#MEMEthokai49
Situation: Thalaivan (hero) is wedded to Thalaivi (heroine). He leaves to earn wealth, with a promise of returning back before monsoon season. it rains, Thozhi (friend) tries to convince Thalaivi that this was unseasonal rain. Thalaivi utters this poem. #MEMEthokai #karkanirka
குறுந்தொகை 200, ஔவையார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பெய்த குன்றத்துப் பூ நாறு தண் கலுழ்
மீமிசைச் தாஅய வீஇ சுமந்து வந்து
இழிதரும் புனலும் வாரார் தோழி,
மறந்தோர் மன்ற, மறவா நாமே,
கால மாரி மாலை மாமழை 5
இன்னிசை உருமின முரலும்
முன்வரல், ஏமம் செய்து அகன்றோரே.
kuṟuntokai 200, auvaiyār, mullait tiṇai – talaivi tōḻiyiṭam coṉṉatu
peyta kuṉṟattup pū nāṟu taṇ kaluḻ
mīmicaic tāaya vīi cumantu vantu
iḻitarum puṉalum vārār tōḻi,
maṟantōr maṉṟa, maṟavā nāmē,
kāla māri mālai māmaḻai 5
iṉṉicai urumiṉa muralum
muṉvaral, ēmam ceytu akaṉṟōrē.


குறுந்தொகை 200, ஔவையார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மழைபெய்த குன்றத்தில் மலர் மனதுடன் குளிர்ந்த கலங்கல்நீரின்
மேலிடத்தில் பரவி வீசி [அந்த மணத்தை] சுமந்து வந்து
விழுகின்றது ஆறு, அனால் அவர் வரவில்லை தோழி!
மறந்துவிட்டார் நிச்சயமாக; மறக்கவில்லை நாம்;
பருவ மழை மாலையில் மாமழையின்
இனிய இசையுடைய இடியும் முழங்கும்
முன் வருவேன் என்ற காவல் (வாக்கு) கொடுத்து சென்றவர்


Kurunthokai 200, Avvaiyār, Mullai Thinai – What the heroine said to her friend
Rain from the mountains
Descends and spreads
as turbulent cool stream
carrying fragrance of flowers
He has certainly forgot us!
But I will not forget
His assurance that
he would come before
the sweet sounding roar of thunder
of the Evening rains
from the monsoon!
Translated by Palaniappan Vairam Sarathy
—-
Reference:
Tamil Lexicon – University of Madras
Learn Sangam Tamil
Tamilconcordance.in
—
பெய்த குன்றத்துப் பூ நாறு தண் கலுழ்
peyta kuṉṟattup pū nāṟu taṇ kaluḻ
மழைபெய்த குன்றத்தில் மலர் மனதுடன் குளிர்ந்த கலங்கல்நீரின்
Rain – mountain – flower – fragrance – cool – turbulent/muddy
மீமிசைச் தாஅய வீஇ சுமந்து வந்து
mīmicaic tāaya vīi cumantu vantu
மேலிடத்தில் பரவி வீசி [அந்த மணத்தை] சுமந்து வந்து
above – spread – blow – Carry – come
iḻitarum puṉalum vārār tōḻi,
விழுகின்றது ஆறு, அனால் அவர் வரவில்லை தோழி!
Descend – river/stream – he doesn’t come – friend
மறந்தோர் மன்ற, மறவா நாமே,
maṟantōr maṉṟa, maṟavā nāmē,
மறந்துவிட்டார் நிச்சயமாக; மறக்கவில்லை நாம்;
Those who forget – clearly/certainly – not forget us
கால மாரி மாலை மாமழை 5
kāla māri mālai māmaḻai 5
பருவ மழை மாலையில் மாமழையின்
season – rain – evening – big rain
iṉṉicai urumiṉa muralum
இனிய இசையுடைய இடியும் முழங்கும்
Sweet music – thunder/roar – cry/sound
முன்வரல், ஏமம் செய்து அகன்றோரே.
muṉvaral, ēmam ceytu akaṉṟōrē.
முன் வருவேன் என்ற காவல் (வாக்கு) கொடுத்து சென்றவர்
Before come – protection – give – he departed me