#MEMEthokai17
Situation: Thalaivan (hero) is in love with Thalaivi (heroine). They meet secretly to sport love and Thalaivi’s friend (Panki/Thozhi) helped them fix their secret meetings. Later Thalaivan marries Thalaivi. Thalaivan starts having affair with other women. He rarely visits Thalaivi. Thalaivi becomes depressed and stats losing her beauty. Thozhi utters this poem to Thalaivan and tells him that he is beyond control and she feels bad for Thalaivi. She wishes he changes his ways and protect Thalaivi.
ஐங்குறுநூறு 59, ஓரம்போகியார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கேட்டிசின் வாழியோ மகிழ்ந! ஆற்றுற
மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர
நினக்கு மருந்தாகிய யான், இனி,
இவட்கு மருந்து அன்மை, நோம் என் நெஞ்சே.
aiṅkuṟunūṟu 59, ōrampōkiyār, marutat tiṇai – tōḻi talaivaṉiṭam coṉṉatu
kēṭṭiciṉ vāḻiyō makiḻna! āṟṟuṟa
maiyal neñciṟku evvam tīra
niṉakku maruntākiya yāṉ, iṉi,
ivaṭku maruntu aṉmai, nōm eṉ neñcē.


Ainkurunūru 59, Ōrampōkiyār, Marutham Thinai – What the heroine’s friend said to the hero
Long live man from land of agriculture,
Listen to me!
I have been medicine for you
and alleviated pain of your infatuated heart !
Now, I am unable to be medicine for your lover!
My heart aches!
Translated by Palaniappan Vairam Sarathy
ஐங்குறுநூறு 59, ஓரம்போகியார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
வாழ்க தலைவனே! நான் கூறுவதை கேள்!
தலைவியின் மீது காதல் மயக்கம் கொண்ட உன் நெஞ்சதின் துன்பம் தீர,
ஆறுதலாக உனக்கு மருந்தாக மாறிய நான்,
இப்போது தலைவிக்கு மருந்தாக இருக்க இயலாததை எண்ணி,
நோகின்றது என் நெஞ்சம்.
Reference:
Tamil Lexicon – University of Madras
Learn Sangam Tamil
Ainkurunooru translation by P.Jotimuttu
Tamilconcordance.in
கேட்டிசின் வாழியோ மகிழ்ந! ஆற்றுற
kēṭṭiciṉ vāḻiyō makiḻna! Āṟṟuṟa
நான் கூறுவதைக் கேள்! வாழ்க தலைவனே! ஆறுதலாக
Listen – long live – lord of agriculture tract – appease, alleviate
maiyal neñciṟku evvam tīra
உன் காதல் மயக்கம் கொண்ட நெஞ்சதின் துன்பம் தீர,
madness/infatuated – Heart – affliction – end
நினக்கு மருந்தாகிய யான், இனி,
niṉakku maruntākiya yāṉ, iṉi,
உனக்கு மருந்தாக மாறிய நான், இப்போது
For you – as medicine became – myself – from now
இவட்கு மருந்து அன்மை, நோம் என் நெஞ்சே.
ivaṭku maruntu aṉmai, nōm eṉ neñcē.
தலைவிக்கு மருந்தாக இருக்க இயலாததை எண்ணி, நோகின்றது என் நெஞ்சம்.
For her – medicine – not – ache – my – heart