Wedding Night – Akananooru 136


#MEMEthokai63

Situation: Thalaivan (hero) is wedded to Thalaivi (heroine). They presently have a feud and he thinks about the time they were happy. #MEMEthokai #karkanirka

அகநானூறு 136, விற்றூற்று மூதெயினனார், மருதத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
மைப்பு அறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்,
புள்ளுப் புணர்ந்து இனிய ஆகத் தெள் ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்கத் திங்கள்
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்துக், 5
கடிநகர் புனைந்து கடவுள் பேணிப்,
படு மண முழவொடு பரூஉப்பணை இமிழ,
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்,
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய
மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை 10
பழங்கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்
தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணு மணி அன்ன மா இதழ்ப் பாவைத்
தண் நறுமுகையொடு வெந்நூல் சூட்டித்,
தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி, 15
மழை பட்டன்ன மணன் மலி பந்தர்,
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றித்
தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,
“உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்பு அடுவி!
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப் 20
பெரும் புழுக்குற்ற நின் பிறை நுதல் பொறி வியர்
உறு வளி ஆற்றச் சிறு வரை திற” என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென 25
நாணினள் இறைஞ்சியோளே, பேணிப்
பரூஉப் பகை ஆம்பல் குரூஉத் தொடை நீவிச்,
சுரும்பு இமிர் ஆய் மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே.

akanāṉūṟu 136, viṟṟūṟṟu mūteyiṉaṉār, marutat tiṇai – talaivaṉ taṉ neñciṭam coṉṉatu
maippu aṟap puḻukkiṉ neykkaṉi veṇcōṟu
varaiyā vaṇmaiyoṭu puraiyōrp pēṇip,
puḷḷup puṇarntu iṉiya ākat teḷ oḷi
am kaṇ iru vicumpu viḷaṅkat tiṅkaḷ
cakaṭam maṇṭiya tukaḷ tīr kūṭṭattuk, 5
kaṭinakar puṉaintu kaṭavuḷ pēṇip,
paṭu maṇa muḻavoṭu parūuppaṇai imiḻa,
vatuvai maṇṇiya makaḷir vituppuṟṟup,
pūkkaṇum imaiyār nōkkupu maṟaiya
meṉpū vākaip puṉpuṟak kavaṭṭilai 10
paḻaṅkaṉṟu kaṟitta payampu amal aṟukait
taḻaṅku kural vāṉiṉ talaippeyaṟku īṉṟa
maṇṇu maṇi aṉṉa mā itaḻp pāvait
taṇ naṟumukaiyoṭu vennūl cūṭṭit,
tū uṭaip polintu mēvarat tuvaṉṟi, 15
maḻai paṭṭaṉṉa maṇaṉ mali pantar,
iḻai aṇi ciṟappiṉ peyar viyarppu āṟṟit
tamar namakku ītta talaināḷ iraviṉ,
“uvar nīṅku kaṟpiṉ em uyir uṭampu aṭuvi!
muruṅkāk kaliṅkam muḻuvatum vaḷaiip 20
perum puḻukkuṟṟa niṉ piṟai nutal poṟi viyar
uṟu vaḷi āṟṟac ciṟu varai tiṟa” eṉa
ārva neñcamoṭu pōrvai vavvaliṉ,
uṟai kaḻi vāḷiṉ uruvu peyarntu imaippa,
maṟai tiṟaṉ aṟiyāḷ āki oyyeṉa 25
nāṇiṉaḷ iṟaiñciyōḷē, pēṇip
parūup pakai āmpal kurūut toṭai nīvic,
curumpu imir āy malar vēynta
irum pal kūntal iruḷ maṟai oḷittē.

அகநானூறு 136, விற்றூற்று மூதெயினனார், மருதத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
குற்றம் நீகப்பட்ட இறைச்சியின் கொழுப்பு இளகிய வெண்மையான சோற்றை
அளவு இல்லாமல் ஈகைத்தன்மையுடன் அளித்து, பெரியோரை பேணிப்
பறவையின் சகுனம் கூடிவந்த, தெளிவான ஒளியையுடைய
அழகிய இடத்தில் வானம் பொலிவுடன் இருக்க நிலவு
ரோகிணியைச் சேரும் குற்றமற்ற நல்ல நாளில் உறவினர் சேர்க்கையில்,
திருமண வீட்டை அலங்கரித்து, கடவுளை வேண்டி,
முழங்குகின்ற மண முழவுடன், பெரிய மேளம் ஒலிக்க,
மணமகளை நீராட்டிய மகளிர், விரைவாக/விருப்பத்துடன்,
பூ போன்ற கண்களை இமைக்காமல் நோக்கி மறைந்துகொள்ள,
மென்மையான பூவையுடைய வாகையின் சிறு பின் புறத்தை போல் உள்ள பிளவுபட்ட இலையையும்,
முதிய கன்று கடித்துத் தின்னும் பள்ளத்தில் படர்ந்த அறுகம்புல்லின்
முழங்குகின்ற குரலையுடைய வானத்தில் கூடும் மேகம் ஈன்ற
கழுவிய முத்தைப் போல அழகான இதழையுடையக் குரவ மலரின்
குளிர்ந்த மணமுள்ள மொட்டுக்களுடன் கட்டிய வெண்மையான நூல் மலையை அணிவித்து,
தூய உடை பொலிவுபெற விருப்பத்துடன் நெருங்கிக்கட்டி
மழை பெய்த ஒலியையுடைய பெரிய மணப்பந்தலில்
இழைப் போன்ற அணிகலன்களை அணிந்த அழகுடன், தோன்றிய வியர்வையை தணித்து,
உறவினர் நமக்குத் தந்த முதல்நாள் இரவிலே,
வெறுப்பை நீக்கிய கற்பினையுடைய என் உயிர்க்கு உடம்பாககி சேர்ந்தால்
கசங்காத நல்லாடையை உடம்பு முழுவதும் போர்த்திக்கொண்டதால்
‘பெரும் பபுழுக்கத்தால் உனது பிறை போன்ற நெற்றியில் புள்ளிகளாய் வியர்வைத் துளிகளை
அங்கு வரும் காற்று ஆற்றிவிட சிறிது நேரம் அந்த ஆடையைத் திற’ என்று கூறி,
ஆர்வ நெஞ்சத்துடன் போர்த்தியிருந்த ஆடையை கவர்ந்து இழுத்ததால்
உறையை நீக்கிய வாளினைப் போல அவள் உருவம் வெளிப்பட்டு மின்ன
மேனியை மறைக்கின்ற வழி அறியாதவள் ஆகி விட்டு ஒதுங்க
நாணத்தால் குனிந்து தன் மான்பைப் பாதுகாகப்
பருமனான எதிர் எதிராக கட்டப்பட்ட மின்னும் ஆம்பல் மாலையை நீக்கி
வண்டுகள் ஒலிக்கும் கொய்த மலர்களைச் சூடின
பெரிய செழிப்பான இருண்ட கூந்தலை கொண்டு தன் மேனியை மறைத்தாளே

Akanānūru 136, Vitrootru Mootheyinanār, Marutham Thinai – What the hero said to his heart
They served meat cooked to perfection,
with its fat melted on white rice,
liberally without limit to people gathered
with great hospitality.
At the time when good omens united with
clear beautiful sky where
moon joined the Sadagam (Rohini) star
to remove faults,
the clan decorated the wedding dais
and seeked protection of the god,
with sounds of large pot arising
from the beating muzhavu drums,
and musical instruments.

In preparation for the Vathuvai ceremony,
girls who desired the event and watched
with unblinking eyes like flowers,
hid and bathed her and adorned her with
forked leaves
of soft small flowers of Vakai
along with blossomed flower buds
of kuruvam with washes pearl like beautiful petals
grown in valleys where Arukam grass
spread over pits where mature calfs graze,
tied together by as garland by white thread,
pure cloth which made her desirable,
ornaments which made her beautiful
and wiped her sweat.
In the first night after her kin gave her to me
in the large marriage pavillion,
which sounded roar of the rains,
I said,
“you have come to be the body to my soul
with your learning which removes faults!
you are fully clothed with creaseless dress,
it is hot and your forehead is sweating
why don’t you open your dress a bit
to let the air comfort you?”
Saying so with a heart filled with desire
I snatched her cloth and she glittered
like a sword removed from the sheath,
unable to hide she removed her ambal garland
and hid herself under the Luxuriant black tresses
With fragance of the plucked flowers
Which the bees buzzed
shyness flowed out of her,
she bowed her head
and Pleaded with me!

Translated by Palaniappan Vairam Sarathy

Notes:
மைப்பு அறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு
maippu aṟap puḻukkiṉ neykkaṉi veṇcōṟu
Early biryani style, where meat is cooked with rice, so that meat fat gets mixed with rice [except for Ambur biryani no other indian style of Biryani has ice cooked with meat, they are oly mixed for Dum]

முழவு – muḻavu – this drum is still used and integral part of Kudiyattam of Kerala. Interestingly the female dancers of Kudiyattam are called Viralaiyar, the exact same name of dancers in Sangam age.

அறுகை – aṟukai – arukampull – Cynodon grass

கற்பு¹ kaṟpu – root word is learning. Evolution of the word seems to be that phase of life (married life) which is learning or phase where you act as per learnings (scocial norms and tradition). Eventually we have a meaning of chastity, viginity.

கலிங்கம் – kaliṅkam – fine garment – most likely silk imported from China into Kalinga (Orissa) in the pre sangam age. During Ashoka’s period, Kalinga was still a dravidian language speaking state/country.
பிறை நுதல் – piṟai nutal – crescent moon like forhead


Reference:

University of Madras – Tamil Lexicon

Learn Sangam Tamil

http://tamilconcordance.in/

The four hundred songs of love anthology of poems from classical Tamil, the Akananuru, tr. and annotated by George L. Hart


மைப்பு அறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு

maippu aṟap puḻukkiṉ neykkaṉi veṇcōṟu

குற்றம் நீகப்பட்ட (சுத்தப்படுத்தப்பட்ட) இறைச்சியின் கொழுப்பு இளகிய வெண்மையான சோற்றை

Rot – remove/excellent – meat – fat/ghee- melt – white rice

வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்,

varaiyā vaṇmaiyoṭu puraiyōrp pēṇip,

அளவு இல்லாமல் ஈகைத்தன்மையுடன், பெரியோரை பேணிப்

restrain/limit not – liberally – wise people/people who have gathers – treat with hospitality

புள்ளுப் புணர்ந்து இனிய ஆகத் தெள் ஒளி

puḷḷup puṇarntu iṉiya ākat teḷ oḷi

சகுனம் கூடிவந்த, தெளிவான ஒளியையுடைய

Omens – combine/unite – sweet – become – clear – light

அம் கண் இரு விசும்பு விளங்கத் திங்கள்

am kaṇ iru vicumpu viḷaṅkat tiṅkaḷ

அழகிய இடத்தில் வானம் பொலிவுடன் இருக்க நிலவு

Beautiful – eyes/place  – sky – clear – moon

சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்துக்,  5

cakaṭam maṇṭiya tukaḷ tīr kūṭṭattuk,  5

ரோகிணியைச் சேரும் குற்றமற்ற நல்ல நாளில் உறவினர் சேர்க்கையில்,

Aldebaran/Hyades/Rohini – to come close –  fault – stop/remove – assembly/relatives/clan 

கடி நகர் புனைந்து கடவுள் பேணிப்,

kaṭi nakar puṉaintu kaṭavuḷ pēṇip,

திருமண வீட்டை அலங்கரித்து, கடவுளை வேண்டி,

Wedding – house/hall/dias – adorn/decorated – god – seek protection

படு மண முழவொடு பரூஉப்பணை இமிழ,

paṭu maṇa muḻavoṭu parūuppaṇai imiḻa,

முழங்குகின்ற மண முழவுடன், பெரிய மேளம் ஒலிக்க,

Hit – marriage – drums – large – drum /instrument/pot – sound

வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்,

vatuvai maṇṇiya makaḷir vituppuṟṟup,

மணமகளை நீராட்டிய மகளிர், விரைவாக/விருப்பத்துடன்,

bride – bathe – girls – rushed/desired

பூக்கணும் இமையார் நோக்குபு மறை

pūkkaṇum imaiyār nōkkupu maṟaiya

பூ போன்ற கண்களை இமைக்காமல் நோக்கி மறைந்துகொள்ள,

Flower – eyes – blink not – looked – hide 

மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை  10

meṉpū vākaip puṉpuṟak kavaṭṭilai

மென்மையான பூவையுடைய வாகையின் சிறு பின் புறத்தை போல் உள்ள பிளவுபட்ட இலையை,

Soft flower – vakai – small – back – forked branch/leaf

பழங்கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்

paḻaṅkaṉṟu kaṟitta payampu amal aṟukait

முதிய கன்று கடித்துத் தின்னும் பள்ளத்தில் படர்ந்த அறுகம்புல்லின்

Mature calf – eat/chew – pit – grow thickly – Cynodon grass

தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற

taḻaṅku kural vāṉiṉ talaippeyaṟku īṉṟa

முழங்குகின்ற குரலையுடைய வானத்தில் கூடும் மேகம் ஈன்ற 

Roar – voice – sky – gather as cloud – yield

மண்ணு மணி அன்ன மா இதழ்ப் பாவைத்

maṇṇu maṇi aṉṉa mā itaḻp pāvait

கழுவிய முத்தைப் போல அழகான இதழையுடையக் குரவ   மலரின்

Wash/bath/immerse  – gem/sapphire – alike – big – petal –  Flower of the common bottle-flower tree

தண் நறுமுகையொடு வெந்நூல் சூட்டித்,

taṇ naṟumukaiyoṭu vennūl cūṭṭit,

குளிர்ந்த மணமுள்ள மொட்டுக்களுடன் கட்டிய வெண்மையான நூலை அணிந்து,

Cool – fragrant – opening bud – white – thread – adorn

தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி,  15

tū uṭaip polintu mēvarat tuvaṉṟi,

தூய உடை பொலிவுபெற  விருப்பத்துடன் நெருங்கிக்கட்டி

Pure/clean – cloth – desirable – gather/fill up

மழை பட்டன்ன மணன் மலி பந்தர்,

maḻai paṭṭaṉṉa maṇaṉ mali pantar,

மழை பெய்த  ஒலியையுடைய பெரிய  மணப்பந்தலில்

Rain – sound – marriage – happy/large – pavilion

இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றித்

iḻai aṇi ciṟappiṉ peyar viyarppu āṟṟit

இழைப் போன்ற அணிகலன்களை அணிந்த அழகுடன், தோன்றிய வியர்வையை தணித்து,

Ornament – adorn – flourish /beauty – separated – sweat – remove

தமர் நமக்கு த்த தலைநாள் இரவின்,

tamar namakku ītta talaināḷ iraviṉ,

உறவினர் நமக்குத் தந்த முதல்நாள் இரவிலே,

friend /relative – for us – give – first  day – night

உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்பு அடுவி!

“uvar nīṅku kaṟpiṉ em uyir uṭampu aṭuvi!

வெறுப்பை  நீக்கிய கற்பினையுடைய என் உயிர்க்கு உடம்பாககி சேர்ந்தால்

Faulte – remove – learnings /chastity – my – soul – body – you became/joined

முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப்  20

muruṅkāk kaliṅkam muḻuvatum vaḷaiip  20

கசங்காத நல்லாடையை  உடம்பு முழுவதும் போர்த்திக்கொண்டதால்

Not crushed – dress (fine thread or embroidery) – fully – cover

பெரும் புழுக்குற்ற நின் பிறை நுதல் பொறி வியர்

perum puḻukkuṟṟa niṉ piṟai nutal poṟi viyar

‘பெரும் பபுழுக்கத்தால் உனது பிறை போன்ற நெற்றியில் புள்ளிகளாய் வியர்வைத் துளிகளை

Great – boil/scorching – your – crescent moon – forehead – spot – sweat

உறு வளி ஆற்றச் சிறு வரை திற” என

uṟu vaḷi āṟṟac ciṟu varai tiṟa” eṉa

அங்கு வரும் காற்று ஆற்றிவிட சிறிது நேரம் அந்த ஆடையைத் திற’ என்று கூறி,

Abundant – come in contact – wind – assuage/comfort – little -limit/bit – open – saying

ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,

ārva neñcamoṭu pōrvai vavvaliṉ,

ஆர்வ நெஞ்சத்துடன் போர்த்தியிருந்த ஆடையை கவர்ந்து  இழுத்ததால்

Desire – heart with – covering/upper cloth – snatch

உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,

uṟai kaḻi vāḷiṉ uruvu peyarntu imaippa,

உறையை நீக்கிய வாளினைப் போல அவள் உருவம் வெளிப்பட்டு மின்ன

Cover /sheath – removed – sword – body  – discharge – shine 

மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென 25

maṟai tiṟaṉ aṟiyāḷ āki oyyeṉa 25

மேனியை மறைக்கின்ற வழி அறியாதவள் ஆகி விட்டு ஒதுங்க

Hiding – manner – she who doesnt know  – go away [like flood]

நாணினள் இறைஞ்சியோளே, பேணிப்

nāṇiṉaḷ iṟaiñciyōḷē, pēṇip

நாணத்தால் குனிந்து  தன் மான்பைப் பாதுகாகப்

Shy – she prayed/bowed head – protect

பரூஉப் பகை ஆம்பல் குரூஉத் தொடை நீவிச்,

parūup pakai āmpal kurūut toṭai nīvic,

பருமனான எதிர் எதிராக கட்டப்பட்ட மின்னும் ஆம்பல் மாலையை நீக்கி

Thick – opposite – water lily – shining – garland – remove

சுரும்பு இமிர் ஆய் மலர் வேய்ந்த

curumpu imir āy malar vēynta

வண்டுகள் ஒலிக்கும் கொய்த மலர்களைச் சூடின

Bee- buzz – beautiful/plucked – flower – blossomed

இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே.

irum pal kūntal iruḷ maṟai oḷittē.

பெரிய செழிப்பான  இருண்ட கூந்தலை கொண்டு தன் மேனியை  மறைத்தே

Black – luxuriant – tresses – darkness – concealment – hide

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.