King who gave his head as a gift!-purananuru-164-165


Kumanan was the chieftain/King of a mountain called Mutiram. His younger brother was jealous of him , so Kumanan gives his Kingdom to his younger brother and goes tot he forest. The younger brother puts a price on his head.

A poet Perunthalaic Cattanar who couldnt bare his poverty any more approaches Kumanan whose his known for helping the needy.The poet dosent know that there is a price put up for his head.

Kumanan hears the plight of the poet. But he has nothing to offer him. Kumanan knowing there is a price put up for his head, offers the poet his sword and asks him to take his head and give to his brother and get the reward.

The two poems from Purananuru sung by Perunthalaic Cattanar describe these events.

164

ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின்
ஆம்பி பூப்ப, தேம்பு பசி உழவா,
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி,
இல்லி தூர்ந்த பொல்லா வறு முலை
5 சுவைத்தொறு அழூஉம் தன் மகத்து முகம் நோக்கி,
நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழைக்கண் என்
மனையோள் எவ்வம் நோக்கி, நினைஇ,
நிற் படர்ந்திசினே நல் போர்க் குமண!
என் நிலை அறிந்தனைஆயின், இந் நிலைத்
10 தொடுத்தும் கொள்ளாது அமையலென் அடுக்கிய
பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ்,
மண் அமை முழவின், வயிரியர்
இன்மை தீர்க்கும் குடிப் பிறந்தோயே.

திணை அது; துறை பரிசில் கடாநிலை.
தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

Mushroom are growing on my clay oven because it has never been worn down!

It stands as high as ever ! It has utterly forgotten how to cook!

I have seen my wife suffering , anguished by the gnawing of her hunger.

Her eyes are with her moist lashed are like rain, filled with tears

as she looks down at the face of her infant, who cries each and every time

he tries to suck her ugly,milk less breast,

its duct closed up and the skin as dry as leather!

I have considered all this and I have come to you , Kumanan skilled in battle !

Once you have learned how I stand,what state I am in ,

I will never leave until I have been given something , even if I have to force you!

For you were born in the line that lightens the poverty of dancers

whose good hide covered Yaals have the strings tuned for each raaga ,

whose drum heads are smeared with clay to be struck!

Perunthalaic Cattanar sings Kumanan whose kingdom has been taken by his younger brother and is living in forest.

டுதலை மிகவும் மறந்தபுடையோங்கிய அடுப்பின்கண் காளாம்பி (காளான்)பூப்ப உடம்புமெலியும் பசியான்வருந்திப் பாலின்மையால்தோலாந்தன்மையுடனே திரங்கித் துளைதூர்ந்த பொல்லாதவறிய முலையை வறிதே சுவைக்குந்தோறும் அழுகின்ற தனதுபிள்ளையது முகத்தைப் பார்த்து நீரால் நிரம்பியஈரிய இமையையுடைய குளிர்ந்த கண்ணையுடைய, என் மனைவியதுவருத்தத்தைப் பார்த்து இந்தவருத்தம் தீர்த்தற்குரியாய்நீயென நினைந்து நின்பால் வந்தேன்; நல்லபோரையுடையகுமண! எனது வறுமைநிலையை நீ அறிந்தாயாயின், இவ்வாறுவறுமையுற்றுநின்ற நிலைமைக்கண் வளைத்தாயினும் பரிசில்கொள்ளாதுவிடேன்; பலவாக அடுக்கப்பட்ட பண்ணுதலமைந்த நரம்பினையுடையதோலாற்போர்க்கப்பட்ட நல்ல யாழையும் மார்ச்சனைநிறைந்த மத்தளத்தினையுமுடைய கூத்தரது மிடியைக்கெடுக்கும் குடியின்கட் பிறந்தோயாதலால்-எ – று.

அடுதலை மிகவும் மறத்தலால் தேய்பின்றிஉயர்ந்த அடுப்பென்றாராம்.

குமண! நீ இன்மைதீர்க்கும்குடிப்பிறந்தோயாதலால் இந்நிலைத் தொடுத்தும்கொள்ளாது அமையலென் எனக் கூட்டுக.

……….

…..

..

165
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே;
துன் அருஞ் சிறப்பின் உயர்ந்த செல்வர்,
இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின்,
5 தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே;
தாள் தாழ் படு மணி இரட்டும், பூ நுதல்,
ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகாக்
கேடு இல் நல் இசை வய மான் தோன்றலைப்
பாடி நின்றனெனாக, ‘கொன்னே
10 பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என
நாடு இழந்ததனினும் நனி இன்னாது’ என,
வாள் தந்தனனே, தலை எனக்கு ஈய,
தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின்;
ஆடு மலி உவகையொடு வருவல்,
15 ஓடாப் பூட்கை நின் கிழமையோற் கண்டே.

திணை அது; துறை பரிசில் விடை.
தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைக் கண்டு, அவன் தன் வாள் கொடுப்பக் கொண்டு வந்து, இளங் குமணற்குக் காட்டி, பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

Men who have wished permanence in this impermanent world

have established thier fame before they vanished.

Men of fabulous wealth,

un approachable in greatness,

have failed to be counted among the ancient ones

because they did not give to suppliants in need.

As I stood singing that King whose horses are swift,

whose good fame has no blemish,

who gives to singers war elephants

with decorated forehead

and bell dangling to their feet as they rings with each step,

he said,

“If a worthy suppliant leaves empty handed,

its worse than losing my kingdom,”

and he gave his sword and offered his head,

for he had nothing to give but himself.

I have come here to see you now

overwhelmed with joy as if from a victory

for I have seen your lord and his unyielding determination.

Perunthalaic Cattanar,after seeing Kumanan and after being given his sword,brought it ,showed it to Ilankumanan [Kumanan’s younger brother] and sang this song.

எப்பொருளும்நிலையாத இவ்வுலகத்தின்கண் நிலைபெறுதலைக்கருதினோர் தம்முடைய புகழைப் பூமியிடத்தே நிறுத்தித்தாங்கள் இறந்தார்; நணுகுதற்கரிய தலைமையையுடையமிக்கசெல்வர், வறுமையால் இரப்போர்க்குக் கொடாமையிற்பழைய வண்மையையுடைய மாக்கள்போலப் பின்னும் தம்பெயரைநிறுத்தி உலகோடு தொடர்ந்து போதுதலை அறியார்;தாளின்கண் தாழ்ந்த ஓசையையுடைய மணி ஒன்றற்கொன்றுமாறியொலிக்கும் புகர்நுதலையுடைய வென்றியியன்றயானையைப் பாவலர்க்கு மிகக்கொடுக்கும் அழிவில்லாதநல்ல புகழையுடைய வலிய குதிரையையுடைய தலைவனைப்பாடிநின்றேனாக, பயனின்றியே பெருமைபெற்ற பரிசிலன்வாடினனாகப் பெயர்தல் எனது நாட்டை இழந்ததனினும்மிக இன்னாதென நினைந்து வாளைத் தந்தான், தனதுதலையை எனக்குத் தருவானாக, ஆங்குத் தருதற்குத் தன்னிற்சிறந்த பொருள் வேறொன்றில்லாமையின்; வென்றிமிக்கஉவகையான் வந்தேன், புறக்கொடாத மேற்கோளையுடையநின் தமையனைக் கண்டு-எ – று.

வருவலென்பது காலமயக்கம்.

மன்னுதல்குறித்தோர்புகழ்நிறுத்துதலும், புகழ்நிறுத்தாதோர் மன்னாராதலும்இவ்வாறன்றோ வென்பது கருத்தாகக் கொள்க.

நின் கிழமையோற்கண்டுவருவலெனவும், வயமான் தோன்றலைப் பாடி நின்றேனாகப்பரிசிலன் கொன்னே பெயர்தல் இழந்ததனினும் இன்னாதெனத்தன்னிற்சிறந்தது பறிதொன்றின்மையின், தலை எமக்கீயவாள்தந்தனன் ஆதலால், ஆடுமலியுவகையின்வருவலெனவும் கூட்டுக.

Translated by George L Hart and Hank Heifetz (George L Hart had pure English Translations in his Poets of Tamil Anthologies book. It was crisp and poem like. Translations in Purananuru by George L Hart and Hank Heifetz have more detailed and nearly word to word precise translation. I have taken lines from both the translations and posted a mixed version here in my blog.)

Tamil Urai: U.V.Swaminathan Iyer

The poet calls Kumanan as Illankumanan’s lord since he is his elder brother.But he means to imply that Kumanan is a great man as well.

Please post your comments.
Here is the link for my orkut community for this blog http://www.orkut.com/Community.aspx?cmm=49797549&refresh=1

Digg!Top Blogs

Stumble It!

Advertisement

1 Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.