She is more useful to him – Kalithokai 9


#MEMEthokai50

50th day of MEMEthokai. Thank you for all your support.

Situation: Thalaivan (Hero) is in love with Thalaivi (Heroine). Thalaivi elopes with Thalaivan. Thalaivi’s relatives go in search of Thalaivi. This poem is uttered by the foster mother/mother of the girl who sees a Vaishnava saint on her way. #MEMEthokai #karkanirka

கலித்தொகை 9, பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தலைவியின் செவிலித்தாயும் வைணவத் துறவியும் சொன்னது
எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்
உறித் தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்
நெறிப்பட சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!
வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர் இவ் இடை 5
என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்
தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்
அன்னார் இருவரை காணிரோ பெரும?
காணேம் அல்லேம்! கண்டனம்! கடத்து இடை
ஆண் எழில் அண்ணலோடு அருஞ் சுரம் முன்னிய, 10
மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறீர்!
பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலை உளே பிறப்பினும் மலைக்கு அவை தாம் என் செய்யும்?
நினையுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
சீர்கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை, 15
நீர் உளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும்?
தேருங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழ் உளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும்?
சூழுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே! 20
என, ஆங்கு
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்!
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்,
அறம் தலை பிரியா ஆறும் மற்று அதுவே.

kalittokai 9, pālai pāṭiya peruṅkaṭuṅkō, pālai, talaiviyiṉ cevilittāyum vaiṇavat tuṟaviyum coṉṉatu
eṟittaru katir tāṅki ēntiya kuṭai nīḻal
uṟit tāḻnta karakamum urai cāṉṟa mukkōlum
neṟippaṭa cuval acaii, vēṟu ōrā neñcattuk
kuṟippu ēval ceyal mālaik koḷai naṭai antaṇīr!
vev iṭaic celal mālai oḻukkattīr iv iṭai 5
eṉ makaḷ oruttiyum, piṟaḷ makaṉ oruvaṉum
tam uḷē puṇarnta tām aṟi puṇarcciyar
aṉṉār iruvarai kāṇirō peruma?
kāṇēm allēm! kaṇṭaṉam! kaṭattu iṭai
āṇ eḻil aṇṇalōṭu aruñ curam muṉṉiya, 10
māṇ iḻai maṭavaral tāyir nīr pōṟīr!
pala uṟu naṟum cāntam paṭuppavarkku allatai,
malai uḷē piṟappiṉum malaikku avai tām eṉ ceyyum?
niṉaiyuṅkāl num makaḷ numakkum āṅku aṉaiyaḷē!
cīrkeḻu veṇ muttam aṇipavarkku allatai, 15
nīr uḷē piṟappiṉum nīrkku avai tām eṉ ceyyum?
tēruṅkāl num makaḷ numakkum āṅku aṉaiyaḷē!
ēḻ puṇar iṉ icai muralpavarkku allatai,
yāḻ uḷē piṟappiṉum yāḻkku avai tām eṉ ceyyum?
cūḻuṅkāl num makaḷ numakkum āṅku aṉaiyaḷē! 20
eṉa, āṅku
iṟanta kaṟpiṉāṭku evvam paṭaraṉmiṉ!
ciṟantāṉai vaḻipaṭīic ceṉṟaṉaḷ,
aṟam talai piriyā āṟum maṟṟu atuvē.

கலித்தொகை 9, பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தலைவியின் செவிலித்தாயும் வைணவத் துறவியும் சொன்னது
எறிக்கின்ற சூரியனின் கதிர்களைத் தாங்கும் ஏந்திய குடையின் நிழலில்,
உறியில் தொங்கும் கமண்டலத்தையும், புகழ் பெற்ற முக்கோலினையும்,
நெறியுடன் தோளில் சுமந்து, வேறு ஒன்றனையும் நினைக்காத நெஞ்சத்துடன்,
எண்ணங்களை தமக்கு ஏவல் செய்தலை இயல்பாக உடைய கொள்கையையும் ஒழுக்கத்தையும் உடைய அந்தணரே!
வெப்பம் மிகுந்த இந்த பாதையில் செல்வதை இயல்பாகக் கொண்டு ஒழுக்கமானவரே! இந்த பாதையில்
என் மகள் ஒருத்தியும், வேறொருத்தியின் மகன் ஒருவனும்
தாம் மட்டுமே அறியும் வண்ணம் ஒன்றுசேர்ந்தனர், இப்போது பிறர் அறியும்படி ஒன்றுசேர்ந்து ஓடிவிட்டனர்,
அந்த இருவரைக் கண்டீரோ பெரியவரே!
அவர்களைக் காணாதிருக்கவில்லை, கண்டேன், காட்டு வழியில்;
ஆணழகுடன் உள்ள தலைவனுடன், கடுமையான காட்டு பாதையில் சென்ற
நல்ல குணத்தை அணிகலனாகப் பெற்ற மடமைக் கொண்ட பெண்ணின் தாய் நீ என்று நினைக்கிறன்!
பல பயன்பாடுடைய நறுமணம் மிக்க சந்தனம் தன்னை பூசிக்கொள்பவர்க்கன்றி,
அவை மலையிலே பிறந்தாலும் மலைக்கு அவை என்ன பயன்?
நினைத்துப்பார்த்தால் உன் மகளும் உன்னக்கு அதுப் போலத்தான்;
அழாகான சிறந்த வெண் முத்துக்களை அணிபவர்க் காட்டிலும்,
நீருக்குள்ளே பிறந்தாலும் நீருக்கு அந்த முத்துக்கள் என்ன பயன்?
ஆராய்ந்துபார்த்தால் உன் மகளும் உன்னக்கு அதுப் போலத்தான்;
ஏழு நரம்பால் கூடி எழும்பும் இனிய ஓசைகள், இசைப்பவரைக் காட்டிலும்
யாழினுள்ளே பிறந்தாலும் யாழுக்கு அந்த இசை என்ன பயன்?
எண்ணிப்பார்த்தால் உன் மகளும் உன்னக்கு அதுப் போலத்தான்;
அது போல
உன்னைவிட்டுச் சென்ற கற்பினையுடையவளை எண்ணி வருந்துவதை நிறுத்து!
சிறந்தவனைப் பின் தொடர்ந்து அவள் சென்றாள்,
அறநெறி தவறாத பாதையும் அதுவே!

Kalithokai 9
Pālai Pādiya Perunkadunkō, What the heroine’s foster mother and a Vaishnava ascetic said

Oh Sage,
who carries
umbrella,
to bare the hot rays of sun
and to provide shade,
pots which hang down on hoops,
And rest trident staff rubbed with paste
on your shoulders following your doctrines,
your mind doesn’t waver and
your actions are reflections
of your determination and behavior.
You are travelling in these hot places,

Oh great one,
My daughter has united with a boy
without anyone’s knowledge
Now the every knows they are a couple!
Did you see boy and girl pass by on your way?

I did see the girl passing the forest,
With a handsome young man!
Oh women,
you look like the mother of the girl
with excellent ornaments
Tell me,
Is the sandal born on the mountains and
Applied by people desired by its fragrance
Any use to the mountains?
Think about it, your daughter is like that to you.
Is the white pearls born in the seas and
Adorned by people desiring it
Any use to the sea?
Investigate it, your daughter is like that to you.
Is the sweet music born from the harp
And raised by an expert by strumming seven strings
Any use to the harp?
Deliberate it, your daughter is like that to you.

The one who has gone away carrying her virtues
Has followed an excellent man.
She has taken the righteous path,
Do not worry about her!

Translated by Palaniappan Vairam Sarathy

Notes:
முக்கோல் mu-k-kōl , n. id. + கோல்¹. 1. The trident staff carried by ascetics
திரிதண்டம் tiri-taṇṭam , n. tri-daṇḍa. Trident-staff carried by Vaiṣṇava ascetics; வைணவ சன்னியாசிகள் கையில்தாங்கும் முக்கோல்

உறித் தாழ்ந்த கரகமும் – uṟit tāḻnta karakamum
Pots hanging down from hoops – Kamandalam


Reference:

Tamil Lexicon – University of Madras

Learn Sangam Tamil

http://tamilconcordance.in/table-SANG-16-text.html


எறித்தரு கதிர் தாங்கி ஏந்திகுடை நீழல்,

“eṟittaru katir tāṅki ēntiya kuṭai nīḻal,

எறிக்கின்ற சூரியனின் கதிர்களைத் தாங்கும் ஏந்திய குடையின் நிழலில்,

Cast – sun ray – bare – lifted/hold – umbrella – shadow

உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும்

uṟit tāḻnta karakamum, urai cāṉṟa mukkōlum,

உறியில் தொங்கும் கமண்டலத்தையும், புகழ் பெற்ற முக்கோலினையும்,

Hoops with rope – hang – pots – fame- moral value – trident staff,

நெறிப்பட சுவல் அசைஇ வேறு ஓரா நெஞ்சத்துக்

neṟippaṭa cuval acaii vēṟu ōrā neñcattuk

நெறியுடன் தோளில் சுமந்து, வேறு ஒன்றனையும் நினைக்காத நெஞ்சத்துடன்,

As per rules – on shoulder – rest – other – not think  – mind/heart

குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!

kuṟippu ēval ceyal mālaik koḷai naṭai antaṇīr!

எண்ணங்களை தமக்கு ஏவல் செய்தலை இயல்பாக உடைய கொள்கையையும் ஒழுக்கத்தையும் உடைய அந்தணரே!

Thought – instigate – Action – disposition/nature – determination/hold – behaviour – Brahmins/sage

வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்! இவ் இடை, 5

vev iṭaic celal mālai oḻukkattīr! iv iṭai, 5

வெப்பம் மிகுந்த இந்த பாதையில்  செல்வதை இயல்பாகக் கொண்டு ஒழுக்கமானவரே! இந்த பாதையில்

Hot – place – pass/travel – natural – conduct those – this place

என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும்,

eṉ makaḷ oruttiyum piṟaḷ makaṉ oruvaṉum,

என் மகள் ஒருத்தியும், வேறொருத்தியின் மகன் ஒருவனும்

My daughter – one girl – other’s – son – one boy

தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்

tam uḷē puṇarnta tām aṟi puṇarcciyar

தாம் மட்டுமே அறியும் வண்ணம் ஒன்றுசேர்ந்தனர்,  இப்போது பிறர் அறியும்படி ஒன்றுசேர்ந்து ஓடிவிட்டனர்,

their – inside/within themselves – mingle/unite – they – know – the couple

அன்னார் இருவரை காணிரோ பெரும?”

aṉṉār iruvarai kāṇirō peruma?”

அந்த இருவரைக் கண்டீரோ பெரியவரே!

Such people – two – did you see – great one

“காணேம் அல்லேம்; கண்டனம் கடத்து இடை;

“kāṇēm allēm; kaṇṭaṉam kaṭattu iṭai;

அவர்களைக் காணாதிருக்கவில்லை, கண்டேன், காட்டு வழியில்;

See – not see not – we did see – forest – place

ஆண் எழில் அண்ணலோடு அருஞ் சுரம் முன்னிய, 10

āṇ eḻil aṇṇalōṭu aruñ curam muṉṉiya, 10

ஆணழகுடன் உள்ள தலைவனுடன், கடுமையான காட்டு பாதையில் சென்ற

Boy – beauty – great/superior – rare – forest/waste land – reach/progress

மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்!

māṇ iḻai maṭavaral tāyir nīr pōṟir!

நல்ல குணத்தை அணிகலனாகப் பெற்ற மடமைக் கொண்ட பெண்ணின் தாய் நீ என்று நினைக்கிறன்!

Excellent – ornament – simple girl – mother – you – alike

பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,

pala uṟu naṟum cāntam paṭuppavarkku allatai,

பல பயன்பாடுடைய நறுமணம் மிக்க சந்தனம் தன்னை பூசிக்கொள்பவர்க்கன்றி,

Many – desirable – fragrant – sandal – for those who apply – isnt it for them

மலை உளே பிறப்பினும், மலைக்கு அவை தாம் என் செய்யும்?

malai uḷē piṟappiṉum, malaikku avai tām eṉ ceyyum?

அவை மலையிலே பிறந்தாலும் மலைக்கு அவை என்ன பயன்?

Mountain – inside – born although – mountain – those – they – what – do

நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

niṉaiyuṅkāl, num makaḷ numakkum āṅku aṉaiyaḷē!

நினைத்துப்பார்த்தால் உன் மகளும் உன்னக்கு அதுப் போலத்தான்;

Think about it – your –  daughter – for you – alike – such/same

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை, 15

cīrkeḻu veṇmuttam aṇipavarkku allatai, 15

அழாகான சிறந்த வெண் முத்துக்களை அணிபவர்க் காட்டிலும்,

Fine – beautiful – white pearl – for those who wear – isnt it for them

நீர் உளே பிறப்பினும், நீர்க்கு அவை தாம் என் செய்யும்?

nīr uḷē piṟappiṉum, nīrkku avai tām eṉ ceyyum?

நீருக்குள்ளே பிறந்தாலும் நீருக்கு அந்த முத்துக்கள் என்ன பயன்?

Water – inside – born – for  water – those – they – what – use

தேருங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

tēruṅkāl, num makaḷ numakkum āṅku aṉaiyaḷē!

ஆராய்ந்துபார்த்தால் உன் மகளும் உன்னக்கு அதுப் போலத்தான்;

Examine – your daughter – yours – alike – same

ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,

ēḻ puṇar iṉ icai muralpavarkku allatai,

ஏழு நரம்பால் கூடி எழும்பும் இனிய ஓசைகள், இசைப்பவரைக் காட்டிலும்

seven – mingle – sweet –  music – for the ones who raise music – isnt it for them

யாழ் உளே பிறப்பினும், யாழ்க்கு அவை தாம் என் செய்யும்?

yāḻ uḷē piṟappiṉum, yāḻkku avai tām eṉ ceyyum?

யாழினுள்ளே பிறந்தாலும் யாழுக்கு அந்த இசை என்ன பயன்?

harp/lute- inside – born – harp/lute – those – they – what – use

சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே! 20

cūḻuṅkāl, num makaḷ numakkum āṅku aṉaiyaḷē! 20

எண்ணிப்பார்த்தால் உன் மகளும் உன்னக்கு அதுப் போலத்தான்;

Deliberate – your – daughter – yours – alike – same

என ஆங்கு,

eṉa āṅku,

அது போல

So – alike

இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்!

iṟanta kaṟpiṉāṭku evvam paṭaraṉmiṉ!

உன்னைவிட்டுச் சென்ற கற்பினையுடையவளை எண்ணி வருந்துவதை நிறுத்து!

Pass- learnings/virtue – distress – abandon

சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்;

ciṟantāṉai vaḻipaṭīic ceṉṟaṉaḷ;

சிறந்தவனைப் பின் தொடர்ந்து அவள் சென்றாள்,

One who is good/great – way follow – she went

அறம்தலை பிரியா ஆறும் மற்று அதுவே”.

aṟamtalai piriyā āṟum maṟṟu atuvē”

அறநெறி தவறாத பாதையும் அதுவே!

wise/moral/righteous – not move away – path – besides – that

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.