வையமும், சிவிகையும், மணிக் கால் அமளியும்,
உய்யானத்தின் உறு துணை மகிழ்ச்சியும்,
சாமரைக் கவரியும், தமனிய அடைப்பையும்,
கூர் நுனை வாளும், கோமகன் கொடுப்ப;
பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப்
பொன் தொடி மடந்தையர் புது மணம் புணர்ந்து;
செம் பொன் வள்ளத்து, சிலதியர் ஏந்திய
அம் தீம் தேறல் மாந்தினர் மயங்கி;
பொறி வரி வண்டு இனம் புல்லுவழி அன்றியும்
நறு மலர் மாலையின் வறிது இடம் கடிந்து-ஆங்கு:
இலவு இதழ்ச் செவ் வாய் இள முத்து அரும்ப,
புலவிக் காலத்துப் போற்றாது உரைத்த
காவி அம் கண்ணார் கட்டுரை எட்டுக்கு
நாவொடு நவிலா நகைபடு கிளவியும்;
அம் செங்கழுநீர் அரும்பு அவிழ்த்தன்ன.
செங் கயல், நெடுங் கண் செழுங் கடைப் பூசலும்;
கொலை வில் புருவத்துக் கொழுங் கடை சுருள,
திலகச் சிறு நுதல் அரும்பிய வியரும்;
செவ்வி பார்க்கும் செழுங் குடிச் செல்வரொடு
வையம் காவலர் மகிழ்தரு வீதியும்-
The king’s rich concubines, their arms circled with gold, spend lazy days in his embrace, and as a reward receive carriages,palanquins,jewel studded beds,yellow yak’s tail fans,golden betel boxes and sharp steel swords.They spend hours of pleasure at the king’s side,drinking wine from cups of pure gold brought by slaves. In their drunkenness they beat their bodies at random in an attempt to drive away the flies busy around their flower wreaths. When they laugh,their white teeth seem rows of pearls shining in the jewel case of their red lips.They hum gay songs that forlon hearts never sing, but when they try to sing, the eight modes from their throats sound coarse and the listeners laugh. Then the corners of their eyes, long as oars,redden with anger till they seem purple lotus flowers and pearls of sweat gather on their brows. The sons of noble families look enviously at them, for they are meant for the pleasure of only the lord of the universe.
Poet : Illango Adigal
Translated by Alien Danielou
I would strongly advise you to read the poem in Tamil and if you don’t undertstand it in Tamil read the Tamil Urai. Every time I read Silapadikaram , I really wonder if Illango was a real saint. His description of love , women and beauty makes me seriously question how a Jain saint(Jains were not supposed to get immersed in worldly pleasures) could understand and make the readers understand the beauty through his words. In this poem he not only conveys the riches the women gained by being the Kings concubine, but he also sarcastically criticizes their behavior. We get to know that at least some women like these could drink liquor. In the last line he praises their beauty by saying all eyes of people from royal families were envying the beauty which only the King could enjoy. The poem also says the status enjoyed by them, they must have been in a very high status since chariots were given to them. Giving a chariot was a very high gift, this concept is reflected in many sangam poems and most vallals are praised for gifting their carriage(eg. ‘Mullaiku Ther koduthan Paari’).
Tamil urai : Vengadaswami Nattar
வையமும்-கூடாரப் பண்டியும், சிவிகையும்-பல்லக்கும், மணிக்கால் அமளியும், மணிகளிழைத்த கால்களையுடைய சேக்கையும், உய்யானத்தின் உறுதுணை மகிழ்ச்சியும் – நீராவிச் சோலையிலே சேவிப்பாருடனிருந்து புதுமை காண்டலும், சாமரைக் கவரியும் – சாமரையாகிய கவரியும், தமனிய அடைப்பையும் – பொன்னாற் செய்த வெற்றிலைப் பெட்டியும், கூர் நுனைவாளும் – கூரிய முனையையுடைய வாளும், தம் கோமகன் கொடுப்ப – தம் அரசன் கொடுக்க, பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கை – அங்ஙனம் பெற்ற வரிசையாகிய செல்வம் எக்காலத்தும் மாறாத. பொற்றொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து – பொன்வளை யணிந்த மகளிர் புதிய மணத்தினைப் பொருந்தி
செம்பொன் வள்ளத்துச் சிலதியர் ஏந்திய – ஏவற் பெண்டிர் பொன் வள்ளத்தில் ஏந்திய, அம் தீந்தேறல் மாந் தினர் மயங்கி – அழகிய இனிய கள்ளின் தௌதவைப் பருகின ராய்ப் பின்னும் மயங்கி
பொறிவரி வண்டினம் புல்லுவழி அன்றியும் – வரி பாடும் பொறியையுடைய வண்டினத்தை அவை பொருந்து மிடத்தினன்றியும், நறுமலர் மாலையின் வறிதிடம் கடிந்தாங்கு – நறிய பூமாலையாலே அவை பொருந்தாத இடத்திற் கடிந்து இலவு இதழ்ச் செவ்வாய் இளமுத்து அரும்ப இலவிதழ் போ லும் சிவந்த வாயின் மீதே இளமுத்துப் போலும் பற்கள் தோன்ற முறுவலித்து, புலவிக் காலத்துப் போற்றாது உரைத்த- ஊடற் காலத்துப் பாதுகாவாது கூறிய, காவியங் கண்ணார் கட்டுரை – நீலோற்பலம் போன்ற கண்ணினையுடையாரது புலவிப் பொருள் பொதிந்த உரையாகிய, எட்டுக்கு நாவொடு நவிலா நகைபடு கிளவியும் – எண்வகை யிடத்திற் பொருந்தி நாவால் நவிலப்படாத நகை தோன்றுங் கிளவியும், அம் செங்கழு நீர் அரும்பு அவிழ்த்தன்ன – அழகிய செங்கழுநீரின் அரும்பை நெகிழ்த்துப் பார்த்தாலொத்த, செங்கயல் நெடுங்கண் செழுங் கடைப் பூசலும் – சிவந்த கயலினை யொத்த நீண்ட கண்ணின் கடைச்சிவப்பாற் செய்த பூசலும், கொலை விற் புருவத்துக் கொழுங்கடை சுருள – கொலைத்தொழில் புரியும் வில்லை யொத்த புருவத்தின் அழகிய கோடிகள் உள் வளைய, திலகச் சிறு நுதல் அரும்பிய வியரும் – திலகமணிந்த சிறிய நெற்றியில் அரும்பிய வியரும், செவ்வி பார்க்கும் செழுங்குடிச் செல்வ ரொடு – தீருஞ் செவ்வி பார்த்து வருந்தும் வளமிக்க குடிப் பிறந்த செல்வரோடே, வையம் காவலர் மகிழ்தரு வீதியும் – நிலத்தினைப் புரக்கும் அரசரும் விரும்பும் வீதியும்;
—————————————————————————————————
Please post your comments.
Here is the link for my orkut community for this blog http://www.orkut.com/Community.aspx?cmm=49797549&refresh=1
can sense a feeling of ……..sour grapes??