#MEMEthokai5
Situation: Thalaivi (Heroine) confesses to hero that not only in this life but in lives to come after she wants him to be her husband and she wants to be his sweet heart. But what stands out in this poem is the simile comparing squirrel teeth to water thorn flower pollen tube.
குறுந்தொகை 49, அம்மூவனார், நெய்தற் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது
அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து
மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப!
இம்மை மாறி மறுமை ஆயினும்,
நீ ஆகியர் என் கணவனை,
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே. 5
kuṟuntokai 49, ammūvaṉār, neytaṟ tiṇai – talaivi talaivaṉiṭam coṉṉatu
aṇil pal aṉṉa koṅku mutir muṇṭakattu
maṇik kēḻ aṉṉa mā nīrc cērppa!
immai māṟi maṟumai āyiṉum,
nī ākiyar eṉ kaṇavaṉai,
yāṉ ākiyar niṉ neñcu nērpavaḷē. 5

Kurunthokai 49, Ammoovanār, Neythal Thinai – What the heroine said to her husband
Man of the shores,
Where squirrel tooth like
mature pollen tubes of Waterthorn
And water is dark as sapphire,
Even if this life ends and next life comes
You will be my husband,
And I will be the one
who complies with your heart!
Notes:
முண்டகம்¹ muṇṭakam , n. prob. முள் + அகம். 1. Thorn; முள். முண்டக விறும்பி னுற்று (அரிச். பு. வேட்டஞ். 36). 2. Thorn bush; முள் ளுடைத்தூறு.
In this case water thorn as this is Neithal (riverine) poem
நீர்முள்ளி nīrmuḷḷi (p. 2306) – Water thorn, s. sh., Hygrophila spinosa; பூடுவகை


குறுந்தொகை 49, அம்மூவனார், நெய்தற் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது
அணிலின் பல்லைப்போன்ற பூந்தாதுக்கள் முதிர்ந்த முள்ளிச்செடியுள்ள
மணியின் நிறம் போல பெரிய நீர்க் கொண்ட நெய்தனிலத்தலைவனே!
இப் பிறவி போய் அடுத்த பிறவி வந்தால்
நீயே என் கணவனாக இருக்கவேண்டும்,
நானே உன் நெஞ்சிற்கு ஏற்றவளாக இருக்கவேண்டும்.
—————————
Reference:
University of Madras – Tamil Lexicon
Learn Sangam Tamil
—————————————–
அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து
aṇil pal aṉṉa koṅku mutir
அணிலின் பல்லைப்போன்ற பூந்தாதுக்கள் முதிர்ந்த முள்ளிச்செடியுள்ள
Squirrel – teeth – alike – fragrant/pollen -mature- water thorn
மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப!
maṇik kēḻ aṉṉa mā nīrc cērppa!
மணியின் நிறம் போல பெரிய நீர்க் கொண்ட நெய்தனிலத்தலைவனே!
Sapphire – brightness – alike – dark – water – lord of seashore
இம்மை மாறி மறுமை ஆயினும்,
immai māṟi maṟumai āyiṉum,
இப் பிறவி போய் அடுத்த பிறவி வந்தால்
This life – change – next life – even if it comes
நீ ஆகியர் என் கணவனை,
nī ākiyar eṉ kaṇavaṉai,
நீயே என் கணவனாக இருக்கவேண்டும்,
You – become – my – husband
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே. 5
நானே உன் நெஞ்சிற்கு ஏற்றவளாக இருக்கவேண்டும்.
yāṉ ākiyar niṉ neñcu nērpavaḷē. 5
I – become – your – heart – one who complies with