#MEMEthokai39
Situation: Strangers visit Thalaivi (heroine’s) house asking her parents for her hand in a marriage. Thalaivi’s friend (Thozhi) reveals Thalaivi’s love affair with Thalaivan, to her mother/foster mother.
This poem is packed with subtext.
ஐங்குறுநூறு 110, அம்மூவனார், நெய்தல் திணை – தோழி செவிலித்தாயிடம் சொன்னது
அன்னை வாழி! வேண்டு அன்னை! புன்னை
பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை
‘என் ஐ’ என்றும் யாமே, இவ்வூர்
பிறிது ஒன்றாகக் கூறும்
ஆங்கும் ஆக்குமோ? வாழிய பாலே.
aiṅkuṟunūṟu 110, ammūvaṉār, neytal tiṇai – tōḻi cevilittāyiṭam coṉṉatu
aṉṉai vāḻi! vēṇṭu aṉṉai! puṉṉai
poṉṉiṟam viriyum pūkkeḻu tuṟaivaṉai
‘eṉ ai’ eṉṟum yāmē, ivvūr
piṟitu oṉṟākak kūṟum
āṅkum ākkumō? vāḻiya pālē.


ஐங்குறுநூறு 110, அம்மூவனார், நெய்தல் திணை – தோழி செவிலித்தாயிடம் சொன்னது
வாழ்க அன்னையே! நான் கூறுவதை கேள்! புன்னையின்
பொன்னிறத்தில் பூக்கும் பூக்கள் நிறைந்தத் துறையைச் சேர்ந்தவனை
‘என் தலைவன்’ என்று என்கிறாள் அவள்; இந்த ஊரோ
வேறொருன்று கூறுகிறது;
அவர்கள் கூறுவதைபோல் ஆகிவிடுமோ? வாழ்க இவ்வூர் மக்களே!


Ainkurunūru 110, Ammoovanār, Neythal Thinai – What the heroine’s friend said to the foster mother
Long live Mother! Listen to me!
I thought that the
man from the shores where
Mastwood’s golden flower blossoms
Is my lord!
But the village thinks otherwise?
Will it become true?
Long live village!
Translated by Palaniappan Vairam Sarathy
Notes:
ஐ ai – has multiple meanings
ஐ³ ai , n. 1. Wonder, astonishment: வியப்பு. 2. Beauty; அழகு. 3. Slenderness; மென்மை. 4. Minuteness, subtleness; நுண்மை. 5. Phlegm; கோழை. 6. Bronchitis; கபவியாத. 7. The fifth note of the gamut; இளியென்னும் ஐந்தாம் இசையின் எழுத்து. 8. Lord, master; தலைவன். 9. Husband; கணவன். 10. King; அரசன் 11. Guru, priest, teacher; ஆசான். 12. Father; பிதா. 13. A prepared arsenic; சவ்வீர பாஷாணம்.
புன்னை – puṉṉai

—-
Reference:
Tamil Lexicon – University of Madras
Learn Sangam Tamil
Tamilconcordance.in
Ainkurunooru Translation by P.Jotimuttu
——–
அன்னை வாழி! வேண்டு அன்னை! புன்னை
aṉṉai vāḻi! vēṇṭu aṉṉai! puṉṉai
வாழ்க அன்னையே! நான் கூறுவதை கேள்! புன்னையின்
Mother – long live – listen – mother – mustwood
பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை
poṉṉiṟam viriyum pūkkeḻu tuṟaivaṉai
பொன்னிறத்தில் பூக்கும் பூக்கள் நிறைந்தத் துறையைச் சேர்ந்தவனை
Gold color – blossom – flower – man from shore
‘என் ஐ’ என்றும் யாமே, இவ்வூர்
‘eṉ ai’ eṉṟum yāmē, ivvūr
‘என் தலைவன்’ என்று என்கிறாள் அவள்; இந்த ஊரோ
My lord/man/husband – thinking – me – this village
பிறிது ஒன்றாகக் கூறும்
piṟitu oṉṟākak kūṟum
வேறொருன்று கூறுகிறது;
Other thing – same -say
āṅkum ākkumō? vāḻiya pālē.
அவர்கள் கூறுவதைபோல் ஆகிவிடுமோ? வாழ்க இவ்வூர் மக்களே
Thus- change? -Long live – place/ nature