A song of desperation. A warrior has not returned. Feeling of his wife is expressed as a beautiful poem.
புறநானூறு 273, பாடியவர்: எருமை வெளியனார், திணை: தும்பை, துறை: குதிரை மறம்
மா வாராதே! மா வாராதே!
எல்லார் மாவும் வந்தன; எம் இல்
புல் உளைக் குடுமிப் புதல்வன் தந்த
செல்வன் ஊரும் மா வாராதே!
இரு பேர் யாற்ற ஒரு பெருங்கூடல்
விலங்கிடு பெருமரம் போல,
உலந்தன்று கொல், அவன் மலைந்த மாவே?
Horse has not come! Horse has not come!
Everyone’s horse has come,
Yet horse of the rich man
Of my house who gave me
The Boy
with tawny mane like topknot
Has not come!
Like a tree
which stood in the meeting place
of two great rivers
Has the horse ,
he rode to the war,
fallen?
Poet: Erumai Veliyanār
Translated by Palaniappan Vairam Sarathy

குதிரை வரவில்லை! குதிரை வரவில்லை !
எல்லார் குதிரை வந்தன; எம் இல்லது
சிறிய குடுமி கொண்ட புதல்வன் தந்த
செல்வன் ஊர்ந்துச் சென்றக்
குதிரை வரவில்லை!
இரு பெரும் ஆறுகள் ஒன்றுகூடும்
இடத்தின் கண் நின்ற பெருமரம் போல
வீழ்ந்து விட்டதோ ,
அவன் போருக்கு ஊர்ந்துச்
சென்றக் குதிரை?
—————————–
Reference:
University of Madras, Tamil Lexicon
Purananuru Urai by Avvai Natarajan
Four hundred songs for Was by George L Hart and Hank Heifetz
Learn Sangam Tamil
——————————
மா வாராதே! மா வாராதே!
Horse (male) – has not come ! horse- has not come!
எல்லார் மாவும் வந்தன; எம் இல்
Everyones – horse – have come – my – house
புல் உளைக் குடுமிப் புதல்வன் தந்த
Tawny- mane – knot – son – gave
Lord – mounted – horse – has not come
இரு பேர் யாற்ற ஒரு பெருங்கூடல் 5
Two – big – river – one – big meet
விலங்கிடு பெருமரம் போல,
Blocked – big tree – alike
உலந்தன்று கொல், அவன் மலைந்த மாவே?
Left us/die – is it – he – went to war – horse?