Ninth of the ten poems from Nachiyar Thirumozhi – Vin Neela Mellappu (sky blue cloth). Love theme of Sangam transformed into love between a human soul and the divine. Here Andal sends the could as her messenger to Mal of Vengadam (Thirupathi).
மதயானை போலெழுந்த மாமுகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தையென்னே
கதியென்றும் தானாவான் கருதாது ஓர் பெண்கொடியை
வதைசெய்தான் என்னும்சொல் வையகத்தார் மதியாரே
Oh clouds, who rise like elephant in rut!
What is the word from lord of Vengadam who has a snake for his bed?
Would anyone respect him as the savior of the world if the word spreads
That he has killed a young girl knowing that he was the only refuge for her?
Poet: Andal
Translated by Palaniappan Vairam Sarathy
மதயானை போல் எழுந்த மாபெரும் மேகங்களே
பாம்பு ஆணை கொண்ட வேங்கடத்தின் தலைவனின் வார்த்தை என்ன?
தான் ஒருவன் மட்டுமே அவளுக்கு கதி என்று என்னாது ஒரு பெண்கொடியை
வதை செய்தான் என்னும் சொல் எழுமெனில் வையகத்தார் அவரை மதிப்பாரோ?

—————————————————————————————————————————————
Reference:
The Secret Garland – Archana Venkatesan
Andal’s Thiruppavai and Nachiyar Thirumozhi – Salem B.Anbarasu
http://naachiyaarthirumozhi.blogspot.com/
—–————————————————————————————————————————–
மதயானை போல் எழுந்த மாமுகில்காள் வேங்கடத்தைப்
Elephant in must – alike – rise – great – clouds – Vendagam
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே ?
Lord – will you live – snake – bed– one with – word – what
கதி என்றும் தானாவான் கருதாது ஒரு பெண்கொடியை
Refuge – so – he – become – not think – one – girl – creeper
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே
Kill – he did – these- words – saver of the world – respect?
madhiyare stands for madhiyaro conveying the sense that; Will not the world think…/There is no need to bring in respect here. madhitthal is ennudhal sometimes used for vuyarvaaha ennudhal…