He doesn’t hug me any more – Akananooru 26


#MEMEthokai75

Situation: Thalaivan (hero) who is married to Thalaivi (heroine) and is going after other women after their child birth. Thalaivi feels insecure about her own body and feels she is the reason why Thalaivan is going behind other women. #MEMEthokai #karkanirka

அகநானூறு 26, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி, மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கூன் முள் முள்ளிக் குவி குலைக் கழன்ற,
மீன் முள்ளன்ன, வெண்கால் மா மலர்
பொய்தல் மகளிர் விழவு அணி கூட்டும்
அவ் வயல் தண்ணிய வளங்கேழ் ஊரனைப்
புலத்தல் கூடுமோ தோழி? அல்கல் 5
பெருங்கதவு பொருத யானை மருப்பின்
இரும்பு செய் தொடியின் ஏர ஆகி,
மாக்கண் அடைய மார்பகம் பொருந்தி
“முயங்கல் விடாஅல் இவை” என மயங்கி,
யான் “ஓம்” என்னவும் ஒல்லார் தாம், மற்று 10
இவை பாராட்டிய பருவமும் உளவே, இனியே
புதல்வன் தடுத்த பாலொடு தடைஇத்,
திதலை அணிந்த தேம் கொள் மென் முலை
நறுஞ்சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம்
வீங்க முயங்கல் யாம் வேண்டினமே, 15
தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே, ஆயிடைக்
கவவுக் கை நெகிழ்ந்தமை போற்றி, மதவு நடைச்
செவிலி கை என் புதல்வனை நோக்கி,
“நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர், இஃதோ
செல்வற்கு ஒத்தனம் யாம்” என மெல்ல என் 20
மகன் வயின் பெயர்தந்தேனே, அதுகண்டு
“யாமும் காதலம் அவற்கு” எனச் சாஅய்
சிறுபுறம் கவையினனாக, உறு பெயல்
தண் துளிக்கு ஏற்ற பல உழு செஞ்செய்
மண் போல் நெகிழ்ந்து, அவன் கலுழ்ந்தே 25
நெஞ்சு அறை போகிய அறிவினேற்கே? 26

akanāṉūṟu 26, pāṇṭiyaṉ kāṉappēreyil tanta ukkirapperuvaḻuti, marutat tiṇai – talaivi tōḻiyiṭam coṉṉatu
kūṉ muḷ muḷḷik kuvi kulaik kaḻaṉṟa,
mīṉ muḷḷaṉṉa, veṇkāl mā malar
poytal makaḷir viḻavu aṇi kūṭṭum
av vayal taṇṇiya vaḷaṅkēḻ ūraṉaip
pulattal kūṭumō tōḻi? alkal 5
peruṅkatavu poruta yāṉai maruppiṉ
irumpu cey toṭiyiṉ ēra āki,
mākkaṇ aṭaiya mārpakam porunti
“muyaṅkal viṭāal ivai” eṉa mayaṅki,
yāṉ “ōm” eṉṉavum ollār tām, maṟṟu 10
ivai pārāṭṭiya paruvamum uḷavē, iṉiyē
putalvaṉ taṭutta pāloṭu taṭaiit,
titalai aṇinta tēm koḷ meṉ mulai
naṟuñcāntu aṇinta kēḻ kiḷar akalam
vīṅka muyaṅkal yām vēṇṭiṉamē, 15
tīm pāl paṭutal tām añciṉarē, āyiṭaik
kavavuk kai nekiḻntamai pōṟṟi, matavu naṭaic
cevili kai eṉ putalvaṉai nōkki,
“nallōrkku ottaṉir nīyir, iHtō
celvaṟku ottaṉam yām” eṉa mella eṉ 20
makaṉ vayiṉ peyartantēṉē, atukaṇṭu
“yāmum kātalam avaṟku” eṉac cāay
ciṟupuṟam kavaiyiṉaṉāka, uṟu peyal
taṇ tuḷikku ēṟṟa pala uḻu ceñcey
maṇ pōl nekiḻntu, avaṉ kaluḻntē 25
neñcu aṟai pōkiya aṟiviṉēṟkē? 26

அகநானூறு 26, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி, மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வளைந்த முள்ளை உடைய முள்ளிச் செடியின் குவிந்த குலையிலிருந்து கழன்ற
மீனின் முள் போல வெண் காம்புகளைக்கொண்டக் கரிய மலர்களை,
எடுத்த மகளிர் திருவிழா செல்ல அணிய சேர்க்கும்
அழகிய வயல்களைக் கொண்ட வளம் மிகுந்த ஊரை சேர்த்தவனை
வெறுக்க முடியுமா தோழி? தினம்தோறும்,
பெரிய கதவினைகத் தாக்கிய யானையின் தந்தங்களில் உள்ள
இரும்பில் செய்த தொடியின் அழகினைக் கொண்ட,
கரிய முலைக்காம்பை அடைய மார்பகத்தில் பொருந்தி
“கட்டியணைப்பதை விட இயலாமல் தடுப்பவை இவை (முலைக்காம்பு)” என்று அவர் கூற, பரவசத்தில்
நான் “விடு” என்று கூறவும் உடன்படாமல், தாம் மேலும்
இவற்றைப் பாராட்டிய பருவமும் உள்ளன; இப்பொழுதோ,
புதல்வனுக்காக தேக்கப்பட்ட பாலுடன் சரியும்/தொங்கும்
அழகுத் தேமலை அணிந்த இனிமை கொண்ட மெல்லிய முலை
நறுமணமிக்க சாந்து அணிந்த ஒளிரும் (தலைவனின்) மார்பில்,
வீங்கும்படி அணைக்க நான் வேண்டினேன்,
இனிய (தாய்) பால் படுதலை அவர் அஞ்சினார்; அப்போது,
(முன்பு)அணைத்த கை (இப்போது) நீங்குதலைக் கண்டு, ஆர்வ நடையுள்ள
செவிலியின் கையிலுள்ள என் புதல்வனை நோக்கி
[என்னைவிட அழகான பெண்களுக்கு] நல்லாருக்கு தகுதியானவள் நீ, இதோ
செல்வனுக்கு தகுதியானவன் நான் எனறு சொல்லி, மெல்ல என்
மகனிடத்திற்குச் சென்றேன்; அதைக் கண்டு
‘நானும் காதல்கொண்டேன் அவனிடம்’ எனக் குனிந்து
என் முதுகினைச் அணைத்துக்கொண்டவனாக, மிகுந்த மழையின்
குளிர்ந்த துளிகளை ஏற்று, பல முறை உழுத செம்மையான வயல்
மண் போல நெகிழ்ந்து அவனுக்காகக் உருகிய
நெஞ்சு அலைமோதியதே [என்னை ஏமாற்றும்] சான்றோன் அல்லாத அவனிடம்

Akanānūru 26, Pāndiyan Kānapēreyil Thantha Ukkira Peruvazhuthi, Marutham Thinai – What the heroine said to her friend
In his town with beautiful, cool, fertile paddy fields,
Girls gather dark flowers fallen from crowded blossoms of
Mulli with curvy thorns with white stemmed big flower
Like fish bones, as ornaments for their festival,
How could I sulk at him my friend!
There were nights when he would embrace my chest
Making my dark nipples appear like the iron rings
on the Elephant tusks which battered large gates
and said ‘ do not let go of the embrace’
confused, I would say ‘stop/give up’,
he would not agree besides, he would celebrate/praise them!
Henceforth, with my breast covered with yellow spots
sagging with sweet milk stored for my son,
I Prayed for the sweet embraces of his shining chest
smeared with fragrant sandal paste,
who is afraid that my sweet milk may spill on him!
Here, seeing the hands that embraced me,
Ignoring me now, I said looking at my son’s Ignorant walk on
my foster mother’s hand “ You are fit for your good women!
I am fit for my son!”
Seeing me slowly walked towards my son,
he stooped down and hugged me from behind,
saying “I too love him!”, I melted
like the ploughed red soil which accepted cool drops
of the falling showers and my mind left me
to join him who is not a wise man!

Translated by Palaniappan Vairam Sarathy

Notes:
முள்ளி¹ muḷḷi – Thorny plant , by description here, it looks like நீர்முள்ளி nīr-muḷḷi – Water thorn – Hygrophila spinosa பூடுவகை

Breast milk seems to reduce power of warriors per legends and hence Thalaivan is afraid to hug her from the front

Reference:

University of Madras – Tamil Lexicon

Learn Sangam Tamil

http://tamilconcordance.in/

The four hundred songs of love anthology of poems from classical Tamil, the Akananuru, tr. and annotated by George L. Hart


கூன் முள் முள்ளிக் குவி குலைக் கழன்ற,

kūṉ muḷ muḷḷik kuvi kulaik kaḻaṉṟa,

வளைந்த முள்ளை உடைய முள்ளிச் செடியின் குவிந்த குலையிலிருந்து கழன்ற

Curved -thorned – thorny plants – crowded – flower clusters – loosen/remove

மீன் முள்ளன்ன, வெண்கால் மா மலர்

mīṉ muḷḷaṉṉa, veṇkāl mā malar

மீனின் முள் போல வெண் காம்புகளைக்கொண்டக் கரிய மலர்களை,

Fish – bones alike – white/bright – stem – dark – flower

பொய்தல் மகளிர் விழவு அணி கூட்டும்

poytal makaḷir viḻavu aṇi kūṭṭum

பிடிங்கி மகளிர் திருவிழா செல்ல அணிய சேர்க்கும்

Pull out- women- festival – assembly/decoration/ornament – join/combine

அவ் வயல் தண்ணிய வளங்கேழ் ஊரனைப்

av vayal taṇṇiya vaḷaṅkēḻ ūraṉaip 

அழகிய வயல்களைக் கொண்ட வளம் மிகுந்த ஊரை சேர்த்தவனை

Beautiful – paddy field – cool – fertile – man from village

புலத்தல் கூடுமோ தோழி? அல்கல்  5

pulattal kūṭumō tōḻi? Alkal

வெறுக்க முடியுமா தோழி? தினம்தோறும்,

sulk/displeased – possible? – friend – night/afternoon

பெருங்கதவு பொருத யானை மருப்பின்

peruṅkatavu poruta yāṉai maruppiṉ

பெரிய கதவினைகத் தாக்கிய யானையின் தந்தங்களில் உள்ள

Big – gates/door – dash/collison – elephant – tusk

இரும்பு செய் தொடியின் ஏர ஆகி,

irumpu cey toṭiyiṉ ēra āki,

இரும்பில் செய்த தொடியின் அழகினைக் கொண்ட,

Iron – made – ring – fine appearance/raise – become

மாக்கண் அடைய மார்பகம் பொருந்தி

mākkaṇ aṭaiya mārpakam porunti

கரிய முலைக்காம்பை அடைய மார்பகத்தில் பொருந்தி

big/dark – nipple/eyes – become/arrive –  breast – collide/join  

முயங்கல் விடாஅல் இவை” என மயங்கி,

“muyaṅkal viṭāal ivai” eṉa mayaṅki,

“கட்டியணைப்பதை விட இயலாமல் தடுப்பவை இவை (முலைக்காம்பு)” என்று அவர் கூற, பரவசத்தில்

Embrace – do not let – these – thus – confused/bewildered

யான் “ஓம்” என்னவும் ஒல்லார் தாம், மற்று  10

yāṉ “ōm” eṉṉavum ollār tām, maṟṟu  10

நான் “விடு” என்று கூறவும் உடன்படாமல், தாம் மேலும்

Me – to cease – say – not possible/reconcile – him – besides

இவை பாராட்டிய பருவமும் உளவே, இனியே

ivai pārāṭṭiya paruvamum uḷavē, iṉiyē

இவற்றைப் பாராட்டிய பருவமும் உள்ளன; இப்பொழுதோ,

These – celebrate/praise – time – was there – henceforth

புதல்வன் தடுத்த பாலொடு தடைஇத்,

putalvaṉ taṭutta pāloṭu taṭaiit,

புதல்வனுக்காக தேக்கப்பட்ட பாலுடன் சரியும்/தொங்கும்

Son – stored – milk along – droop

திதலை அணிந்த தேம் கொள் மென் முலை

titalai aṇinta tēm koḷ meṉ mulai

அழகுத் தேமலை அணிந்த இனிமை கொண்ட மெல்லிய முலை

Yellow spots – wear – sweet – acquire/possess – soft – breast

நறுஞ்சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம்

naṟuñcāntu aṇinta kēḻ kiḷar akalam

நறுமணமிக்க சாந்து அணிந்த ஒளிரும் (தலைவனின்) மார்பில்,

Fragrant – sandal – wear – bright/lustrous – rise/shine – wide/chest

வீங்க முயங்கல் யாம் வேண்டினமே,  15

vīṅka muyaṅkal yām vēṇṭiṉamē

வீங்கும்படி அணைக்க நான் வேண்டினேன்,

Swell – embrace – myself – prayed

தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே, ஆயிடைக்

tīm pāl paṭutal tām añciṉarē, āyiṭaik

இனிய (தாய்) பால் படுதலை அவர் அஞ்சினார்; அப்போது,

Sweet – milk – touch – he – afraid – that place

கவவுக் கை நெகிழ்ந்தமை போற்றி, மதவு நடைச்

kavavuk kai nekiḻntamai pōṟṟi, matavu naṭaic

(முன்பு)அணைத்த கை (இப்போது) நீங்குதலைக் கண்டு, ஆர்வ நடையுள்ள

hug/embrace – hand – relent/forsake – praise – beautiful/ignorant – walk

செவிலி கை என் புதல்வனை நோக்கி,

cevili kai eṉ putalvaṉai nōkki,

செவிலியின் கையிலுள்ள என் புதல்வனை நோக்கி

Foster mother – hand – son – see

“நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர், இஃதோ

“nallōrkku ottaṉir nīyir, iHtō

நல்லாருக்கு தகுதியானவள் நீ, இதோ

Good people/ – fit – you – here

செல்வற்கு ஒத்தனம் யாம்” என மெல்ல என்  20

celvaṟku ottaṉam yām” eṉa mella eṉ

செல்வனுக்கு தகுதியானவன் நான் எனறு சொல்லி, மெல்ல என்

son – fit – me  – thus – slow – my

மகன் வயின் பெயர்தந்தேனே, அதுகண்டு

makaṉ vayiṉ peyartantēṉē, atukaṇṭu

மகனிடத்திற்குச் சென்றேன்; அதைக் கண்டு

Son – place – went – seeing that 

“யாமும் காதலம் அவற்கு” எனச் சாஅய்

“yāmum kātalam avaṟku” eṉac cāay

‘நானும் காதல்கொண்டேன் அவனிடம்’ எனக் குனிந்து

Myself too – love – him – saying – bend down/stoop

சிறுபுறம் கவையினனாக, உறு பெயல்

ciṟupuṟam kavaiyiṉaṉāka, uṟu peyal

என் முதுகினைச் அணைத்துக்கொண்டவனாக, மிகுந்த மழையின்

Back – hug – fall/commence/ desire/abundant – shower/rain

தண் துளிக்கு ஏற்ற பல உழு செஞ்செய்

taṇ tuḷikku ēṟṟa pala uḻu ceñcey

குளிர்ந்த துளிகளை ஏற்று, பல முறை உழுத செம்மையான வயல்

Cool – drops – accept – many – plough – red wet field

மண் போல் நெகிழ்ந்து, அவன் கலுழ்ந்தே  25

maṇ pōl nekiḻntu, avaṉ kaluḻntē 

மண் போல நெகிழ்ந்து அவனுக்காகக் உருகிய

Sand – alike – melted/became soft – his – troubled/disturbed/join

நெஞ்சு அறை போகிய அறிவினேற்கே?  26

neñcu aṟai pōkiya aṟiviṉēṟkē?

நெஞ்சு அலைமோதியதே [என்னை ஏமாற்றும்] சான்றோன் அல்லாத அவனிடம்

Mind – cease/disappear/move like wave – go – to not wise man

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.