#MEMEthokai74
Situation: Thalaivan (hero) is in love with Thalaivi (Heroine). He has left her to earn wealth and promised to return by monsoon season. Village has started a gossip on his delay. Thalaivi utters this poem. #MEMEthokai #karkanirka
குறுந்தொகை 289, பெருங்கண்ணனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வளர்பிறை போல வழிவழிப் பெருகி,
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழை பிசைந்தனையேம் ஆகிச் சாஅய்
உழையர் அன்மையின் உழப்பது அன்றியும்
மழையும் தோழி மான்று பட்டன்றே, 5
பட்ட மாரி படாஅக் கண்ணும்
அவர் திறத்து இரங்கும் நம்மினும்,
நம் திறத்து இரங்கும் இவ்வழுங்கல் ஊரே.
kuṟuntokai 289, peruṅkaṇṇaṉār, mullait tiṇai – talaivi tōḻiyiṭam coṉṉatu
vaḷarpiṟai pōla vaḻivaḻip peruki,
iṟai vaḷai nekiḻtta evva nōyoṭu
kuḻai picaintaṉaiyēm ākic cāay
uḻaiyar aṉmaiyiṉ uḻappatu aṉṟiyum
maḻaiyum tōḻi māṉṟu paṭṭaṉṟē, 5
paṭṭa māri paṭāak kaṇṇum
avar tiṟattu iraṅkum nammiṉum,
nam tiṟattu iraṅkum ivvaḻuṅkal ūrē.


குறுந்தொகை 287, கச்சிப்பேட்டு நன்னாகையார், முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
வளர்பிறையைப் போல மேலும் மேலும் பெருகி
கை வளையல்களை தளரச்செய்து வருடும் நோயோடு
தளிரைப் பிசைந்ததுப் போல் என்னை மெலித்து,
பக்கத்தில் என் காதலன் இல்லாததால் வருந்தும் மட்டுமின்றி
மழையும் தோழி மிகுதியாக பெய்கின்றதே;
பொழிகின்ற மழை பொழிவதற்கு முன்னரே
அவன் பிரிந்ததற்காக சோகத்தை வெளிப்படுத்தும் நம்மைவிட,
நமக்காக சோகத்தை வெளிப்படுத்தும் இந்த ஆரவாரமிக்க [வெட்டிக்கதைப் பேசும்] ஊர்.
Kurunthokai 289, Perunkannanār, Mullai Thinai – What the heroine said to her friend
Like the Crescent moon,
My distress grows slowly
Crushing me like the sprout
To make me weak and my bangle slip off
My man who is not near me
Causes me pain!
Besides seeing the rain is adding to my woes!
People of the noisy village are more worried about me,
Than I am being worried about the rain
and absence of the man who left us!
Translated by Palaniappan Vairam Sarathy
—-
Reference:
Tamil Lexicon – University of Madras
Learn Sangam Tamil
Tamilconcordance.in
—
vaḷarpiṟai pōla vaḻivaḻip peruki,
வளர்பிறையைப் போல மேலும் மேலும் பெருகி
Crescent/growing moon – alike – overflow – over flow – increase
iṟai vaḷai nekiḻtta evva nōyoṭu
கை வளையல்களை தளரச்செய்து வருடும் நோயோடு
Wrist/forearm – bangle – slip – distress – disease
குழை பிசைந்தனையேம் ஆகிச் சாஅய்
kuḻai picaintaṉaiyēm ākic cāay
தளிரைப் பிசைந்ததுப் போல் என்னை மெலித்து,
Sprout – squeeze/crushed – became – weak /fatigued
உழையர் அன்மை இன் உழப்பது அன்றியும்
uḻaiyar aṉmai iṉ uḻappatu aṉṟiyum
பக்கத்தில் என் காதலன் இல்லாததால் வருந்தும் மட்டுமின்றி
Neighbour (man near me) – not – sweet/past – pain – besides
maḻaiyum tōḻi māṉṟu paṭṭaṉṟē, 5
மழையும் தோழி மிகுதியாக பெய்கின்றதே;
Rain – friend – bewildered – occur
பட்ட மாரி படாஅக் கண்ணும்
paṭṭa māri paṭāak kaṇṇum
பொழிகின்ற மழை பொழிவதற்கு முன்னரே
Strike – rain, not strike – eyes/before/place
அவர் திறத்து இரங்கும் நம்மினும்,
avar tiṟattu iraṅkum nammiṉum,
அவன் பிரிந்ததற்காக சோகத்தை வெளிப்படுத்தும் நம்மைவிட,
His – reveal /let go/open – pity – more than us
நம் திறத்து இரங்கும் இவ்வழுங்கல் ஊரே.
நமக்காக சோகத்தை வெளிப்படுத்தும் இந்த ஆரவாரமிக்க [வெட்டிக்கதைப் பேசும்] ஊர்.
nam tiṟattu iraṅkum ivvaḻuṅkal ūrē
Us – reveal /let go/open – pity – compasionate /noisy – village