#MEMEthokai36
Situation: Thalaivi (Heroine) has eloped with Thalaivan (hero). Thalaivi’s mother utters this poem as everything left behind by her daughter reminds her of her daughter!
ஐங்குறுநூறு 375, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
இது என் பாவை பாவை, இது என்
அலமரு நோக்கின் நலம்வரு சுடர்நுதல்
பைங்கிளி எடுத்த பைங்கிளி, என்றிவை
காண்தொறும் காண்தொறும் கலங்க
நீங்கினளோ, என் பூங்கணோளே
aiṅkuṟunūṟu 375, ōtalāntaiyār, pālait tiṇai – talaiviyiṉ tāy coṉṉatu
itu eṉ pāvai pāvai, itu eṉ
alamaru nōkkiṉ nalamvaru cuṭarnutal
paiṅkiḷi eṭutta paiṅkiḷi, eṉṟivai
kāṇtoṟum kāṇtoṟum kalaṅka
nīṅkiṉaḷō, eṉ pūṅkaṇōḷē?


ஐங்குறுநூறு 375, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
இது என் பொம்மை போன்ற மகளின் பொம்மை
சுழல்கின்ற பார்வையினையும், அழகு மிகுந்த ஒளிவிடும் நெற்றியுடைய
என் பச்சைக்கிளி வளர்த்த பச்சைக்கிளி;
இவற்றைக் காணக் காணக மனம் கலங்குமாறு
எனைவிட்டுச் சென்றாளோ என் பூப்போன்ற கண்ணையுடையவள்.


Ainkurunūru 375, Ōthalānthaiyār, Pālai Thinai – What the heroine’s mother said
This is my doll’s doll,
That is my parrot’s parrot
With whirling eyes
and bright forehead!
Did you leave me alone
To weep whenever I see them
My flower eyed one?
Translated by Palaniappan Vairam Sarathy
Notes:
There is two versions of the poem, some authors quote one additional line in the original poem. I have taken poem from the old commentry.
—-
Reference:
Tamil Lexicon – University of Madras
Learn Sangam Tamil
Tamilconcordance.in
——–
itu eṉ pāvai pāvai, itu eṉ
இது என் பொம்மை போன்ற மகளின் பொம்மை
This is my dolls’s doll- this is
அலமரு நோக்கின் நலம்வரு சுடர் நுதல்
alamaru nōkkiṉ nalamvaru cuṭarnutal
சுழல்கின்ற பார்வையினையும், அழகு மிகுந்த ஒளிவிடும் நெற்றியுடைய
Whirling – eyes – beautiful – bright/lustrous – forehead
பைங்கிளி எடுத்த பைங்கிளி, என்றிவை
paiṅkiḷi eṭutta paiṅkiḷi, eṉṟivai
என் பச்சைக்கிளி வளர்த்த பச்சைக்கிளி;
My Parrot (like girl) – raised -Parrot – so -these
kāṇtoṟum kāṇtoṟum kalaṅka
இவற்றைக் காணக் காணக மனம் கலங்க
See – whenever – see – whenever – grieve/cry
நீங்கினளோ, என் பூங்கணோளே?
nīṅkiṉaḷō, eṉ pūṅkaṇōḷē?
எனைவிட்டுச் சென்றாளோ என் பூப்போன்ற கண்ணையுடையவள்.
Leave me – my – flower – eye – one