#MEMEthokai73
Situation: Thalaivan (Hero) is away spending time with other women and has sent a messenger, a singing minstrel/bard to appease his wife/lover (Thalaivi). Seeing the status of Thalaivi being away from Thalaivan, the bard feels pity. #MEMEthokai #Karkanirka
ஐங்குறுநூறு 480, பேயனார், முல்லைத் திணை – பாணன் தலைவனிடம் சொன்னது
நினக்கு யாம் பாணரும் அல்லேம், எமக்கு
நீயுங் குருசிலை யல்லை மாதோ,
நின் வெங்காதலி தனி மனைப் புலம்பி,
ஈரிதழ் உண்கண் உகுத்த
பூசல் கேட்டும், அருளாதோயே.
aiṅkuṟunūṟu 480, pēyaṉār, mullait tiṇai – pāṇaṉ talaivaṉiṭam coṉṉatu
niṉakku yām pāṇarum allēm, emakku
nīyuṅ kurucilai yallai mātō,
niṉ veṅkātali taṉi maṉaip pulampi,
īritaḻ uṇkaṇ ukutta
pūcal kēṭṭum, aruḷātōyē.


ஐங்குறுநூறு 480, பேயனார், முல்லைத் திணை – பாணன் தலைவனிடம் சொன்னது
உனக்கு நான் பாணன் அல்ல; எனக்கு
நீ தலைவனும் அல்ல;
உன்னை விரும்பும் காதலி தனியாக வீட்டில் புலம்பி,
ஈரமான இதழ்களையுடைய மைப்பூசிய கண்கள் வடித்த
அழுகையைக் கேட்டும் இரக்கமில்லாமல் நீ இருப்பதால்!
Ainkurunūru 480, Pēyanār, Mullai Thinai – What the angry bard said to the hero
I am not your bard
You are no more my patron!
You have not shown her mercy,
even after hearing that your separation
has left her grieving alone in your house,
with her khol filled eyes wet from crying!
Translated by Palaniappan Vairam Sarathy
—-
Reference:
Tamil Lexicon – University of Madras
Learn Sangam Tamil
Tamilconcordance.in
—
நினக்கு யாம் பாணரும் அல்லேம், எமக்கு
niṉakku yām pāṇarum allēm, emakku
உனக்கு நான் பாணன் அல்ல; எனக்கு
For you – me – bard – not, for me
nīyuṅ kurucilai yallai mātō,
நீ தலைவனும் அல்ல;
You – patron – not – !
நின் வெங்காதலி தனி மனைப் புலம்பி,
niṉ veṅkātali taṉi maṉaip pulampi,
உன்னை விரும்பும் காதலி தனியாக வீட்டில் புலம்பி,
Your- desirable – lover – alone – house – lonely/lament
īritaḻ uṇkaṇ ukutta
ஈரமான இதழ்களையுடைய மைப்பூசிய கண்கள் வடித்த
Wet – eyelids – Eye painted black on the lower lid – fall/spill
pūcal kēṭṭum, aruḷātōyē.
அழுகையைக் கேட்டும் இரக்கமில்லாமல் நீ இருப்பதால்!
crying – listen – not shower grace