You have no mercy thunder – Kurunthokai 158


#MEMEthokai51

Situation: Thalaivan (Hero) is in love with Thalaivi (heroine), he secretly meets her ever night, passing through dangerous mountain paths. Thalaivi utters this poem to the thunder and rain which could interrupt Thalaivan’s trip to meet her. #MEMEthokai #karkanirka

குறுந்தொகை 158, ஔவையார், குறிஞ்சித் திணை – தலைவி மழையிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
நெடுவரை மருங்கின் பாம்பு பட இடிக்கும்
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇக்
காலொடு வந்த கமஞ்சூல் மா மழை!
ஆர் அளி இலையோ, நீயே பேர் இசை
இமயமும் துளக்கும் பண்பினை,
துணை இலர் அளியர் பெண்டிர் இஃது எவனோ?

kuṟuntokai 158, auvaiyār, kuṟiñcit tiṇai – talaivi maḻaiyiṭam coṉṉatu, ciṟaippuṟattāṉāka irunta talaivaṉ kēṭkumpaṭi
neṭuvarai maruṅkiṉ pāmpu paṭa iṭikkum
kaṭu vicai urumiṉ kaḻaṟu kural aḷaiik
kāloṭu vanta kamañcūl mā maḻai!
ār aḷi ilaiyō, nīyē pēr icai
imayamum tuḷakkum paṇpiṉai,
tuṇai ilar aḷiyar peṇṭir iHtu evaṉō?

குறுந்தொகை 158, ஔவையார், குறிஞ்சித் திணை – தலைவி மழையிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
உயர்ந்த மலையின் பக்கத்திலுள்ள பாம்புகள் மேலே பட இடிக்கும்
கடுமையான வேகத்தையுடைய உருமி இடிக்கும் இடி முழக்கத்தோடு கலந்து,
காற்றோடு வந்த நிறைந்த கருக்கொண்ட மா மழை!
நிறைந்த இரக்கத்தை உன்னக்கில்லையோ? நீ பெரும் புகழ்கொண்ட
இமயமலையையும் அசைக்கும் பண்பினைக்கொண்டாய்!
துணையின்றி காக்கப்படவேண்டிய பெண்டிரிடம் உன் வலிமையைகாட்டுவது எதற்காக?

Kurunthokai 158, Avvaiyār, Kurinji Thinai – What the heroine said to the rain, as the hero listened nearby
Oh wind you come along with pregnant rain clouds,
You mingle with the forceful angry thunder,
Which roars and strikes the snakes on the mountain top,
You spread everywhere,
You have reputation,
To shake the Himalayas of great fame.
Don’t you have mercy?
Is it right of you to strike fear
on Women who are without
support and protection (of their lovers)?

Translated by Palaniappan Vairam Sarathy

Notes:
It is interesting to note Avvaiyar was well versed with Himalayan weather conditions!
சூல் cūl- , 3 v. cf. chur. intr. To become pregnant; கருப்பங்கொள்ளுதல்.

—-
Reference:

Tamil Lexicon – University of Madras

Learn Sangam Tamil

Tamilconcordance.in

நெடுவரை மருங்கின் பாம்பு பட இடிக்கும்

neṭuvarai maruṅkiṉ pāmpu paṭa iṭikkum

உயர்ந்த மலையின் பக்கத்திலுள்ள பாம்புகள் மேலே பட இடிக்கும்

broad – mountain top- side – snake – strike – thunder/roar

கடு விசை உருமின் கழறு குரல் அளைஇக்

kaṭu vicai urumiṉ kaḻaṟu kural aḷaiik

கடுமையான வேகத்தையுடைய உருமி இடிக்கும் முழக்கத்தோடு கலந்து

Harsh – force/swift –  fearful/ angry – thunder – mingle/mix

காலொடு வந்த கமஞ்சூல் மா மழை!

kāloṭu vanta kamañcūl mā maḻai!

காற்றோடு வந்த நிறைந்த கருக்கொண்ட மா மழை மேகம்!

Wind – come – fullness – pregnant – great – rain cloud

ஆர் அளி இலையோ, நீயே பேர் இசை

ār aḷi ilaiyō, nīyē pēr icai

நிறைந்த இரக்கம் உன்னக்கில்லையோ? நீ பெரும் புகழ்கொண்ட

Spread – mercy/love – don’t have? – you – great – music/give lavishly

இமயமும் துளக்கும் பண்பினை,  

imayamum tuḷakkum paṇpiṉai,

இமயமலையையும் அசைக்கும் பண்பினைக்கொண்டாய்!

Himalayas – shake/tremble – character

துணை இலர் அளியர் பெண்டிர் இஃது எவனோ?

tuṇai ilar aḷiyar peṇṭir iHtu evaṉō?

துணையின்றி காக்கப்படவேண்டிய பெண்டிரிடம் உன் வலிமையைகாட்டுவது எதற்காக?support – Without –  not protected – women – in what manner

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.