was she drunk? – Ainkurunooru 42


#MEMEthokai66

Situation: Thalaivan (hero) who is married to Thalaivi (heroine), is having affairs outside marriage. Thalaivi utters this poem when Thalaivan returns home. #MEMEthokai #karkanirka

ஐங்குறுநூறு 42, ஓரம்போகியார், மருதத் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது
மகிழ் மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ
யாணர் ஊர, நின் மாண் இழை அரிவை?
காவிரி மலிர் நிறை அன்ன நின்
மார்பு நனி விலக்கல் தொடங்கியோளே.

aiṅkuṟunūṟu 42, ōrampōkiyār, marutat tiṇai – talaivi talaivaṉiṭam coṉṉatu
makiḻ mikac ciṟappa mayaṅkiṉaḷ kollō
yāṇar ūra, niṉ māṇ iḻai arivai?
kāviri malir niṟai aṉṉa niṉ
mārpu naṉi vilakkal toṭaṅkiyōḷē.

ஐங்குறுநூறு 42, ஓரம்போகியார், மருதத் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது
அதிகமாக கள் குடித்ததால் பெருகிய மயக்கத்தில் இருக்கிறாளோ,
புதுவருவாய் ஈட்டும் ஊரைச் சேர்த்தவனே உன் அழகிய அணிகலன்கள் அணிந்த பரத்தை?
காவிரி பெருக்கெடுத்து நிறைவது போன்ற உன்னுடைய
மார்பை அதிகமாக விலகத் தொடங்கினாளே!

Ainkurunūru 42, Ōrampōkiyār, Marutham Thinai – What the heroine said
Man from the wealthy city,
your new lover adorning great ornaments
has started to desert your chest,
like people who desert their places
when kaveri floods and reaches it full level!
Was she confused due to excessive drinking?

Translated by Palaniappan Vairam Sarathy

Notes:
மகிழ்² makiḻ , n. < மகிழ்-. 1. Joy, exhilaration; இன்பம். 2. Intoxication from liquor; குடிவெறி. 3. Toddy; மது.

This poem talks about

—-
Reference:
Tamil Lexicon – University of Madras
Learn Sangam Tamil
Tamilconcordance.in
Ainkurunuru translation by P.Jotimuttu

மகிழ் மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ

makiḻ mikac ciṟappa mayaṅkiṉaḷ kollō

அதிகமாக கள் குடித்ததால் பெருகிய மயக்கத்தில் இருக்கிறாளோ,

Intoxication due to Liquor drinking – plenty – confused/bewildered – – did she?

யாணர் ஊர, நின் மாண் இழை அரிவை?

yāṇar ūra, niṉ māṇ iḻai arivai?

புதுவருவாய் ஈட்டும் ஊரைச் சேர்த்தவனே உன் அழகிய அணிகலன்கள் அணிந்த பரத்தை?

prosperous/wealth – man from city – your – great – ornament -lady 

காவிரி மலிர் நிறை அன்ன நின்

kāviri malir niṟai aṉṉa niṉ

காவிரி பெருக்கெடுத்து நிறைவது போன்ற உன்னுடைய

Kaveri river – flood – full – alike – your

மார்பு நனி விலக்கல் தொடங்கியோளே.

mārpu naṉi vilakkal toṭaṅkiyōḷē.

மார்பை அதிகமாக விலகத் தொடங்கினாளே!

Chest -abundant – avoid/move away – began

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.