#MEMEthokai14
Situation: Thalaivi (heroine) is fallen for the charms and smile of Thalaivan (hero). Panki/Thozhi (heroine’s friend) warns heroine that the Thalaivan’s smile is façade to cover his intentions to enjoy her youth and desert her once he is satisfied. She quotes the below poem to explain Thalaivi her situation.
குறுந்தொகை 394, குறியிரையார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
முழந்தாள் இரும் பிடிக் கயந்தலைக் குழவி
நறவு மலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற
குறி இறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி
முன் நாள் இனியது ஆகிப் பின் நாள்
அவர் தினைப் புனம் மேய்ந்தாங்குப் 5
பகை ஆகின்று, அவர் நகை விளையாட்டே.
kuṟuntokai 394, kuṟiyiraiyār, kuṟiñcit tiṇai – tōḻi talaiviyiṭam coṉṉatu
muḻantāḷ irum piṭik kayantalaik kuḻavi
naṟavu mali pākkattuk kuṟamakaḷ īṉṟa
kuṟi iṟaip putalvaroṭu maṟuvantu ōṭi
muṉ nāḷ iṉiyatu ākip piṉ nāḷ
avar tiṉaip puṉam mēyntāṅkup 5
pakai ākiṉṟu, avar nakai viḷaiyāṭṭē.

Kurunthokai 394, Kuriyiraiyār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
In the small village with abundant toddy,
The son
of the Kuruva girl
with short forearms
runs on and on
along with the
small calf
of the black elephant
with soft head
Pleasantness of the initial day turned
To sour in the latter days
As the elephant grazed their millet field
Like his smile and playfulness
Translated by Palaniappan Vairam Sarathy
Notes:
Yanar oor – Town with new wealth. Makes me suspect that the towns in trade route during burst of Indo – Roman trade between 1st to 4th century CE had new revenue (toll, protection money, local economic boom) causing economy to boom
Town with abundant alcohol means Town where most likely commercial alochol was sold, is indication that town had surplus economy where people could splurge on luxury goods.
Highly likely this poem was written in the peak of Indo – Roman trade
Poem has friend warning Thalaivi the following way.


குறுந்தொகை 394, குறியிரையார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
முழங்காலுடைய கரிய பெண்யானையின் மெல்லிய தலையையுடைய கன்று
கள் மிகுதியாக உள்ள ஊரில் உள்ள குறமகள் ஈன்ற
குறுகியக் கைகளையுடைய புதல்வனோடு சுற்றிச்சுற்றி ஓடி,
முற்காலத்தில் இனியதாக இருந்து, பிற்காலத்தில்
அவனின் தினை வயலை மேய்ந்ததனால்
பகையாகியது, உன் காதலிரின் நகை விளையாட்டின் தன்மை அப்படியானதே!
—-
Reference:
Tamil Lexicon – University of Madras
Learn Sangam Tamil
Tamilconcordance.in
——–
முழந்தாள் இரும் பிடிக் கயந்தலைக் குழவி
muḻantāḷ irum piṭik kayantalaik kuḻavi
முழங்காலுடைய கரிய பெண்யானையின் மெல்லிய தலையையுடைய கன்று
leg from knee to ankle – black – female elephant – soft head – calf
நறவு மலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற
naṟavu mali pākkattuk kuṟamakaḷ īṉṟa
கள் மிகுதியாக உள்ள ஊரில் உள்ள குறமகள் ஈன்ற
Toddy – abundant – village/town – women of Kuravas – gave birth
குறி இறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி,
kuṟi iṟaip putalvaroṭu maṟuvantu ōṭi,
குறுகியக் கைகளையுடைய புதல்வனோடு சுற்றிச்சுற்றி ஓடி,
Small – forearms – son along – run again and again
முன் நாள் இனியது ஆகி, பின் நாள்
muṉ nāḷ iṉiyatu āki, piṉ nāḷ
முற்காலத்தில் இனியதாக இருந்து, பிற்காலத்தில்
Past – days – happy – became – later -days
அவர் தினைப் புனம் மேய்ந்தாங்கு,
avar tiṉaip puṉam mēyntāṅku,
அவனின் தினை வயலை மேய்ந்ததனால்
Their – millets – upland farm – graze
பகை ஆகின்று, அவர் நகை விளையாட்டே.
pakai ākiṉṟu, avar nakai viḷaiyāṭṭē
பகையாகியது, உன் காதலிரின் நகை விளையாட்டின் தன்மை அப்படியானதே
Enmity – result alike – his -smile – play/game