You are stupid Muruga – Narrinai 34


#MEMEthokai60

Situation: Thalaivan (Hero) is in love with Thalaivi (Heroine). Thalaivan is away and Thalaivi is love sick. Her health and beauty deteriorates. Her parents think she is afflicted by God Murugan (who afflicts virgin women and people doing bad acts). They invite Priest (Velan), who sacrifies goat and prays to Murugan to remove her affliction. Priest dances veriattam (dance of Frenzy) which is indication that Murugan has entered him and taking the offering to relive the girl and punish those who is cause for this affliction. #MEMEthokai #karkanirka

நற்றிணை 34, பிரமசாரி, குறிஞ்சித் திணை – தோழி முருகனிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தள்
குருதி ஒண் பூ உரு கெழக் கட்டிப்,
பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவி இன் இயத்து ஆடும் நாடன், 5
மார்புதர வந்த படர் மலி அரு நோய்,
நின் அணங்கு அன்மை அறிந்தும், அண்ணாந்து
கார் நறுங்கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்,
கடவுள் ஆயினும் ஆக 10
மடவை மன்ற, வாழிய முருகே!

naṟṟiṇai 34, piramacāri, kuṟiñcit tiṇai – tōḻi murukaṉiṭam coṉṉatu, ciṟaippuṟattāṉāka irunta talaivaṉ kēṭkumpaṭi
kaṭavuṭ kaṟcuṉai aṭai iṟantu aviḻnta
paṟiyāk kuvaḷai malaroṭu kāntaḷ
kuruti oṇ pū uru keḻak kaṭṭip,
peruvarai aṭukkam poṟpac cūrmakaḷ
aruvi iṉ iyattu āṭum nāṭaṉ, 5
mārputara vanta paṭar mali aru nōy,
niṉ aṇaṅku aṉmai aṟintum, aṇṇāntu
kār naṟuṅkaṭampiṉ kaṇṇi cūṭi
vēlaṉ vēṇṭa veṟimaṉai vantōy,
kaṭavuḷ āyiṉum āka 10
maṭavai maṉṟa, vāḻiya murukē!

நற்றிணை 34, பிரமசாரி, குறிஞ்சித் திணை – தோழி முருகனிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
கடவுள் உறைவிடத்தில் உள்ள சுனையில், இலைகளை பின்தள்ளி மலர்ந்த
யாரும் பறிக்காத குவளை மலருடன், காந்தளின்
குருதி நிறத்தையுடைய ஒளிரும் பூவை வடிவழகொடுக் கட்டி
பெரிய மலைச் சரிவுகளில் அணிந்த சூர மகளிர்
அருவியின் இசைக்கு ஆடும் நாட்டைச் சேர்த்தவன்
அவன் மார்பு தழுவியதால் வந்து விரைவாகப் படரும் அரிய (காதல்) நோய்
உன் வருந்துதல் இல்லை என அறிந்தும், அண்ணாந்து
கார்காலத்தில் மலரும் நறுமணமிக்க கடம்பின் இலைகளை சூடிய
வேலன் வேண்ட வெறியாட்ட களத்துக்கு வந்தாய்!
நீ கடவுளே ஆயினும் ஆகுக,
ஆனால் நீ ஒரு மடையன், வாழ்க முருகனே!

Natrinai 34, Piramasāri, Kurinji Thinai – What the heroine’s friend said to Murukan, as the hero listened nearby
You very well know that the
Great disease that has spread on me
Came from the chest of my man
Who comes from the mountains
Where celestial women dance
To the rhythms of the waterfalls
Wearing garland made of
Blood red bright glory lily flowers
And unplucked blue lilies
Which made way between leaves
To bloom in the mountain pools
Dedicated for the gods.
Yet, when your priest looked up and
Prayed for you
Wearing the fresh and fragrant
wreaths of kadambu
You turned up in the house of worship (temple)
You may be a god! But you are certainly Ignorant!
Long live! oh Muruga!

Translated by Palaniappan Vairam Sarathy

Notes:

கடம்பம் kaṭampam , n. kadamba. 1. Common cadamba, l. tr., Anthocephalus cadamba; மரவகை

—-

Reference:

Tamil Lexicon – University of Madras

Learn Sangam Tamil

Tamilconcordance.in

——–

கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த

kaṭavuṭ kaṟcuṉai aṭai iṟantu aviḻnta

கடவுள் உறைவிடத்தில் உள்ள சுனையில், இலைகளை பின்தள்ளி மலர்ந்த

God (one who transcends mind/thought), mountain pool –  leaf – penetrate – bloom

பறியாக் குவளை மலரொடு காந்தள்

paṟiyāk kuvaḷai malaroṭu kāntaḷ

யாரும் பறிக்காத குவளை மலருடன், காந்தளின்

Not pluck – water lily (red/blue)- flower – malabar glory lily

குருதி ஒண் பூ உரு கெழக் கட்டி,

kuruti oṇ pū uru keḻak kaṭṭip,

குருதி நிறத்தையுடைய ஒளிரும் பூவை வடிவழகொடுக் கட்டி

Blood red – bright – flower – shape – unite – tie

பெரு  வரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்

peruvarai aṭukkam poṟpac cūrmaka

பெரிய மலைச் சரிவுகளில் அணிந்த சூர மகளிர்ḷ

Big – mountain – slope/groove – wear – celestial women

அருவி இன் இயத்து ஆடும் நாடன்

aruvi iṉ iyattu āṭum nāṭaṉ,  5

அருவியின்  இசைக்கு ஆடும் நாட்டைச் சேர்த்தவன்

Waterfall – sweet – transcend – dance – countryman

மார்பு தர வந்த படர் மலி அரு நோய்

mārputara vanta paṭar mali aru nōy,

அவன் மார்பு தழுவியதால் வந்து விரைவாகப் படரும் அரிய (காதல்) நோய்

Chest – gave – come – spread – increasing – rare/ great – disease

நின் அணங்கு அன்மை அறிந்தும், அண்ணாந்து,

iṉ aṇaṅku aṉmai aṟintum, aṇṇāntu

உன்  வருந்துதல் இல்லை என அறிந்தும், அண்ணாந்து

Your – affliction – not – you know – look up

கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி,

kār naṟuṅkaṭampiṉ kaṇṇi cūṭi

கார்காலத்தில் மலரும் நறுமணமிக்க கடம்பின் இலைகளை சூடிய

rain/dark/fresh – fragrant – Kadamba – flower garland – wear

வேலன் வேண்ட, வெறி மனை வந்தோய்!

vēlaṉ vēṇṭa veṟimaṉai vantōy,

வேலன் வேண்ட வெறியாட்ட களத்துக்கு வந்தாய்!

Velan (priest) – pray – frenzy dancing – house

கடவுள் ஆயினும் ஆக,

kaṭavuḷ āyiṉum āka  10

நீ கடவுளே ஆயினும் ஆகுக,

God – let you be – let it be

மடவை மன்ற, வாழிய முருகே!

maṭavai maṉṟa, vāḻiya murukē!

ஆனால் நீ ஒரு மடையன், வாழ்க முருகனே!

Stupid – certainly – live long – Muruga

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.