#MEMEthokai78
Situation: Thalaivan (hero) is in love with Thalaivi (heroine). He meets her secretly every night. Thozhi (Thalaivi’s friend) utters this poem to explain Thalaivan why Thalaivi couldn’t meet him previous night. #MEMEthokai #karkanirka
குறுந்தொகை 244, கண்ணனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்து,
உரவுக் களிறு போல் வந்து இரவுக் கதவு முயறல்,
கேளேம் அல்லேம், கேட்டனெம் பெரும,
ஓரி முருங்கப் பீலி சாய
நன் மயில் வலைப் பட்டாங்கு, யாம் 5
உயங்குதொறும் முயங்கும் அறன் இல் யாயே.
kuṟuntokai 244, kaṇṇaṉār, kuṟiñcit tiṇai – tōḻi talaivaṉiṭam coṉṉatu
pallōr tuñcu naḷḷeṉ yāmattu,
uravuk kaḷiṟu pōl vantu iravuk katavu muyaṟal,
kēḷēm allēm, kēṭṭaṉem peruma,
ōri muruṅkap pīli cāya
naṉ mayil valaip paṭṭāṅku, yām 5
uyaṅkutoṟum muyaṅkum aṟaṉ il yāyē.


குறுந்தொகை 244, கண்ணனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பலரும் தூங்கும் இருண்ட நடு இரவில்
வலிமையான ஆண்யானை போல் வந்து இரவில் கதவைத் திறக்க முயன்றதை
கேட்காமல் இல்லை, கேட்டேன், தலைவனே!
தலைக்கொண்டை முறியும்படியும், தோகைத் தளர,
நல்ல மயில் வலையில் அகப்பட்டதைப் போல், நான்
வருந்தும்போதெல்லாம் கட்டி அணைக்கின்றாள் அறம் இல்லாத என் தாய்!
Kurunthokai 244, Kannanār, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
You came like bull elephant
And tried to open our night door at the mid night,
when everyone was sleeping,
Don’t think we didnt hear you!
We heard it, my lord!
But were like fine peacocks caught in a net
with their crests crushed and feathers ruined,
as our mother hugged her,
whenever she was distressed
Without any justice!
Translated by Palaniappan Vairam Sarathy
Reference:
University of Madras – Tamil Lexicon
Learn Sangam Tamil
பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்து,
pallōr tuñcu naḷḷeṉ yāmattu,
பலரும் தூங்கும் இருண்ட நடு இரவில்
Many – sleep – middle of – midnight
உரவுக் களிறு போல் வந்து இரவுக் கதவு முயறல்,
uravuk kaḷiṟu pōl vantu iravuk katavu muyaṟal,
வலிமையான ஆண்யானை போல் வந்து இரவில் கதவைத் திறக்க முயன்றதை
strong-Male elephant – alike – come – night – door – effort
கேளேம் அல்லேம், கேட்டனெம் பெரும,
kēḷēm allēm, kēṭṭaṉem peruma,
கேட்காமல் இல்லை, கேட்டேன், தலைவனே!
Listen – we did – listened – lord
ōri muruṅkap pīli cāya
தலைக்கொண்டை முறியும்படியும், தோகைத் தளர,
Crest -Crush- peacock feather – ruin
நன் மயில் வலைப் பட்டாங்கு, யாம் 5
naṉ mayil valaip paṭṭāṅku, yām 5
நல்ல மயில் வலையில் அகப்பட்டதைப் போல், நான்
Good peacock – net – caught – me
உயங்குதொறும் முயங்கும் அறன் இல் யாயே.
uyaṅkutoṟum muyaṅkum aṟaṉ il yāyē.
வருந்தும்போதெல்லாம் கட்டி அணைக்கின்றாள் அறம் இல்லாத என் தாய்!
Whenever distressed – embrace/hug – justice – less – mother