#MEMEthokai64
Situation: Thalaivan (hero) is in love with Thalaivi (Heroine) and is far away to earn wealth. He promised to return before the monsoon rains. Rains have poured, flowers have blossomed. Thalaivi utters this poem. #MEMEthokai #karkanirka
குறுந்தொகை 110, கிள்ளிமங்கலம் கிழார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது அல்லது தோழி தலைவியிடம் சொன்னது
வாரார் ஆயினும், வரினும், அவர் நமக்கு
யார் ஆகியரோ தோழி, நீர
நீலப் பைம்போது உளரிப் புதல
பீலி ஒண் பொறிக் கருவிளை ஆட்டி
நுண் முள் ஈங்கைச் செவ் அரும்பு ஊழ்த்த 5
வண்ணத் துய்ம் மலர் உதிரத் தண்ணென்று
இன்னாது எறிதரும் வாடையொடு
‘என்னாயினள் கொல்’, என்னாதோரே?
kuṟuntokai 110, kiḷḷimaṅkalam kiḻār, mullait tiṇai – talaivi tōḻiyiṭam coṉṉatu allatu tōḻi talaiviyiṭam coṉṉatu
vārār āyiṉum, variṉum, avar namakku
yār ākiyarō tōḻi, nīra
nīlap paimpōtu uḷarip putala
pīli oṇ poṟik karuviḷai āṭṭi
nuṇ muḷ īṅkaic cev arumpu ūḻtta 5
vaṇṇat tuym malar utirat taṇṇeṉṟu
iṉṉātu eṟitarum vāṭaiyoṭu
‘eṉṉāyiṉaḷ kol’, eṉṉātōrē?


குறுந்தொகை 110, கிள்ளிமங்கலம் கிழார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது அல்லது தோழி தலைவியிடம் சொன்னது
வரவில்லை என்றாலும், வந்தாலும் , இனி அவர் நமக்கு
யாராவார் தோழி! நீரிலுள்ள
நீலக்குவளையின் இள மொட்டை ஆசைத்து, புதரிலுள்ள
மயில்தோகையின் ஒளிரும் கண் போன்ற கருவிளம்பூவை ஆட செய்து
நுண்மையான முள்ளையுடைய ஈங்கையின் சிவந்த அரும்புகள் மலர செய்து
வண்ணமிகு பஞ்சசின் நூல் போன்ற மலர் உதிர, குளிர்ச்சியுடன்
துன்பம் தரும் வாடைக்கற்று வீசும்பொழுதும்
“என்ன ஆனால் அவள்?” என்று அவர் என்னவில்லை தோழி!


Kurunthokai 110, Killimangalam Kilār, Mullai Thinai – What the heroine said to her friend or what the friend said to the heroine
My friend he has not come, anyway how is he related to us now?
Even the cool northern winds
which causes misery and make young blue lotus buds in the water to blossom,
mussel shell creeper flowers which look like mark on peacock feather to shake,
many coloured cotton thread like flowers of the touch me not plants to fall,
has not induced him to think,
‘what happened to her?’
Translated by Palaniappan Vairam Sarathy
Notes:



—-
Reference:
Tamil Lexicon – University of Madras
Learn Sangam Tamil
Tamilconcordance.in
—
வாரார் ஆயினும், வரினும், அவர் நமக்கு
vārār āyiṉum, variṉum, avar namakku
வரவில்லை என்றாலும், வந்தாலும் , இனி அவர் நமக்கு
Not come – anyway – come – he – for us
யார் ஆகியரோ தோழி, நீர
yār ākiyarō tōḻi, nīra
யாராவார் தோழி! நீரிலுள்ள
Who – what relation – friend – water
nīlap paimpōtu uḷarip putala
நீலக்குவளையின் இள மொட்டை ஆசைத்து, புதரிலுள்ள
Blue lotus – young bud – spread(blossom) – bush/thicket
pīli oṇ poṟik karuviḷai āṭṭi
மயில்தோகையின் ஒளிரும் கண் போன்ற கருவிளம்பூவை ஆட செய்து
Peacock feather- bright – mark – Mussel-shell Creeper flowers – shake
நுண் முள் ஈங்கைச் செவ் அரும்பு ஊழ்த்த 5
nuṇ muḷ īṅkaic cev arumpu ūḻtta 5
நுண்மையான முள்ளையுடைய ஈங்கையின் சிவந்த அரும்புகள் மலர செய்து
Fine – thorn – Eengai plant – red – bud – blossom
வண்ணத் துய்ம் மலர் உதிரத் தண்ணென்று
vaṇṇat tuym malar utirat taṇṇeṉṟu
வண்ணமிகு பஞ்சசின் நூல் போன்ற மலர் உதிர, குளிர்ச்சியுடன்
Colorful – sensitive – flower – drop/fall – cool
iṉṉātu eṟitarum vāṭaiyoṭu
துன்பம் தரும் வாடைக்கற்று வீசும்பொழுதும்
Causing misery – low -Northern winds along
‘என்னாயினள் கொல்’, என்னாதோரே?
‘eṉṉāyiṉaḷ kol’, eṉṉātōrē?
“என்ன ஆனால் அவள்?” என்று அவர் என்னவில்லை தோழி!
What happened to her? – won’t he think?