#MEMEthokai35
Situation: Thalaivi (Heroine) is married to Thalaivan (hero). Thalaivan is irresponsible and spends his time having affairs with courtesans. When he turns up home one night Thozhi (Thalaivi’s friend) shames him saying that, he got good life because of Thalaivi and he is using that wealth to insult her and splurge on other women!
குறுந்தொகை 295, தூங்கலோரியார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும்
தழை அணிப் பொலிந்த ஆயமொடு, துவன்றி
விழவொடு வருதி நீயே, இஃதோ
ஓர் ஆன் வல்சிச் சீர் இல் வாழ்க்கை
பெரு நலக் குறுமகள் வந்தென, 5
இனி விழவு ஆயிற்று என்னும் இவ்வூரே.
kuṟuntokai 295, tūṅkalōriyār, marutat tiṇai – tōḻi talaivaṉiṭam coṉṉatu
uṭuttum toṭuttum pūṇṭum cerīiyum
taḻai aṇip polinta āyamoṭu, tuvaṉṟi
viḻavoṭu varuti nīyē, iHtō
ōr āṉ valcic cīr il vāḻkkai
peru nalak kuṟumakaḷ vanteṉa, 5
iṉi viḻavu āyiṟṟu eṉṉum ivvūrē.
குறுந்தொகை 295, தூங்கலோரியார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
புதிய ஆடை உடுத்தியும், மாலை தொடுத்தும், ஆபரணம் அணிந்தும் அகந்தைக் கொண்டு,
தலையில் இழை அணிகலன்களுடன் பொலிவுடைய பெண்கள் கூட்டத்துடன்,
திருவிழா கொண்டாடுவதுப் போல் வருகின்றாய் நீயே! இதனை,
ஒரு எருமையின் உழைப்பில் உணவு உண்டு இருந்த உன் சீரில்லாத வாழ்க்கை,
பெரு நலன் கொண்ட இளம் பெண் வந்த பிறகு,
இப்பொழுது விழாக்கோலம் ஆயிற்று என்று சொல்லும் இவ்வூர்!
Kurunthokai 295, Thoongalēriyār, Marutham Thinai – What the heroine’s friend said to the hero
You come here like a festival
With your female attendants
Who compile and wear leaf garments,
adorn ornaments, style their hair
and look splendid!
This village now say that,
Your bad life
possessing just a female buffalo
to earn food
became a festival
Only after this young girl came
with great virtue!
Translated by Palaniappan Vairam Sarathy
Notes:
செரீ – > செருக்கு cerukku 1. [K. seḍaku.] Haughtiness, pride, arrogance, self-conceit; அகந்தை. செருநர் செருக் கறுக்கு மெஃகு (குறள், 759). 2. Exultation, elation; மகிழ்ச்சி. செருக்கொடு நின்ற காலை (பொருந. 89). 3. Daring, intrepidity, courage, as of an army; ஆண்மை. படைச்செருக்கு (குறள், 78, அதி.). 4. Infatuation; intoxication; மயக் கம். யானென தென்னுஞ் செருக்கறுப்பான் (குறள், 346). 5. Wealth; செல்வம். விறலீனும் . . . வேண்டாமை யென்னுஞ் செருக்கு (குறள், 180). 6. Luxury, indulgence, as in bringing up a child; செல்லம். செருக்காய் வளர்ந்த பிள்ளை. Loc.
ஆன்¹ āṉ , n. < ஆ⁸. [M. ān, T. āvu.] 1. Female of the buffalo, ox or deer; எருமை, பெற்றம், மரை இவற்றின் பெண். (திவா.) 2. Ox; இடபம். ஆன்முகத்த னடற்கண நாயகன் (கந்தபு. பானு கோ. 95).
—-
Reference:
Tamil Lexicon – University of Madras
Learn Sangam Tamil
Tamilconcordance.in
Kurunthokai Translation by M.Shanmugam Pillai and David Ludden
——–
உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும்
uṭuttum toṭuttum pūṇṭum cerīiyum
[புதிய ஆடை] உடுத்தியும், [மாலை] தொடுத்தும், [ஆபரணம்] அணிந்தும் அகந்தைக் கொண்டு
Wear – compile/combine – wearing – inserting
தழை அணிப் பொலிந்த ஆயமொடு, துவன்றி
taḻai aṇip polinta āyamoṭu, tuvaṉṟi
[தலையில்] இழை அணிகலன்களுடன் பொலிவுடைய பெண்கள் கூட்டத்துடன்
Leaf garment – wear – prosper/splendid – female attendants – to fill/crowded
விழவொடு வருதி நீயே, இஃதோ
viḻavoṭu varuti nīyē, iHtō
திருவிழா கொண்டாடுவதுப் போல் வருகின்றாய் நீயே! இதனை,
Festival – come – you – here
ஓர் ஆன் வல்சிச் சீர் இல் வாழ்க்கை
ōr āṉ valcic cīr il vāḻkkai
ஒரு எருமையின் உழைப்பில் உணவு உண்டு இருந்த உன் சீரில்லாத வாழ்க்கை
One – ox/female buffalo – food – fine – not – life
பெரு நலக் குறுமகள் வந்தென, 5
peru nalak kuṟumakaḷ vanteṉa, 5
பெரு நலன் கொண்ட இளம் பெண் வந்த பிறகு
Great – good – small girl – come
இனி விழவு ஆயிற்று என்னும் இவ்வூரே.
iṉi viḻavu āyiṟṟu eṉṉum ivvūrē.
இப்பொழுது விழாக்கோலம் ஆயிற்று என்று சொல்லும் இவ்வூர்!
From now – festival – became – say – this village