Tell them I am coming – kalithokai 102


#MEMEthokai2

Situation: Group of herdsmen arrives at Jallikattu arena. A young man (Thalaivan – hero) is smitten by a young girl (Thalaivi heroine) and asks his friend who she is. He comes to know that she is the girl who will be the grand prize of any one taming her violent bull. Thalaivan (Hero) announces his arrival for the competition in Kabali movie fashion. Does he win the hand of the girl or does he die?

Here is the full poem for you.

Note: Kalithokai is late Sangam, technically not Sangam but tagged to Sangam. These poems may be 400 to 600 CE. These set of Mullai poems are key to prove that Jallikattu or Aru Thaluval is traditional Tamil sport.

கலித்தொகை 102
சோழன் நல்லுருத்திரன், முல்லை, தலைவனும், தோழனும், பிறரும் சொன்னது

தலைவன்:

கண் அகல் இரு விசும்பில் கதழ் பெயல் கலந்து, ஏற்ற
தண் நறு பிடவமும், தவழ் கொடித் தளவமும்
வண்ண வண் தோன்றியும், வயங்கு இணர்க் கொன்றையும்
அன்னவை பிறவும், பல் மலர் துதையத்
தழையும் கோதையும் இழையும் என்று இவை 5
தைஇயினர், மகிழ்ந்து திளைஇ விளையாடும்
மட மொழி ஆயத்தவருள் இவள் யார், உடம்போடு
என் உயிர் புக்கவள், இன்று?

தோழன்:

ஓஒ! இவள் பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால்,
திரு மா மெய் தீண்டலர் என்று கருமமா, 10
எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும்
சொல்லால் தரப்பட்டவள்.

தலைவன்:

சொல்லுக……………………………………………………………..

சுற்றத்தார்:

…………………”பாணியேம்” என்றார்; “அறைக” என்றார்; பாரித்தார்
மாண் இழை ஆறு ஆகச் சாறு.
சாற்றுள் பெடை அன்னார் கண் பூத்து நோக்கும் வாய் எல்லாம் 15
மிடை பெறின், நேராத் தகைத்து,

தகை வகை மிசை மிசைப் பாயியர் ஆர்த்து, உடன்
எதிர் எதிர் சென்றார் பலர்.
கொலை மலி சிலை செறி செயிர் அயர் சினஞ் சிறந்து,
உருத்து எழுந்து ஓடின்று மேல். 20
எழுந்தது துகள்,
ஏற்றனர் மார்பு,
கவிழ்ந்தன மருப்பு,
கலங்கினர் பலர்.

அவருள் மலர் மலி புகல் எழ, அலர் மலி மணிபுரை நிமிர்தோள் பிணைஇ 25
எருத்தோடு இமில் இடைத் தோன்றினன்; தோன்றி,
வருத்தினான் மன்ற அவ் ஏறு,
ஏறு எவ்வம் காணா எழுந்தார் எவன் கொலோ,
ஏறு உடை நல்லார் பகை?

மடவரே நல் ஆயர் மக்கள்; நெருநை 30
அடல் ஏற்று எருத்து இறுத்தார்க் கண்டும் மற்று இன்றும்
உடல் ஏறு கோள் சாற்றுவார்;
ஆங்கு, இனித்
தண்ணுமைப் பாணி தளராது எழூஉக,
பண் அமை இன் சீர் குரவையுள், தெள் கண்ணித், 35
திண் தோள், திறல் ஒளி, மாயப் போர், மா மேனி,
அம் துவர் ஆடைப் பொதுவனோடு, ஆய்ந்த
முறுவலாள் மென்தோள் பாராட்டிச் சிறுகுடி
மன்றம் பரந்தது உரை!

kalittokai 102
cōḻaṉ nalluruttiraṉ, mullai, talaivaṉum, tōḻaṉum, piṟarum coṉṉatu

talaivaṉ:

kaṇ akal iru vicumpil kataḻ peyal kalantu, ēṟṟa
taṇ naṟu piṭavamum, tavaḻ koṭit taḷavamum
vaṇṇa vaṇ tōṉṟiyum, vayaṅku iṇark koṉṟaiyum
aṉṉavai piṟavum, pal malar tutaiyat
taḻaiyum kōtaiyum iḻaiyum eṉṟu ivai 5
taiiyiṉar, makiḻntu tiḷaii viḷaiyāṭum
maṭa moḻi āyattavaruḷ ivaḷ yār, uṭampōṭu
eṉ uyir pukkavaḷ, iṉṟu?

tōḻaṉ:

ōo! ivaḷ poru pukal nal ēṟu koḷpavar allāl,
tiru mā mey tīṇṭalar eṉṟu karumamā, 10
ellārum kēṭpa aṟaintu, eppoḻutum
collāl tarappaṭṭavaḷ.

talaivaṉ:

colluka……………………………………………………………..

cuṟṟattār:

…………………”pāṇiyēm” eṉṟār; “aṟaika” eṉṟār; pārittār
māṇ iḻai āṟu ākac cāṟu.
cāṟṟuḷ peṭai aṉṉār kaṇ pūttu nōkkum vāy ellām 15
miṭai peṟiṉ, nērāt takaittu,

takai vakai micai micaip pāyiyar ārttu, uṭaṉ
etir etir ceṉṟār palar.
kolai mali cilai ceṟi ceyir ayar ciṉañ ciṟantu,
uruttu eḻuntu ōṭiṉṟu mēl. 20
eḻuntatu tukaḷ,
ēṟṟaṉar mārpu,
kaviḻntaṉa maruppu,
kalaṅkiṉar palar.

avaruḷ malar mali pukal eḻa, alar mali maṇipurai nimirtōḷ piṇaii 25
eruttōṭu imil iṭait tōṉṟiṉaṉ; tōṉṟi,
varuttiṉāṉ maṉṟa av ēṟu,
ēṟu evvam kāṇā eḻuntār evaṉ kolō,
ēṟu uṭai nallār pakai?

maṭavarē nal āyar makkaḷ; nerunai 30
aṭal ēṟṟu eruttu iṟuttārk kaṇṭum maṟṟu iṉṟum
uṭal ēṟu kōḷ cāṟṟuvār;
āṅku, iṉit
taṇṇumaip pāṇi taḷarātu eḻūuka,
paṇ amai iṉ cīr kuravaiyuḷ, teḷ kaṇṇit, 35
tiṇ tōḷ, tiṟal oḷi, māyap pōr, mā mēṉi,
am tuvar āṭaip potuvaṉōṭu, āynta
muṟuvalāḷ meṉtōḷ pārāṭṭic ciṟukuṭi
maṉṟam parantatu urai!

Kalithokai 102
Chōlan Nalluruthiran, Mullai, What the hero, his friend and others said

Hero:

Who is this girl who entered my soul

Playing innocently with her friends

Wearing leaf garments, adorned with ornaments

And garland made combining,

Cool fragrant pitavam flowers,

Golden jasmine from crawling creepers

Beautiful colored Glory lilly

Shining dense laburnum

And other flowers nourished by the rains falling from the dark sky!

Hero’s Friend:

Oh! Oh! She is the one with excellent quality,

Featuring in the constant announcement along with beating of the drums, for everyone to listen ,

Her beautiful dark body can be attained by only one who captures the great bull!

Hero:

Tell them [I am here to capture the bull]

Relatives of the Heroine:

“We will not wait, beat the drum” they said. 

In the festival grounds, some vowed to get the girl with nature of excellent ornaments!

People on the elevated platforms,

looked blossomed flower in all directions

Like female birds!

Groups of men leaped into the field

And enclosed the bull in all directions.

The murderous bull’s rage grew,

 as the men crowded around it,

It raised up and charged. 

Dust flied, Men raised their chest,

Bull bowed down to point its horns,

Fear spread!

On seeing distressed bull, the good people owning the bull raised up in enemity to fight with the youth!

These good herders are stupids!

Yesterday they came to hold the neck of the murderous bulls and returned weak,

They are back today announcing they 

Would catch the bull!

Let the Thannumai drum roar without rest,

Let the Kuravai dance be performed to match the sweet tunes,

Brown skinned herders with 

Red clothes, Strong shoulders, great fame

power causing affliction in battles

Are praised along with 

Women with beautiful smile

At the assembly grounds of the small village!

Poet: Chōlan Nalluruthiran

Translated by Palaniappan Vairam Sarathy

தலைவன்:

பரந்து விரிந்த பெரிய இருள்நிறைந்த ஆகாயத்தில் விரைவாகப் பெய்த மழைக் கலந்து, ஏற்ற

தண்மையும் நறுமையும் கொண்ட பிடவமும், தவழும் கொடிக்கொண்ட தளவமும்

வண்ணம் கொண்ட தோன்றியும், ஒளிமிகு பூங்கொத்துக்களை கொண்டக் கொன்றையும்

பிற மலர்களும், பல மலர் மிகுந்து

தழையும் மாலையும் இழையும் என்று இவை

கட்டியவராய் மகிழ்ந்து திளைத்து விளையாடும்

பேதைமை வார்தைகள் பேசும் தோழிகளுடன் இன்று வந்து

உடம்போடு என் உயிர் புகுந்த, இவள் யார் ?

தோழன்:

ஓஒ! போர் புகுந்து நல் ஏறு கொள்பவர் தவிர,

இவள் அழகான கருமையான மேனியை தீண்ட இயலாது என்று

எல்லாரும் கேட்ப எப்பொழுதும் (பறை) அறைந்து,

என்று அறிவிக்கப்பட்டவள் இவள்!

தலைவன்:

சொல்லுங்கள் ( காளையை அடக்க வருகிறேன் என்று!)

சுற்றத்தார்:

“தாமதம் செய்யமாட்டோம் “என்றார்; “ [பறை] அறைக” என்று சபதமிட்டனர்

அழகான ஆபரணம் போல உள்ள இவளை அடைய,

திருவிழாவில் பெரிய மேடையில் இருந்து

பெடை போல் பெண்கள் கண் பூத்து எல்லாதிசைகளிலும்

கண்டுத் தகைக்கும் வகையில்

உயர்த்த இடத்தில் இருந்து பாய்ந்த இளைஞரை கண்டு ஆரவாரம் ஏல,

காளையின் எதிர் எதிர் சென்றார் பலர்.

கொன்றுக் குவிக்கும் வில் போல் மிகுந்தக் கோபத்துடனும்,

அயர்ச்சியுடனும் வெறி பெறுக, பெருஞ்சினத்துடன் எழுந்து,

புழுதி மேலே பறக்கும்படி ஏற்றமான மார்போடு ஓட,

காளை கொம்புகளை வீழ்த்தி நிற்க,

கலங்கினர் பலர்!

அவர்களுள் தோன்றி கூட்டத்தில் புகுந்து எழந்து,

பூக்கள் நிறைந்த மணியைப் போல் நெடிய தோளால் வளைத்து

காளையின் திமிலுக்கிடையே அவன் தோன்றினான்,

தோன்றி, வருத்தி அடக்கினான் அந்தக் காளையை!

காளையின் துன்பத்தைக் கண்டு எழுந்தனர்

அந்த காளையின் உரிமையாளர்கள்

எதற்க்கு அவர்களின் பகை?

அறியாமை உடையவர் இந்த ஆயர் பெருமக்கள்!

நேற்றும் கொலைவெறியுள்ள காளையின் கழுத்தை அணைத்த

வீரர்களின் நிலைக் கண்டு, இன்றும்

காளையின் உடலை அணைப்பேன் என்று அறிவித்தனர்!

அங்கு, இனித் தண்ணுமையில் [திருமணமேளம்] தாளம் தவறாமல் எழுப்புக,

பண் அமைந்த இனிய சீரான குரவைக் கூத்தினுள்,

மலர் கொத்துக்களை உடைய மாலையையும்,

வலிமையான தோளும், வெற்றி ஒளியும்,

வியப்புக்குரிய போர்த் திறத்தையும், கருமையான மேனியையும்,

அழகிய சிவப்புநிற ஆடையையும் உடைய இடையர் இளைஞனுடன் ,

அழகிய முறுவலையுடையவளின் மென்மையான தோள்களைப் பாராட்டி,

அந்தச் சிறுகுடியின் மன்றத்தில் பரவியது பேச்சு!

Reference:

Tamil Lexicon – University of Madras

Learn Sangam Tamil

http://tamilconcordance.in/table-SANG-16-text.html

————————

தலைவன் – talaivaṉ:

கண் அகல் இரு விசும்பில் கதழ் பெயல் கலந்து, ஏற்ற

kaṇ akal iru vicumpil kataḻ peyal kalantu, ēṟṟa

கண் அகல் இருள்நிறைந்த ஆகாயத்தில் விரைவாகப் பெய்த மழைக் கலந்து, ஏற்ற

place/eyes – remove – dark – sky – fast/furious – pour – mingle – take/accept

தண் நறு பிடவமும், தவழ் கொடித் தளவமும்

taṇ naṟu piṭavamum, tavaḻ koṭit taḷavamum

தண்மையும் நறுமையும் கொண்ட பிடவமும் , தவழும் கொடிக்கொண்ட தளவமும்

Cool – fragrant – Pitavam – crawl – creeper – golden jasmine

வண்ண வண் தோன்றியும், வயங்கு இணர்க் கொன்றையும்

vaṇṇa vaṇ tōṉṟiyum, vayaṅku iṇark koṉṟaiyum

வண்ணம் கொண்ட தோன்றியும், ஒளிமிகு பூங்கொத்துக்களை கொண்டக் கொன்றையும்

Color – beauty/quality  – Glory Lilly – shining – dense – Konrai 

அன்னவை பிறவும், பல் மலர் துதையத்

aṉṉavai piṟavum, pal malar tutaiyat

போலப் பிற மலர்களும், பல மலர் மிகுந்து

Alike – others – many – flower – crowded/abundant

தழையும் கோதையும் இழையும் என்று இவை 5

taḻaiyum kōtaiyum iḻaiyum eṉṟu ivai 5

தழையும் மாலையும் இழையும் என்று இவை

leaf /wreath – garland – leaf/ornament – so – these 

தைஇயினர், மகிழ்ந்து திளைஇ விளையாடும்

taiiyiṉar, makiḻntu tiḷaii viḷaiyāṭum

தைப்பவர், மகிழ்ந்து திளைத்து விளையாடும்

Those who tied – happy – enjoy – play

மட மொழி ஆயத்தவருள் இவள் யார், உடம்போடு

maṭa moḻi āyattavaruḷ ivaḷ yār, uṭampōṭu

பேதைமை வார்தைகள் பேசும் தோழிகளுடன் வரும் இவள் யார், உடம்போடு

Naive – words – with friends – she – who – with body

என் உயிர் புக்கவள், இன்று?

eṉ uyir pukkavaḷ, iṉṟu?

என் உயிர் புகுந்தவள், இன்று?

My – soul – entered , today

தோழன் – tōḻaṉ:

ஓஒ! இவள் பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால்,

ōo! ivaḷ poru pukal nal ēṟu koḷpavar allāl,

ஓஒ! போர் புகுந்து நல் ஏறு கொள்பவர் அல்லாமல்,

Oh! She – battle – enter – good – bull – take – not her

திரு மா மெய் தீண்டலர் என்று கருமமா, 10

tiru mā mey tīṇṭalar eṉṟu karumamā, 10

இவள், அழகான கருமையான மேனியை தீண்ட இயலாதவர்க்கு காரியமாக, 10

Beautiful – big – body – touch – so – dead/action

எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும்

ellārum kēṭpa aṟaintu, eppoḻutum

எல்லாரும் கேட்ப எப்பொழுதும் (பறை) அறைந்து,

All – listen – beat – always

சொல்லால் தரப்பட்டவள்.

collāl tarappaṭṭavaḷ.

சொல்லால் தரப்பட்டவள்.

spoke/announce – she of quality/excellence

தலைவன் – talaivaṉ:

சொல்லுக……………………………………………………………..

colluka……………………………………………………………..

சொல்லுங்கள் ( நான் ஏறுகொள்வேன் என்று!)

Tell

சுற்றத்தார் – cuṟṟattār:

…………………”பாணியேம்” என்றார்; “அறைக” என்றார்; பாரித்தார்

…………………”pāṇiyēm” eṉṟār; “aṟaika” eṉṟār; pārittār

“தாமதம் செய்யமாட்டோம் “என்றார்; “ [பறை] அறைக” என்றார்;சபதம்மிட்டனர்

Not wait – said – beat – say – vowed

மாண் இழை ஆறு ஆகச் சாறு.

māṇ iḻai āṟu ākac cāṟu.

அழகான ஆபரணம் போல உள்ள இவளை அடைய

Excellent – jewel/ornament – nature – become – festival

சாற்றுள் பெடை அன்னார் கண் பூத்து நோக்கும் வாய் எல்லாம் 15

திருவிழாவில் பெடை போல் உள்ளோர் கண் பூத்து நோக்கும் வாயில் எல்லாம்

cāṟṟuḷ peṭai aṉṉār kaṇ pūttu nōkkum vāy ellām 

In festival – female bird – alike – eyes – bloom – see – path – all

மிடை பெறின், நேராத் தகைத்து,

miṭai peṟiṉ, nērāt takaittu,

பெரிய மேடையில் இருந்து கண்டுத் தகைத்து

platform – big – insight – excellent/beautiful 

தகை வகை மிசை மிசைப் பாயியர் ஆர்த்து, உடன்

takai vakai micai micaip pāyiyar ārttu, uṭaṉ

பொருத்தமான வகையில் உயர்த்த இடத்தில் இருந்து பாய்ந்தனர் கண்டு ஆரவாரம் ஏல, உடன்

fit – group – elevation – elavation – those leaping – sound – together/along

எதிர் எதிர் சென்றார் பலர்.

etir etir ceṉṟār palar.

எதிர் எதிர் சென்றார் பலர்.

Opposite – opposite – go – many 

கொலை மலி சிலை செறி செயிர் அயர் சினஞ் சிறந்து,

kolai mali cilai ceṟi ceyir ayar ciṉañ ciṟantu,

கொன்றுக் குவிக்கும் வில் போல் மிகுந்தக் கோபத்துடனும் அயர்ச்சியுடன் சினம் பெறுக

Death – crowded – roar/angry – strong – join –  perform – anger – grow

உருத்து எழுந்து ஓடின்று மேல். 20

uruttu eḻuntu ōṭiṉṟu mēl. 20

பெ ருஞ்சினத்துடன் எழுந்து ஓடி மேல்

Provoked – raise – ran – up

எழுந்தது துகள்,

eḻuntatu tukaḷ,

புழுதி பறக்க

Raise – dust

ஏற்றனர் மார்பு,

ēṟṟaṉar mārpu,

ஏற்றமான மார்பை

Men raised – chest

கவிழ்ந்தமருப்பு,

kaviḻntaṉa maruppu,

ஏறு கொம்புகளைகவிழ்த்து வர

Bow down – horns

கலங்கினர் பலர்.

kalaṅkiṉar palar.

கலங்கினர் பலர்.

Distressed – many

அவருள் மலர் மலி புகல் எழ, அலர் மலி மணிபுரை நிமிர்தோள் பிணைஇ 25

avaruḷ malar mali pukal eḻa, alar mali , alar mali maṇipurai nimirtōḷ piṇaii 25

அவர்களுள், தோன்றி கூட்டத்தில் புகுந்து எழ, பூக்கள் நிறைந்த நீலமணியைப் போன்ற நெடிய தோளால் வளைத்து

Among – appear – abundant/crowd  – enter – raise – flower – abundant – gem alike – erect/raise shoulders – hold

எருத்தோடு இமில் இடைத் தோன்றினன்; தோன்றி,

eruttōṭu imil iṭait tōṉṟiṉaṉ; tōṉṟi,

காளையின் திமிலுக்கிடையே அவன் தோன்றினான், தோன்றி

neck – hump – place – appear – when appeared

வருத்தினான் மன்ற அவ் ஏறு,

varuttiṉāṉ maṉṟa av ēṟu,

வருத்தி அடக்கினான் அந்தக் காளையை,

Cause distress – certainly – on that – bull

ஏறு எவ்வம் காணா எழுந்தார் எவன் கொலோ,

ēṟu evvam kāṇā eḻuntār evaṉ kolō,

காளையின் துன்பத்தைக் கண்டு எழுந்தனர், எதற்க்கு

Bull – distress – see – raise – ! – fight

ஏறு உடை நல்லார் பகை?

ēṟu uṭai nallār pakai?

அந்த காளையின் உரிமையாளரின் பகை?

Bull – possess – good people – enmity?

மடவரே நல் ஆயர் மக்கள்; நெருநை 30

maṭavarē nal āyar makkaḷ; nerunai 30

அறியாமை உடையவர் இந்த ஆயர் பெருமக்கள்! நேற்றும்

ignorant /stupid – good – Pastoral/herd – people – yesterday

அடல் ஏற்று எருத்து இறுத்தார்க் கண்டும் மற்று இன்றும்

aṭal ēṟṟu eruttu iṟuttārk kaṇṭum maṟṟu iṉṟum

கொலைவெறியுள்ள காளையின் கழுத்தை அணைத்த வீரர்களை கண்டும், இன்றும்

fight/murder – take up – neck – wearied – see – not only – today

உடல் ஏறு கோள் சாற்றுவார்;

uṭal ēṟu kōḷ cāṟṟuvār;

காளையின் உடலை அணைப்பேன் என்று அறிவித்தனர்!

Body – bull – hold – announce

ஆங்கு, இனித்

āṅku, iṉit

அங்கு, இனித்

There – now

தண்ணுமைப் பாணி தளராது எழூஉக,

taṇṇumaip pāṇi taḷarātu eḻūuka,

தண்ணுமையில் தாளம் தவறாமல் எழுப்புவார்களாக

Thannumai drum – song/melody – not fatigued – raise

பண் அமை இன் சீர் குரவையுள், தெள் கண்ணித், 35

paṇ amai iṉ cīr kuravaiyuḷ, teḷ kaṇṇit, 35

பண் அமைந்த இனிய சீரான குரவைக் கூத்தினுள், மலர் கொத்துக்களை உடைய மாலையையும்

tunes – set – sweet – perfect – Kuravai dance – crowded – garland 

திண் தோள், திறல் ஒளி, மாயப் போர், மா மேனி,

tiṇ tōḷ, tiṟal oḷi, māyap pōr, mā mēṉi,

வலிமையான தோளும், வெற்றி ஒளியும், வியப்புக்குரிய போர்த் திறத்தையும், கருமையான மேனியையும்,

Strong – shoulders – strength/bravery – fame – kill/ afflict – fight/battle – dark – body

அம் துவர் ஆடைப் பொதுவனோடு, ஆய்ந்த

am tuvar āṭaip potuvaṉōṭu, āynta

அழகிய சிவப்புநிற ஆடையையும் உடைய இடையர் இளைஞனுடன் , அழகிய

Beauty – red – cloth – herdsmen – beauty

முறுவலாள் மென்தோள் பாராட்டிச் சிறுகுடி

muṟuvalāḷ meṉtōḷ pārāṭṭic ciṟukuṭi

முறுவலையுடையவளின் மென்மையான தோள்களைப் பாராட்டி, அந்தச் சிறுகுடியின்

She with smile – soft arm – praise – small place/village

மன்றம் பரந்தது உரை!

maṉṟam parantatu urai!

மன்றத்தில் பரவியது பேச்சு

Field – spread – roar

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.