Rain is laughing at me – Kurunthokai 126


#MEMEthokai47

Situation: Thalaivan (hero) is wedded to Thalaivi (heroine). Against the wishes of Thalaivi, he decides to embark on journey to earn wealth and has not returned in time. Thalaivi utters this poem. #MEMEthokai #karkanirka

குறுந்தொகை 126, ஒக்கூர் மாசாத்தியார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
இளமை பாரார், வள நசைஇச் சென்றோர்,
இவணும் வாரார், எவணரோ எனப்,
பெயல் புறந்தந்த பூங்கொடி முல்லைத்
தொகு முகை இலங்கு எயிறாக
நகுமே தோழி, நறும் தண் காரே. 5

kuṟuntokai 126, okkūr mācāttiyār, mullait tiṇai – talaivi tōḻiyiṭam coṉṉatu
iḷamai pārār, vaḷa nacaiic ceṉṟōr,
ivaṇum vārār, evaṇarō eṉap,
peyal puṟantanta pūṅkoṭi mullait
toku mukai ilaṅku eyiṟāka
nakumē tōḻi, naṟum taṇ kārē. 5

குறுந்தொகை 126, ஒக்கூர் மாசாத்தியார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
இளமை பார்க்காமல், பொருளை விரும்பிச் சென்றவர்
இங்கும் வரவில்லை, எங்கிருக்கிறாரோ என –
மழைப்பெயலால் உயிர்பெற்ற பூங்கொடி முல்லையின்
கொத்தான மொட்டுகளை மின்னிடும் பற்களாக
சிரிக்குத்தே தோழி! நறுமணம் சுமந்துவரும் குளிர் மழை.

Kurunthokai 126, Okkūr Māsāthiyār, Mullai Thinai – What the heroine said to her friend
He departed desiring wealth
Without considering my youth!
He has not come, making me wonder where he is!
Cool fragrant rain smile at me,
with clusters of jasmine buds
On vines fed by rain
as its shining teeth!

Translated by Palaniappan Vairam Sarathy

Notes:

எயிறு eyiṟu , n. [M. eyiṟu.] 1. Tooth; பல். 2. The gums; பல்லின் விளிம்பு. 3. Tusk of the elephant, of the wild hog; யானை பன்றி களின் வாய்க்கோடு.

—-
Reference:

Tamil Lexicon – University of Madras

Learn Sangam Tamil

Tamilconcordance.in


இளமை பாரார், வள நசைஇச் சென்றோர்,

iḷamai pārār, vaḷa nacaiic ceṉṟōr,

இளமை பார்க்காமல், பொருளை விரும்பிச் சென்றவர்

Youth – not consider – wealth – desire – went

இவணும் வாரார், எவணரோ எனப்,

ivaṇum vārār, evaṇarō eṉap,

இங்கும் வரவில்லை, எங்கிருக்கிறாரோ என –

peyal puṟantanta pūṅkoṭi mullait

மழைப்பெயலால் உயிர்பெற்ற பூங்கொடி முல்லையின்

He has – Not come, where – think

பெயல் புறந்தந்த பூங்கொடி முல்லைத்

toku mukai ilaṅku eyiṟāka

கொத்தான மொட்டுகளை மின்னிடும் பற்களாக

Rain – season/back/exterior give – flower vines – jasmine

தொகு முகை இலங்கு எயிறா

nakumē tōḻi, naṟum taṇ kārē.  5

சிரிக்குத்தே தோழி! நறுமணம் சுமந்துவரும் குளிர் மழை.

crowd/clusters – Buds – shine – teeth

நகுமே தோழி, நறும் தண் காரே.  5

Smile – friend – fragrant – cool – rain

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.