreigners.”

In their tufts of hair the shepherds tied charming garlands of the lotuses,dear to the bees and sweet scented water lilies. After bringing the royal flocks to drink at the river, they stood on the pandanus stalks.

“நெய்தல் நிலப் பாணி஢”

வெண் திரை பொருத வேலை வாலுகத்து,
குண்டு நீர் அடைகரைக் குவை இரும் புன்னை,
வலம்புரி ஈன்ற நலம் புரி முத்தம்
கழங்கு ஆடு மகளிர் ஓதை ஆயத்து
வழங்கு தொடி முன்கை மலர ஏந்தி,
வானவன்வந்தான், வளர் இள வன முலை
தோள் நலம் உணீஇய; தும்பை போந்தையொடு
வஞ்சி பாடுதும், மடவீர்! யாம்ஒ எனும்
அம் சொல் கிளவியர் அம் தீம் பாணியும்-

வெண்டிரை பொருத வேலை வாலுகத்துக் குண்டு நீர் அடைகரைக் குவையிரும் புன்னை – ஆழமாகிய நீரையுடைய கடலின் வௌளிய அலைபொருத வெண்மணலையுடைய அடை கரைக்கண் திரண்ட பெரிய புன்னையினிடத்தே, வலம்புரிஈன்ற நலம்புரி முத்தம் – வலம்புரிச் சங்கமீன்ற அழகிய முத்துக்களை, கழங்காடு மகளிர் ஓதைஆயத்து – ஆரவாரம் பொருந்திய கூட்டத்துடன் கழங்காடுகின்ற மகளிர், வழங்குதொடி முன்கை மலர ஏந்தி – கழலும் வளையணிந்த முன்னங்கைகள் மலருமாறு ஏந்தி, வானவன் வந்தான் – சேரர் பெருமான் வந்தான், வளர் இள வன முலை தோள் நலம் உணீஇய – நம்முடைய வளர்கின்ற அழகிய இளங் கொங்கைகள் அவனுடைய தோளின் நலத்தை நுகர்தற் பொருட்டு, தும்பை போந்தையொடு வஞ்சி பாடுதும் மடவீர் யாம் எனும் – மடப்பத்தை யுடையீர் அவன் முடித்த தும்பை வஞ்சிகளைப் பனை மாலையுடன் யாம் பாடக்கடவேம் என்னும், அஞ்சொற் கிளவியர் அம் தீம் பாணியும் – அழகிய சொற்களையுடைய மகளிரின் அழகிய இனிய பாடலும

From farther away , the lusty songs of the sailors could be heard:

“King Vaanavan has come back to tickle

the shoulders and the shapely nipples

of his young queen.O lovely girls!

Now we can sing him the hero’s song.

To get the reward of his victory,

he will give up his wreath of flowers.”

The daughters of the fisherman sang love songs on the beach, seated under the shade of punnai trees,on sand brought in by the foaming waves.They played with balls, and with hands loaded with bangles they stole lustrous pearls from gaping oyster shells.

“அரசி மகிழ, நகரினர் எதிர்கொள, செங்குட்டுவன் வஞ்சியுள் புகுதல்”

ஓர்த்து உடன் இருந்த கோப்பெருந்தேவி
வால் வளை செறிய, வலம்புரி வலன் எழ,
மாலை வெண்குடைக்கீழ், வாகைச் சென்னியன்
வேக யானையின் மீமிசைப் பொலிந்து,
குஞ்சர ஒழுகையின் கோநகர் எதிர்கொள,
வஞ்சியுள் புகுந்தனன், செங்குட்டுவன்-என்.

ஓர்த்து உடன்இருந்த கோப்பெருந்தேவி வால் வளைசெறிய – ஆகிய நால்நிலப் பாடல்களையும் ஒரு சேரக் கேட்டு உறங்காதிருந்த கோப்பெருந் தேவியின் வௌளிய வளையல்கள் செறிய, வலம்புரி வலன் எழ – வலம்புரிச் சங்கு வெற்றி தோன்ற முழங்க, மாலை வெண்குடைக்கீழ் வாகைச் சென்னியன் வேக யானையின் மீமிசைப் பொலிந்து – வாகை சூடிய சென்னியையுடையனாய் வெந்திறலுடைய பட்டத்தியானையின் மேலிடத்தே மாலையணிந்த வெண்கொற்றக் குடையின்கீழ்ப் பொலிவுற்று, குஞ்சர ஒழுகையிற் கோநகர் எதிர்கொள-யானை நிரையுடன் திருநகர் எதிர்கொள்ள, வஞ்சியுட் புகுந்தனன் செங்குட்டுவன் – செங்குட்டுவன் வஞ்சி நகரிற் புகுந்தனன் என்க.

Listening to these songs with strange emotion,the all powerful queen once more slipped over her wrists her well fitting bracelets.Seated on a swift elephant,Shenguttuvan,wearing his most stately crown,with albizzia garland round his neck,entered Vanji. The citizens welcomed him with a procession of chariots drawn by elephants.

Poet: Illango Adigal

Translated by Alian Danielou

Tamil Urai : Vengadaswami Nattar

Please post your comments.

Here is the link for my orkut community for this blog http://www.orkut.com/Community.aspx?cmm=49797549&refresh=1

Digg!Top Blogs

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.