He worshiped me! – Kalithokai 55


#MEMEthokai41

Situation: Thalaivan (hero) is stalking Thalaivi (heroine). Thalaivi tells Thozhi (friend) that Thalaivan is not as innocent as she thinks. #MEMEthokai #karkanirka

கலித்தொகை 55 – கபிலர், குறிஞ்சி, தலைவி தோழியிடம் சொன்னது
கபிலர், குறிஞ்சி, தலைவி தோழியிடம் சொன்னது
மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலே போல்
பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டுப்
போழ் இடை இட்ட கமழ் நறும் பூங்கோதை
இன்னகை இலங்கு எயிற்றுத் தேமொழித் துவர்ச் செவ்வாய்
நல் நுதால், நினக்கு ஒன்று கூறுவாம், கேள் இனி! 5
“நில்” என நிறுத்தான், நிறுத்தே வந்து
நுதலும் முகனும் தோளும் கண்ணும்
இயலும் சொல்லும் நோக்குபு நினைஇ,
“ஐ தேய்ந்தன்று பிறையும் அன்று,
மை தீர்ந்தன்று மதியும் அன்று 10
வேய் அமன்றன்று மலையும் அன்று,
பூ அமன்றன்று சுனையும் அன்று,
மெல்ல இயலும் மயிலும் அன்று,
சொல்லத் தளரும் கிளியும் அன்று”,
என ஆங்கு 15
அனையன பல பாராட்டிப், பையென
வலைவர் போலச் சோர் பதன் ஒற்றிப்,
புலையர் போலப் புன்கண் நோக்கித்,
தொழலும் தொழுதான், தொடலும் தொட்டான்,
காழ் வரை நில்லாக் கடுங்களிறு அன்னோன், 20
தொழூஉம் தொடூஉம் அவன் தன்மை,
ஏழைத் தன்மையோ இல்லை தோழி.

kalittokai 55 – kapilar, kuṟiñci, talaivi tōḻiyiṭam coṉṉatu
miṉ oḷir avir aṟal iṭai pōḻum peyalē pōl
poṉ akai takai vakir vakai neṟi vayaṅkiṭṭup
pōḻ iṭai iṭṭa kamaḻ naṟum pūṅkōtai
iṉṉakai ilaṅku eyiṟṟut tēmoḻit tuvarc cevvāy
nal nutāl, niṉakku oṉṟu kūṟuvām, kēḷ iṉi! 5
“nil” eṉa niṟuttāṉ, niṟuttē vantu
nutalum mukaṉum tōḷum kaṇṇum
iyalum collum nōkkupu niṉaii,
“ai tēyntaṉṟu piṟaiyum aṉṟu,
mai tīrntaṉṟu matiyum aṉṟu 10
vēy amaṉṟaṉṟu malaiyum aṉṟu,
pū amaṉṟaṉṟu cuṉaiyum aṉṟu,
mella iyalum mayilum aṉṟu,
collat taḷarum kiḷiyum aṉṟu”,
eṉa āṅku 15
aṉaiyaṉa pala pārāṭṭip, paiyeṉa
valaivar pōlac cōr pataṉ oṟṟip,
pulaiyar pōlap puṉkaṇ nōkkit,
toḻalum toḻutāṉ, toṭalum toṭṭāṉ,
kāḻ varai nillāk kaṭuṅkaḷiṟu aṉṉōṉ, 20
toḻūum toṭūum avaṉ taṉmai,
ēḻait taṉmaiyō illai tōḻi.

கலித்தொகை 55 – கபிலர், குறிஞ்சி, தலைவி தோழியிடம் சொன்னது
மின்னல்கள் ஒளிர்ந்து மின்னும் பொழுது, அதனிடையே அறுத்துக்கொண்டு செல்லும் மேகத்தைப் போல,
பொன்னை அடித்து பிணைத்து வகிடாக வகைப்படுத்திய சுருள் மிகுந்த கூந்தலில் ஒளிபெறச் சூடி,
கூந்தலைப் பிளந்து மணம் கமழும் தாழம்பூவுடன், பூச்சரமும் சூடியுள்ள
இனிய நகையும், ஒளிவிடும் பற்களும், இனிய சொற்களும், பவளம் போன்ற சிவந்த வாயும்
நல்ல நெற்றியையுடையவளே! உனக்கு ஒன்று கூறுகிறேன், கேள் இனி என்று
நில் என்று என்னை அவன் நிறுத்தினான், நிறுத்திவிட்டு அருகே வந்து,
என் நெற்றியையும், முகத்தையும், தோள்களையும், கண்களையும்,
நடையும், சொல்லையும் நோக்கி சிந்தித்து
நெற்றி மிகவும் தேய்ந்திரு
[உன் நெற்றி] அழகாகதேய்ந்திருக்கும் அனால் பிறையும் அல்ல
[உன் முகம்] மாசற்றது அனால் முழுமதியும் அல்ல
[உன் தோள்கள்] மூங்கில் அனால் மலையில் அல்ல
[உன் கண்] பூ ஆனால் சுனையில் அல்ல
[உன் நடை] மெல்ல நளினமான நடை ஆனால் மயில் அல்ல
[உன் பேச்சு] மழலை ஆனால் கிளி அல்ல
என்று
என்று பலவாறாகப் பாராட்டி, மெதுவாக,
வலையை விரித்தவன் போல, இறை [நான்] மயங்கும் தருணத்தை எதிர்பார்த்து,
பாணன் போல நான் பரிதாபப்படும் படி பார்த்து,
என்னைக் கைகூப்பித் தொழுதான், என்னை தொடவும் செய்தேன்,
அங்குசத்திற்கு அடங்காத கடும் ஆண் யானை போல
என்னை தொழுவதும் தொடுவதும் அவன் தன்மை
அவன் அறிவில்லாதவன் இல்லை தோழி!

Kalithokai 55 – Kapilar, Kurinji, What the heroine said to her friend
“Oh girl
with bright teeth, sweet smile,
sweet words, coral red lips,
beautiful forehead,
wearing ornament made
with gold glittering
like the lightning
which emerges from
the middle of the rain cloud!
cutting through the fragrant flowers
on the curly hair.
Do no speak a word! Stop! Listen to me!”
He said and stopped me.
When I stopped,
He observed my forehead, face,
eyes, arms, walk , voice
And thought out loud,
“[your forehead is] beautiful crescent but not a crescent moon,
[your face is] faultless but not a full moon,
[your arms are thin like] bamboo but not residing in the mountains
[your eyes are like] Flowers but not residing in the mountain springs
[your] slow stylish walk is not that of a peacock
[your] tender voice not that of a parrot “
He praised me with many words,
Slowly like a hunter who awaits an opportunity to trap
He gave me distressed look like a bard,
He bowed and worshiped me
He did touch me too
Like a male elephant which not controlled
By the goad
He continued worshiping and touching me.
He is not a silly character my friend!

Translated by Palaniappan Vairam Sarathy

Notes:
ஏழை ēḻai – actually means a foolish person and eventually -> weak person -> poor persopm
ஏழை ēḻai 1. Foolish, silly person; one of weak intellect; அறி விலா-ன்-ள். 2. Ignorance, simplicity; harmlessness; mental weakness; அறியாமை. 3. Woman; பெண். எருதேறி யேழையுடனே (தேவா 1171 2). 4. Indigent person, poor wretch, helpless fellow; தரித்திரன்.


Reference:

Tamil Lexicon – University of Madras

Learn Sangam Tamil

http://tamilconcordance.in/table-SANG-16-text.html


மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலே போல்

miṉ oḷir avir aṟal iṭai pōḻum peyalē pōl

மின்னல்கள் ஒளிர்ந்து மின்னும் பொழுது, அதனிடையே அறுத்துக்கொண்டு செல்லும் மேகத்தைப் போல,

Lightning – shining – glitter – flowing water/cut – middle – passthrough – cloud – alike

பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டுப்

poṉ akai takai vakir vakai neṟi vayaṅkiṭṭup

பொன்னை அடித்து பிணைத்து வகிடாக வகைப்படுத்திய சுருள் மிகுந்த கூந்தலில் ஒளிபெறச் சூடி,

Gold –  expand – excellent/great – split – division – curl hair – exhibit/go

போழ் இடை இட்ட கமழ் நறும் பூங்கோதை

pōḻ iṭai iṭṭa kamaḻ naṟum pūṅkōtai

கூந்தலைப் பிளந்து மணம் கமழும் தாழம்பூவுடன், பூச்சரமும் சூடியுள்ள

cleft – middle/between – place – emit  – fragrant – flower garland

இன்னகை இலங்கு எயிற்றுத் தேமொழித் துவர்ச் செவ்வாய்

iṉṉakai ilaṅku eyiṟṟut tēmoḻit tuvarc cevvāy

இனிய நகையும், ஒளிவிடும் பற்களும், இனிய சொற்களும், பவளம் போன்ற சிவந்த வாயும் 

Sweet – smile – shine – teeth – sweet words – coral – red mouth

நல் நுதால், நினக்கு ஒன்று கூறுவாம், கேள் இனி!   5

nal nutāl, niṉakku oṉṟu kūṟuvām, kēḷ iṉi!   5

நல்ல நெற்றியையுடையவளே! உனக்கு ஒன்று கூறுகிறேன், கேள் இனி என்று

Good – forehead – you – one -speak – listen – from now

“நில்” என நிறுத்தான், நிறுத்தே வந்து

“nil” eṉa niṟuttāṉ, niṟuttē vantu

நில் என்று என்னை அவன் நிறுத்தினான், நிறுத்திவிட்டு அருகே வந்து,

Stop – so -stopped – when stopped – come

நுதலும் முகனும் தோளும் கண்ணும்

nutalum mukaṉum tōḷum kaṇṇum

என் நெற்றியையும், முகத்தையும், தோள்களையும், கண்களையும்,

Forehead – face – shoulders/arms – eyes

இயலும் சொல்லும் நோக்குபு நினைஇ,

iyalum collum nōkkupu niṉaii,

நடையும், சொல்லையும் நோக்கி சிந்தித்து

walk- words – looked – think/ponder

தேய்ந்தன்று பிறையும் அன்று,

“ai tēyntaṉṟu piṟaiyum aṉṟu,

[உன் நெற்றி] அழகாகதேய்ந்திருக்கும் அனால் பிறையும் அல்ல 

Beautiful ? – diminishing – crescent – not

மை தீர்ந்தன்று மதியும் அன்று  10

[உன் முகம்] மாசற்றது அனால் முழுமதியும் அல்ல 

mai tīrntaṉṟu matiyum aṉṟu  10

Belemish of moon – diminish – moon not

வேய் அமன்றன்று மலையும் அன்று,

vēy amaṉṟaṉṟu malaiyum aṉṟu,

[உன் தோள்கள்] மூங்கில் அனால் மலையில் அல்ல 

bamboo – reside  – mountain – not

பூ அமன்றன்று சுனையும் அன்று,

pū amaṉṟaṉṟu cuṉaiyum aṉṟu,

[உன் கண்] பூ ஆனால் சுனையில் அல்ல 

Flower – reside – mountain spring – not

மெல்ல இயலும் மயிலும் அன்று,

mella iyalum mayilum aṉṟu,

[உன் நடை] மெல்ல நளினமான நடை ஆனால் மயில் அல்ல 

Slowly – walking with gait – peacock – not

சொல்லத் தளரும் கிளியும் அன்று”,

collat taḷarum kiḷiyum aṉṟu”,

[உன் பேச்சு] மழலை ஆனால் கிளி அல்ல

Speak – faint/struggle  – parrot – not

என ஆங்கு  15 

eṉa āṅku  15

So – similar?

என்று

அனையன பல பாராட்டிப், பையென

aṉaiyaṉa pala pārāṭṭip, paiyeṉa

என்று பலவாறாகப் பாராட்டி, மெதுவாக,

That saying – many – praise , slowly

வலைவர் போலச் சோர் பதன் ஒற்றிப்,

valaivar pōlac cōr pataṉ oṟṟip,

வலையை விரித்தவன் போல, இறை [நான்] மயங்கும் தருணத்தை எதிர்பார்த்து,

fisherman/people who cast net  – alike – slip/relax – opportunity – spy

புலையர் போலப் புன்கண் நோக்கித்,

pulaiyar pōlap puṉkaṇ nōkkit,

பாணன் போல நான் பரிதாபப்படும் படி பார்த்து,

Bards – alike – distress/sorrow – see

தொழலும் தொழுதான், தொடலும் தொட்டான்,

toḻalum toḻutāṉ, toṭalum toṭṭāṉ,

என்னைக் கைகூப்பித் தொழுதான், என்னை தொடவும் செய்தேன்,

worship/adore – he worshiped – touch – he touched me

காழ் வரை நில்லாக் கடுங் களிறு அன்னோன்,  20

kāḻ varai nillāk kaṭuṅ kaḷiṟu aṉṉōṉ,  20

அங்குசத்திற்கு அடங்காத கடும் ஆண் யானை போல

goad – restraint – not stop – harsh – male elephant – alike

தொழூஉம் தொடூஉம் அவன் தன்மை,

toḻūum toṭūum avaṉ taṉmai,

என்னை தொழுவதும் தொடுவதும் அவன் தன்மை

worship – touch – his -characteristics

ஏழைத் தன்மையோ இல்லை தோழி.

ēḻait taṉmaiyō illai tōḻi.

அவன் அறிவில்லாதவன் இல்லை தோழி!

foolish/silly -characteristic – not – friend

Advertisement

1 Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.