Hope the kings fury ends – Ainkurunooru 444


#MEMEthokai59

Situation: Thalaivan is far away in a battlefield fighting with his king, leaving his lover (Thalaivi) lonely. He is desperate to meet her soon! #MEMEthokai #Karkanirka

ஐங்குறுநூறு 444, பேயனார், முல்லைத் திணை – தலைவன் சொன்னது
பெருந்தோள் மடவரல் காண்குவெம் தில்ல,
நீண் மதில் அரணம் பாய்ந்தெனத் தொடி பிளந்து
வைந்நுதி மழுகிய தடங்கோட்டு யானை
வென் வேல் வேந்தன் பகை தணிந்து,
இன்னும் தன்னாட்டு முன்னுதல் பெறினே.

aiṅkuṟunūṟu 444, pēyaṉār, mullait tiṇai – talaivaṉ coṉṉatu
peruntōḷ maṭavaral kāṇkuvem tilla,
nīṇ matil araṇam pāynteṉat toṭi piḷantu
vainnuti maḻukiya taṭaṅkōṭṭu yāṉai
veṉ vēl vēntaṉ pakai taṇintu,
iṉṉum taṉṉāṭṭu muṉṉutal peṟiṉē.

ஐங்குறுநூறு 444, பேயனார், முல்லைத் திணை – தலைவன் சொன்னது
நெடிய கோட்டை மதிலை தாக்கியதால் தந்ததின் வளை பிளந்துபோக,
கூர்மையான நுனியும் மழுங்க பெரிய கொம்பினைக் கொண்ட யானைப்படையையுடைய
வெற்றி வேலுடைய வேந்தன் தன் பகையுணர்வு தணிந்து
இன்னும் தன் நாட்டுக்கு புறப்பட எண்ணினால்
பெரிய தோள்களையுடைய பேதையை காண்பேன்!

Ainkurunūru 444, Pēyanār, Mullai Thinai – What the hero said
We will see the naive young girl
with broad shoulders
If
Enmity of the king
with victorious lance
Dilutes
after seeing weapon on
The curved tusk of the war elephant
Split open and its sharpness
Getting blunt after leaping and
Ramming into the long fort walls !

Translated by Palaniappan Vairam Sarathy

—-
Reference:

Tamil Lexicon – University of Madras

Learn Sangam Tamil

Tamilconcordance.in

பெருந்தோள் மடவரல் காண்குவெம் தில்ல,

peruntōḷ maṭavaral kāṇkuvem tilla,

பெரிய தோள்களையுடைய பேதையை காண்பேன்!

Broad – shoulder – simple young women – will see – !

நீண் மதில் அரணம் பாய்ந்தெனத் தொடி பிளந்து

nīṇ matil araṇam pāynteṉat toṭi piḷantu

நெடிய கோட்டை மதிலை  தாக்கியதால் தந்ததின் வளை  பிளந்துபோக,

long – fort walls – fort – leap –  ornamental ring on elephant tusk – spilt/crack open

வைந்நுதி மழுகிதடங்கோட்டு யானை

vainnuti maḻukiya taṭaṅkōṭṭu yāṉai

கூர்மையான நுனியும் மழுங்க பெரிய கொம்பினைக் கொண்ட யானைப்படையையுடைய

Sharpness – blunt – big/curved – Tusk – elephant

வென் வேல் வேந்தன் பகை தணிந்து,

veṉ vēl vēntaṉ pakai taṇintu,

வெற்றி வேலுடைய வேந்தன் தன் பகையுணர்வு தணிந்து

victory – lance – king – enemity – dilute

இன்னும் தன்னாட்டு முன்னுதல் பெறினே.

iṉṉum taṉṉāṭṭu muṉṉutal peṟiṉē.

இன்னும்  தன் நாட்டுக்கு புறப்பட எண்ணினால்

also/yet – his country – go – think

3 Comments

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.