Love knows no shame – Kurunthokai 231


#MEMEthokai34

Situation: Thalaivi (Heroine) is in love with Thalaivan (hero). Thalaivan is not responsive as he is afraid of gossips. Thalaivi utters this poem which explains her feelings of love and lust.

குறுந்தொகை 231, பாலைபாடிய பெருங்கடுங்கோ, மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஓரூர் வாழினும் சேரி வாரார்,
சேரி வரினும் ஆர முயங்கார்,
ஏதிலாளர் சுடலை போலக்
காணாக் கழிப மன்னே, நாண் அட்டு
நல் அறிவு இழந்த விழுந்த காமம், 5
வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே.

kuṟuntokai 231, pālaipāṭiya peruṅkaṭuṅkō, marutat tiṇai – talaivi tōḻiyiṭam coṉṉatu
ōrūr vāḻiṉum cēri vārār,
cēri variṉum āra muyaṅkār,
ētilāḷar cuṭalai pōlak
kāṇāk kaḻipa maṉṉē, nāṇ aṭṭu
nal aṟivu iḻanta viḻunta kāmam, 5
vil umiḻ kaṇaiyiṉ ceṉṟu cēṇ paṭavē.

குறுந்தொகை 231, பாலைபாடிய பெருங்கடுங்கோ, மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஒரே ஊரில் வாழ்ந்தாலும் என் தெருப்பக்கம் வருவதில்லை,
நம் தெருப்பக்கம் வந்தாலும் என் ஆசைத்தீர கட்டியணைப்பதில்லை,
தெரியாதவர் சுடுகாட்டைக் காண்பது போலக்
கண்டும் காணாமல் செல்கிறார்! என் நாணம் கொன்று
நல் அறிவு இழக்கச்செய்தது என் காமம்,
வில்லில் இருந்து விடுக்கப்பட்ட அம்பைப்போல் நெடுந்தொலைவு சென்று விழுந்தது.

Kurunthokai 231, Pālai Pādiya Perunkadunkō, Marutham Thinai – What the heroine said to her friend
He lives in the same village,
but doesn’t come to our street,
even if he comes to the street,
he doesn’t embrace me to my satisfaction!
He walks past me without seeing me,
as if he passing a strangers cremation!
Love which knows no shame
and loses all good wisdom,
goes a long way,
like arrow released from the bow!

Translated by Palaniappan Vairam Sarathy

Notes:

Can be either street or village. It doesn’t have poverty tag attached to it like present day use.

சேரி cēri , n. < சேர்¹-. 1. Town, village, hamlet; ஊர்.  2. Village of the mullai tract, herdsmen’s village; முல்லைநிலத்தூர் 3. [K. kēri, M. cēri.] Street; தெரு.

—-

Reference:

Tamil Lexicon – University of Madras

Learn Sangam Tamil

Tamilconcordance.in

Kurunthokai Translation by M.Shanmugam Pillai and David Ludden

——–

ஓரூர் வாழினும் சேரி வாரார்,

ōrūr vāḻiṉum cēri vārār,

ஒரே ஊரில் வாழ்ந்தாலும் என் தெருப்பக்கம் வருவதில்லை,

Same village – live/reside – street – not come

சேரி வரினும் ஆர முயங்கார்,

cēri variṉum āra muyaṅkār,

நம் தெருப்பக்கம் வந்தாலும் என் ஆசைத்தீர கட்டியணைப்பதில்லை,

Street- come – to my satisfaction – not embrace/copulate

ஏதிலாளர் சுடலை போலக்

ētilāḷar cuṭalai pōlak

தெரியாதவர் சுடுகாட்டைக் காண்பது போலக்

Others – cremation ground – alike

காணாக் கழிப மன்னே, நாண் அட்டு

kāṇāk kaḻipa maṉṉē, nāṇ aṭṭu

கண்டும் காணாததுபோலச் செல்கிறார்! என் நாணம் கொன்று 

Not see – Pass –  ! – shame – block

நல் அறிவு இழந்த விழுந்த காமம்,  5

nal aṟivu iḻanta viḻunta kāmam,  5

நல் அறிவு இழக்கச்செய்தது என் காமம்,

Good – wisdom – lose – fall – desire/love

வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே.

vil umiḻ kaṇaiyiṉ ceṉṟu cēṇ paṭavē.

வில்லில் இருந்து  விடுக்கப்பட்ட அம்பினைப்போல் நெடுந்தொலைவு சென்று விழுந்தது.

Bow – emit/released – arrow – go – distant – fall down

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.