#MEMEthokai56
Situation: Thalaivan (Hero) is in love with Thalaivi (heroine), but is staying away from her, afraid of village gossips. Thozhi (Thalaivi’s friend) utters this poem advising they should do something to shake up the situation. #MEMEthokai #karkanirka
குறுந்தொகை 73, பரணர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ
அழியல் வாழி தோழி, நன்னன்
நறு மா கொன்று நாட்டில் போகிய
ஒன்றுமொழிக் கோசர் போல,
வன்கண் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே.
kuṟuntokai 73, paraṇar, kuṟiñcit tiṇai – tōḻi talaiviyiṭam coṉṉatu
makiḻnaṉ mārpē veyyaiyāl nī
aḻiyal vāḻi tōḻi, naṉṉaṉ
naṟu mā koṉṟu nāṭṭil pōkiya
oṉṟumoḻik kōcar pōla,
vaṉkaṇ cūḻcciyum vēṇṭumāl ciṟitē.



குறுந்தொகை 73, பரணர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
காதலனின் மார்பை விரும்புகின்றாய், நீ
வருந்தவேண்டாம் தோழி! நன்னனின்
நறுமணமுள்ள மா மரத்தை அழித்து நாட்டுக்குள் சென்ற
வாக்குத் தவறாதக் கோசர் போல
கொடுமையான சூழ்ச்சியும் வேண்டும் சிறிதளவு.
Kurunthokai 73, Paranar, Kurinji Thinai – What the heroine’s friend said to her
You desire your lover’s chest !
Don’t suffer, Long Live my friend!
Like the reliable Kosars,
who entered the country of Nannan ,
And destroyed his fragrant [sacred] Mango tree,
We need to devise some cruel plan!
Translated by Palaniappan Vairam Sarathy
Notes:
Nannan is Nanthas of Konkan coast/Tulu Country.
This poem is excellent example of Tamil poems out side present day Tamil nadu. This poem is set in present day Karnataka
For more on Nannans
https://tulu-research.blogspot.com/2011/03/271-nanda-kings-and-kongas-in-sangam.html
https://tulu-research.blogspot.com/2011/01/268-nanda-rulers-of-tulunadu.html
—-
Reference:
Tamil Lexicon – University of Madras
Learn Sangam Tamil
Tamilconcordance.in
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D
—
makiḻnaṉ mārpē veyyaiyāl nī
காதலனின் மார்பை விரும்புகின்றாய், நீ
lord/lover – chest – desire so – you
அழியல் வாழி தோழி, நன்னன்
aḻiyal vāḻi tōḻi, naṉṉaṉ
வருந்தவேண்டாம் தோழி! நன்னனின்
Suffer not – long live – friend – King Nannan
நறு மா கொன்று நாட்டில் போகிய
naṟu mā koṉṟu nāṭṭil pōkiya
நறுமணமுள்ள மா மரத்தை அழித்து நாட்டுக்குள் சென்ற
Fragrant mango – destroy – country – went
ஒன்றுமொழிக் கோசர் போல,
oṉṟumoḻik kōcar pōla,
வாக்குத் தவறாதக் கோசர் போல
One language – Kosars – alike,
வன்கண் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே. 5
vaṉkaṇ cūḻcciyum vēṇṭumāl ciṟitē.
கொடுமையான சூழ்ச்சியும் வேண்டும் சிறிதளவு.
Cruel – plan – need- little