#MEMEthokai3
Situation: Thalaivan (Hero), has seen Thalaivi (heroine) and is smitten by her. He wants to see her again and again. He realized that he is wasting his life due to his desire to see her. He comes up with a beautiful simile to describe his situation. Tasmac boys 2000 years ago!
Full poem below
குறுந்தொகை 165, பரணர், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
மகிழ்ந்ததன் தலையும் நற உண்டாங்கு,
விழைந்த தன் தலையும் நீ வெய்துற்றனை,
அருங்கரை நின்ற உப்பு ஒய் சகடம்
பெரும் பெயல் தலைய வீந்தாங்கு, இவள்
இரும் பல் கூந்தல் இயல் அணி கண்டே. 5
kuṟuntokai 165, paraṇar, kuṟiñcit tiṇai – talaivaṉ taṉ neñciṭam coṉṉatu
makiḻntataṉ talaiyum naṟa uṇṭāṅku,
viḻainta taṉ talaiyum nī veytuṟṟaṉai,
aruṅkarai niṉṟa uppu oy cakaṭam
perum peyal talaiya vīntāṅku, ivaḷ
irum pal kūntal iyal aṇi kaṇṭē. 5

Kurunthokai 165, Paranar, Kurinji Thinai – What the hero said to his heart
Like an intoxicated man,
carving to drink more wine,
My desire
to see the beauty of the girl,
with dark, stylish tresses,
spread distress across,
like the salt washed away
by the great rain
as the cart stands on a difficult bank!
Poet :Paranar
Translated by Palaniappan Vairam Sarathy

குறுந்தொகை 165, பரணர், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
கடினமான மணற்கரையில் நின்ற உப்பை இழுத்துச் செல்லும் வண்டி
பெரும் மழை பெய்தலால் பயனில்லாமல் போனது போல்,
இவளின் கருமை நிறைந்த கூந்தலின் இயற்கை அழகைக் கண்டு
போதையில் உள்ள ஒருவன் மீண்டும் மீண்டும் கள் குடிப்பதைப்போல
அவளைக் காண விரும்பிய பின்னும் மேலும் மேலும் காண விரும்புகின்றாய்!
—————————
Reference:
University of Madras – Tamil Lexicon
Learn Sangam Tamil
—————————————–
குறுந்தொகை 165, பரணர், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
மகிழ்ந்ததன் தலையும் நற உண்டாங்கு,
makiḻntataṉ talaiyum naṟa uṇṭāṅku,
போதையில் உள்ள ஒருவன் மீண்டும் மீண்டும் கள் குடிப்பதைப்போல
Intoxicated man – liberally – fragrant wine – drink
விழைந்த தன் தலையும் நீ வெய்துற்றனை,
viḻainta taṉ talaiyum nī veytuṟṟaṉai,
விரும்பிய பின்னரும் மேலும் விரும்புகின்றாய்!
Desire – spread – you – distress
அருங்கரை நின்ற உப்பு ஒய் சகடம்
aruṅkarai niṉṟa uppu oy cakaṭam
கடினமான மணற்கரையில் நின்ற உப்பை இழுத்துச் செல்லும் வண்டி
Difficult – bank – stand – salt – drag – cart
பெரும் பெயல் தலைய வீந்தாங்கு, இவள்
perum peyal talaiya vīntāṅku, ivaḷ
பெரும் மழை பெய்தலால் பயனில்லாமல் போனது போல், இவளின்
Big – rain – give away – spoil/drain – she
இரும் பல் கூந்தல் இயல் அணி கண்டே. 5
irum pal kūntal iyal aṇi kaṇṭē. 5
கருமை நிறைந்த கூந்தலின் இயற்கை அழகைக் கண்டு
two/dark – diverse – tresses – characteristic – beauty – see