He is not here to crush my breast – Kurunthokai 314


#MEMEthokai18

Situation: Thalaivi (Heroine) is expecting Thalaivan (Hero) to return from war/trade. The rainy season he promised to return has come, to add to injury evening which makes her feel more lonely has also arrived. Thalaivi utters this poem to express her depression.

குறுந்தொகை 314, பேரிசாத்தனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
சேய் உயர் விசும்பின் நீர் உறு கமஞ்சூல்
தண் குரல் எழிலி ஒண் சுடர் இமைப்பப்
பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும்
வாரார் வாழி தோழி, வரூஉம்
இன் உறழ் இள முலை ஞெமுங்க 5
இன்னா வைப்பின் சுரன் இறந்தோரே.

kuṟuntokai 314, pēricāttaṉār, mullait tiṇai – talaivi tōḻiyiṭam coṉṉatu
cēy uyar vicumpiṉ nīr uṟu kamañcūl
taṇ kural eḻili oṇ cuṭar imaippap
peyal tāḻpu iruḷiya pulampu koḷ mālaiyum
vārār vāḻi tōḻi, varūum
iṉ uṟaḻ iḷa mulai ñemuṅka 5
iṉṉā vaippiṉ curaṉ iṟantōrē.

Kurunthokai 314, Pērisāthanār, Mullai Thinai – What the heroine said to her friend
The cool rain pours from the
pregnant Clouds
on the distant sky
with a roar and lightning,
as the darkness takes over
the lonely evening.
The man who left us to
pass through the wastelands
has not come yet,
To crush
my sweet raising
young breast!
Long live my friend!

Translated by Palaniappan Vairam Sarathy

Notes:

Original poem has better flow which is lost in translation – the poem describes that cloud winks to create thunder and rain, as if it is taking an active role in triggering depression for Thalaivai.

குறுந்தொகை 314, பேரிசாத்தனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
தூரத்தில் உள்ள உயர்ந்த வானத்தில் நீர் நிறைந்த மேகம்
குளிர்ந்து முழக்கத்தை எழுப்பும் ஒளிமிகு மின்னல்களை இமைக்க
பெயல்மழை மேலிருந்து பொழிந்து இருண்ட தனிமையான மாலைப் பொழுதிலும்
வரவில்லை காதலன், வாழ்க, தோழியே! வீங்கும்
இனிமை பொருந்திய இளம் மார்பை அழுத்தி அணைக்க
இன்னல் நிறைந்த பாலைநிலத்தைக் கடந்துசெல்லும் என் காதலன்!

—-

Reference:

Tamil Lexicon – University of Madras

Learn Sangam Tamil

Tamilconcordance.in

——–

சேய் உயர் விசும்பின் நீர் உறு கமஞ்சூல்

cēy uyar vicumpiṉ nīr uṟu kamañcūl

தூரத்தில் உள்ள உயர்ந்த வானத்தில் நீர் நிறைந்த மேகம்

distant/remote – high -sky –  water – fall – full of water

தண் குரல் எழிலி ஒண் சுடர் இமைப்பப்

taṇ kural eḻili oṇ cuṭar imaippap

குளிர்ந்து முழக்கத்தை எழுப்பும் ஒளிமிகு மின்னல்களை இமைக்க

Cool – voice/sound/song – cloud – lustrous – bright – wink/glitter (lightning)

பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும்

peyal tāḻpu iruḷiya pulampu koḷ mālaiyum

பெயல்மழை மேலிருந்து பொழிந்து  இருண்ட தனிமையான மாலைப் பொழுதிலும்

Rain – Pour – dark – lonely – take – evening

வாரார் வாழி தோழி, ரூஉம்

vārār vāḻi tōḻi, varūum

வரவில்லை காதலன், வாழ்க, தோழியே! வீங்கும்

He is not coming – long live – friend, increase/grow

இன் உறழ் இள முலை ஞெமுங்க

iṉ uṟaḻ iḷa mulai ñemuṅka  5

இனிமை பொருந்திய இளம் மார்பை அழுத்தி அணைக்க

sweet – resemble/tight – Young – Breast – squeeze

இன்னா வைப்பின் சுரன் இறந்தோரே.

iṉṉā vaippiṉ curaṉ iṟantōrē.

இன்னல் நிறைந்த பாலைநிலத்தைக் கடந்துசெல்லும் என் காதலன்!

Pain – place – desert/jungle – pass

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.