Foolish peacocks – Kurunthokai 251


#MEMEthokai58

Situation: Thalaivan (hero) is in love with Thalaivi (Heroine) and is far away to earn wealth.He promised to return before the monsoon rains. When the rain started and peacocks started to dance, Thozhi (Thalaivi’s friend) utters this poem. #MEMEthokai #karkanirka

குறுந்தொகை 251, இடைக்காடனார், முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
மடவ வாழி மஞ்ஞை மா இனம்,
கால மாரி பெய்தென அதன் எதிர்
ஆலலும் ஆலின, பிடவும் பூத்தன,
கார் அன்று இகுளை, தீர்க நின் படரே,
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர் 5
புது நீர் கொளீஇய உகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே.

kuṟuntokai 251, iṭaikkāṭaṉār, mullait tiṇai – tōḻi talaiviyiṭam coṉṉatu
maṭava vāḻi maññai mā iṉam,
kāla māri peyteṉa ataṉ etir
ālalum āliṉa, piṭavum pūttaṉa,
kār aṉṟu ikuḷai, tīrka niṉ paṭarē,
kaḻinta mārikku oḻinta paḻa nīr 5
putu nīr koḷīiya ukuttarum
notumal vāṉattu muḻaṅku kural kēṭṭē.

குறுந்தொகை 251, இடைக்காடனார், முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
முட்டாள்கள் ஆகிவிட்டன, அழகிய மயில் இனம்!
பருவ மழை பெய்தது என்று எண்ணி
ஆடவும் ஆடின; பிடவும் பூத்தன;
இது கார்ப்பருவம் அல்ல, தீர்க உன் துன்பம்,
முழங்குகின்ற குரலைக் கேட்டு ,
உன்மீது பற்று இல்லாத வானம்,
முந்தைய மழைக்காலத்திலிருந்து மீதியுள்ள பழைய நீரை,
புதிய நீரைக் கொள்வதற்காக, பொழிந்துவிட்டுப் போகிறது!

Kurunthokai 251, Idaikkādanār, Mullai Thinai – What the heroine’s friend said to her
Long live, ignorant peacocks!
You dance with your flock
continuously,
seeing the unseasonal rain
along with pitavam which blossmed.
Do not be sad my friend,
This is not the monsoon season,
The clouds are shedding
the leftover water from the past season
with roar from the distant sky
to feed on new water for the monsoon

Translated by Palaniappan Vairam Sarathy

Notes:

—-
Reference:

Tamil Lexicon – University of Madras

Learn Sangam Tamil

Tamilconcordance.in


மடவ வாழி மஞ்ஞை மா இனம்,

maṭava vāḻi maññai mā iṉam,

முட்டாள்கள் ஆகிவிட்டன! வாழ்க! அழகிய மயில் இனமே!

Stupid – long live – peacock – great/beautiful – pack/herd

கால மாரி பெய்தென அதன் எதிர்

kāla māri peyteṉa ataṉ etir

பருவ மழை பெய்தது என்று எண்ணி

Season – rain – pour thinking – its – join/recieve

ஆலலும் ஆலின, பிடவும் பூத்தன,

ālalum āliṉa, piṭavum pūttaṉa,

ஆடவும் ஆடின; பிடவும் பூத்தன;

Dance – dance – Pidavam – blossomed

கார் அன்று இகுளை, தீர்க நின் படரே,

kār aṉṟu ikuḷai, tīrka niṉ paṭarē,

இது கார்ப்பருவம் அல்ல, தீர்க உன் துன்பம்;

Rain – not – friend – end/solve – your – sorrow/affliction

கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர்

kaḻinta mārikku oḻinta paḻa nīr  5

முந்தைய மழைக்காலத்திலிருந்து மீதியுள்ள பழைய நீரை,

Past – rain – let out – old – rain

புது நீர் கொளீஇஉகுத்தரும்

putu nīr koḷīiya ukuttarum

புதிய நீரைக் கொள்வதற்காக, பொழிந்துவிட்டுப் போகும்

New – water – acquire – spill

நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே.

notumal vāṉattu muḻaṅku kural kēṭṭē.

உன்மீது பற்று இல்லாமல் வானத்தின் முழங்குகின்ற குரலைக் கேட்டு

Indifferent- sky -roaring -sound- after- listen

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.