#MEMEthokai44
Situation: Thalaivan (hero) is wedded to Thalaivi (heroine). Against the wishes of Thalaivi, he decides to embark on journey to earn wealth and has not returned in time. Thalaivi utters this poem. #MEMEthokai #karkanirka
ஐங்குறுநூறு 309, ஓதலாந்தையார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
வேனில் திங்கள் வெஞ்சுரம் இறந்து
செலவு அயர்ந்தனையால் நீயே நன்று,
நின் நயந்து உறைவி கடுஞ்சூல் சிறுவன்
முறுவல் காண்டலின் இனிதோ,
இறுவரை நாட, நீ இறந்து செய் பொருளே?
aiṅkuṟunūṟu 309, ōtalāntaiyār, pālait tiṇai – tōḻi talaivaṉiṭam coṉṉatu
vēṉil tiṅkaḷ veñcuram iṟantu
celavu ayarntaṉaiyāl nīyē naṉṟu,
niṉ nayantu uṟaivi kaṭuñcūl ciṟuvaṉ
muṟuval kāṇṭaliṉ iṉitō,
iṟuvarai nāṭa, nī iṟantu cey poruḷē?


ஐங்குறுநூறு 309, ஓதலாந்தையார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
வேனில் காலத்து மாதத்தில், வெப்பமுள்ள கடும் பாதை வழியைக் கடக்கும்
பயணத்தை மேற்கொண்டாய் நீ! நன்று,
உன்னை விரும்பி உன் மனைவியின் முதற் கருப்பத்தில் பிறந்த மகனின்
புன்னகைக் காண்பதைவிட இனியதா,
மலை நாட்டைச் சேர்ந்தவனே, நீ பிரிந்துபோய் ஈட்டும் பொருள்?
Ainkurunūru 309, Ōthalānthaiyār, Pālai Thinai – What the heroine’s friend said to the hero
You have decided to travel
in the summer months and
pass through the hot wastelands .
Is the wealth you make
through your travel
More sweeter than the smile
Of your son
born from The first pregnancy
of the women you desired
and leave behind in the house
Oh Lord of high mountains?
Translated by Palaniappan Vairam Sarathy
Notes:
இறுவரை² iṟu-varai -> இருவரை. High mountain; பெரியமலை. 2. Foothill; பக்கமலை. 3. Foot of a mountain; அடிவாரம்.
கடுஞ்சூல் kaṭu-ñ-cūl , n. < கடு-மை +. First pregnancy; முதற் கருப்பம் -> hard pregnancy – usually the first one
—-
Reference:
Tamil Lexicon – University of Madras
Learn Sangam Tamil
Tamilconcordance.in
—
வேனில் திங்கள் வெஞ்சுரம் இறந்து
vēṉil tiṅkaḷ veñcuram iṟantu
வேனில் காலத்து மாதத்தில், வெப்பமுள்ள கடும் பாதை வழியைக் கடக்கும்
Hot season – month – hot – wastelands – pass
செலவு அயர்ந்தனையால் நீயே நன்று,
celavu ayarntaṉaiyāl nīyē naṉṟu,
பயணத்தை மேற்கொண்டாய் நீ! நன்று,
Travel – to perform – you – good
நின் நயந்து உறைவி கடுஞ்சூல் சிறுவன்
niṉ nayantu uṟaivi kaṭuñcūl ciṟuvaṉ
உன்னை விரும்பி உன் மனைவியின் முதற் கருப்பத்தில் பிறந்த மகனின்
Your – desire – house women – hard – pregnancy (first born) – small boy
முறுவல் காண்டலின் இனிதோ,
muṟuval kāṇṭaliṉ iṉitō,
புன்னகைக் காண்பதைவிட இனியதா,
Smile – see is it – more sweet?
இறுவரை நாட, நீ இறந்து செய் பொருளே?
iṟuvarai nāṭa, nī iṟantu cey poruḷē?
மலை நாட்டைச் சேர்ந்தவனே, நீ பிரிந்துபோய் ஈட்டும் பொருள்?
Lord of high mountains – you – travel – make – wealth?