#MEMEthokai65
Situation: Thalaivan (hero) who is married to Thalaivi (heroine), is having affairs outside marriage. Thalaivi utters this poem. #MEMEthokai #karkanirka
ஐங்குறுநூறு 70, ஓரம்போகியார், மருதத் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது
பழனப் பன் மீன் அருந்த நாரை,
கழனி மருதின் சென்னிச் சேக்கும்,
மா நீர்ப் பொய்கை யாணர் ஊர!
தூயர் நறியர் நின் பெண்டிர்,
பேஎய் அனையம் யாம், சேய் பயந்தனமே.
aiṅkuṟunūṟu 70, ōrampōkiyār, marutat tiṇai – talaivi talaivaṉiṭam coṉṉatu
paḻaṉap paṉ mīṉ arunta nārai,
kaḻaṉi marutiṉ ceṉṉic cēkkum,
mā nīrp poykai yāṇar ūra!
tūyar naṟiyar niṉ peṇṭir,
pēey aṉaiyam yām, cēy payantaṉamē.


ஐங்குறுநூறு 70, ஓரம்போகியார், மருதத் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது
பொய்கையில் பல மீன்களை உண்ட நாரை
வயலிலுள்ள மருதமரத்தின் உச்சியில் சென்று சேரும்
பெரும் நீரையுடைய பொய்கையுடைய புதுவருவாய் ஈட்டும் ஊரை சேர்ந்தவனே,
தூய்மையும், நறுமணமும் கொண்டவர் உன் பெண்டிர்,
பேயைப் போன்றவள் ஆகிவிட்டேன் நான், ஒரு பிள்ளையை பெற்றதால்.
Ainkurunūru 70, Ōrampōkiyār, Marutham Thinai – What the heroine said to the hero
Man from the wealthy city,
Where egret on the tops
of the Ashoka tree, near the fields,
Eat varieties of fish from the pond,
Your women are pure and fragrant!
I have become a devil
after giving birth to your son!
Notes:
மருது marutu – நீர்மருது nīr-marutu , n. id. +. Arjuna, 1. tr., Terminalia arjuna

—-
Reference:
Tamil Lexicon – University of Madras
Learn Sangam Tamil
Tamilconcordance.in
—
paḻaṉap paṉ mīṉ arunta nārai,
பொய்கையில் பல மீன்களை உண்ட நாரை
Pond – Many – fish – eat – stork/egret/crane
கழனி மருதின் சென்னிச் சேக்கும்,
kaḻaṉi marutiṉ ceṉṉic cēkkum,
வயலிலுள்ள மருதமரத்தின் உச்சியில் சென்று சேரும்
Paddy field – Arjuna tree – top –
மா நீர்ப் பொய்கை யாணர் ஊர!
mā nīrp poykai yāṇar ūra!
பெரும் நீரையுடைய பொய்கையுடைய புதுவருவாய் ஈட்டும் ஊரை சேர்ந்தவனே,
Dark – water – pond – prosperous/wealthy – man from city
தூயர் நறியர் நின் பெண்டிர்,
tūyar naṟiyar niṉ peṇṭir,
தூய்மையும், நறுமணமும் கொண்டவர் உன் பெண்டிர்,
Pure – fragrant/sweet – your- women
பேஎய் அனையம் யாம், சேய் பயந்தனமே.
pēey aṉaiyam yām, cēy payantaṉamē.
பேயைப் போன்றவள் ஆகிவிட்டேன் நான், ஒரு பிள்ளையை பெற்றதால்.
devil/ghost – like/such – I – son – come into existance