#MEMEthokai57
Situation: Thalaivan (Hero) is in love with Thalaivi (heroine), and has promised to marry her. Thalaivi’s foster mother utters this poem to Thalaivi’s mother after Thalaivan eloped with Thalaivi. #MEMEthokai #karkanirka
குறுந்தொகை 15, ஔவையார், பாலைத் திணை – செவிலித்தாய் தலைவியின் தாயிடம் சொன்னது
பறைபடப் பணிலம் ஆர்ப்ப, இறை கொள்பு
தொன் மூது ஆலத்துப் பொதியில் தோன்றிய
நாலூர்க் கோசர் நன் மொழி போல
வாயாகின்றே தோழி, ஆய் கழல்
சேயிலை வெள் வேல் விடலையொடு 5
தொகு வளை முன் கை மடந்தை நட்பே.
kuṟuntokai 15, auvaiyār, pālait tiṇai – cevilittāy talaiviyiṉ tāyiṭam coṉṉatu
paṟaipaṭap paṇilam ārppa, iṟai koḷpu
toṉ mūtu ālattup potiyil tōṉṟiya
nālūrk kōcar naṉ moḻi pōla
vāyākiṉṟē tōḻi, āy kaḻal
cēyilai veḷ vēl viṭalaiyoṭu 5
toku vaḷai muṉ kai maṭantai naṭpē.



குறுந்தொகை 15, ஔவையார், பாலைத் திணை – செவிலித்தாய் தலைவியின் தாயிடம் சொன்னது
உரை 1:
பறை முழங்க, சங்கு ஒலிக்க, மக்கள் கூட
தொன்மையான ஆலமரத்துப் பொதுவிடத்தில் தோன்றும்
நாலூர்க் கோசர்களின் சத்தியத்தை போல
நடக்கிறதே தோழி, அழகான வீரக் கழலையும்
செவ்விலைக் கொண்ட வெற்றி வேளையும் உடைய இளைஞனோடு
அணிஅணியாக வளைகள் அணிந்த முன்கையையுடைய மடந்தையின் காதல்.
உரை 2:
பறை முழங்க, சங்கு ஒலிக்க, திருமணத்திற்கு மக்கள்கூட
தொன்மையான ஆலமரத்துப் பொதுவிடத்தில் தோன்றிய
நாலூர்க் கோசர்களின் சத்தியத்தை போல பலித்தது
தோழி, அழகான வீரக் கழலையும்
செவ்விலைக் கொண்ட வெற்றி வேளையும் உடைய இளைஞனோடு
அணிஅணியாக வளைகள் அணிந்த முன்கையையுடைய உன் இளம் பெண்ணின் காதல்.



Kurunthokai 15, Avvaiyār, Pālai Thinai – What the foster mother said to the heroine’s mother about her daughter’s wedding
Translation 1:
My friend,
Like the oath of
Kosars of four cities
Who assembled in the
ancient common grounds
under the old Banyan tree
Where Parai drums were beaten
and conch roared
Became true,
The love/friendship of (your) girl
with rows of bangles on her forearm
for the youth/chieftain
with warrior anklet
and bright lance with red tip
Is true
Translation 2:
My friend,
Sounds of beaten Parai drums and roars of
conch roars fill the wedding
as the,
The love/friendship of (your) girl
with rows of bangles on her forearm
for the youth/chieftain
with warrior anklet
and bright lance with red tip
Is true
Like the oath of
Kosars of four cities
Who assembled in the
ancient common grounds
under the old Banyan tree
Became true
Translated by Palaniappan Vairam Sarathy
Notes:
Whole poem rests on how you interpret
இறை கொள்பு
iṟai koḷpu
மக்கள் கூட
fill – Wedding/gather
If we assume music fills Wedding than translation 2. If we assume people gathered than translation 1.
Nannan is Nanthas of Konkan coast/Tulu Country.
This poem is excellent example of Tamil poems out side present day Tamil nadu. This poem is set in present day Karnataka
For more on Nannans
https://tulu-research.blogspot.com/2011/03/271-nanda-kings-and-kongas-in-sangam.html
https://tulu-research.blogspot.com/2011/01/268-nanda-rulers-of-tulunadu.html
—-
Reference:
Tamil Lexicon – University of Madras
Learn Sangam Tamil
Tamilconcordance.in
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D
பறைபடப் பணிலம் ஆர்ப்ப, இறை கொள்பு
paṟaipaṭap paṇilam ārppa, iṟai koḷpu
பறை முழங்க, சங்கு ஒலிக்க, மக்கள் கூட
Parai drums – beat – conch – road – fills/stay-halt – marry/gather
தொன் மூது ஆலத்துப் பொதியில் தோன்றிய
toṉ mūtu ālattup potiyil tōṉṟiya
தொன்மையான ஆலமரத்துப் பொதுவிடத்தில் தோன்றும்
Ancient – old – banyan – common grounds – appear
nālūrk kōcar naṉ moḻi pōla
நாலூர்க் கோசர்களின் சத்தியத்தை போல
4 town/city – kosar – righteous (oath) – words – alike
vāyākiṉṟē tōḻi, āy kaḻal
நடக்கிறதே தோழி, அழகான வீரக் கழலையும்
Come true – my friend – beautiful/fine – warrior anklet