#MEMEthokai61
Situation: Thalaivan (hero) who is married to Thalaivi (heroine), is having affairs outside marriage. He hunts for new girls and is behind young girls in the village river. One of the girls utters this poem to the Thalaivan. #MEMEthokai #karkanirka
ஐங்குறுநூறு 79, ஓரம்போகியார், மருதத் திணை – பரத்தையின் தோழி தலைவனிடம் சொன்னது
புதுப்புனல் ஆடி அமர்த்த கண்ணள்,
யார் மகள் இவளெனப் பற்றிய மகிழ்ந!
யார் மகள் ஆயினும் அறியாய்,
நீ யார் மகனை, எம் பற்றியோயே?
aiṅkuṟunūṟu 79, ōrampōkiyār, marutat tiṇai – parattaiyiṉ tōḻi talaivaṉiṭam coṉṉatu
putuppuṉal āṭi amartta kaṇṇaḷ,
yār makaḷ ivaḷeṉap paṟṟiya makiḻna!
yār makaḷ āyiṉum aṟiyāy,
nī yār makaṉai, em paṟṟiyōyē?


ஐங்குறுநூறு 79, ஓரம்போகியார், மருதத் திணை – பரத்தையின் தோழி தலைவனிடம் சொன்னது
புதிய வெள்ளந்தில் நீர் ஆடியதால் உக்கிரமாகத் தோன்றும் கண்களைக் கொண்ட
இவள் யாருடைய மகள் என்று அவள் கையைப் பிடித்த்தாய் தலைவனே!
இவள் யார் மகளாயினும் நீ அதை அறிய இயலாது!
நீ யாருடைய மகன் எங்கள் கையைப் பிடிப்பதற்கு!
Ainkurunūru 79, Ōrampōkiyār, Marutham Thinai – What the concubine’s friend said to the hero
Oh man from agricultural lands,
You seized her hands seeing her irritated eyes,
after playing in the fresh waters,
and asked “whose daughter are you?”
You will not know whose daughter she is,
First tell us whose son are you to seize our hands!
Translated by Palaniappan Vairam Sarathy
—-
Reference:
Tamil Lexicon – University of Madras
Learn Sangam Tamil
Tamilconcordance.in
—
புதுப் புனல் ஆடி அமர்த்த கண்ணள்,
putuppuṉal āṭi amartta kaṇṇaḷ,
புதிய வெள்ளந்தில் ஆடியதால் உக்கிரமாகத் தோன்றும் கண்களைக் கொண்ட
New – stream – bath – tranquilizing/causing war/rest – eyes
யார் மகள், இவள்?’ எனப் பற்றிய மகிழ்ந!
yār makaḷ ivaḷeṉap paṟṟiya makiḻna!
இவள் யாருடைய மகள் என்று அவள் கையைப் பற்றினாய் தலைவனே!
Whose – daughter – is she? Thinking – grasp – lord of agricultural tract
யார் மகளாயினும் அறியாய்;
yār makaḷ āyiṉum aṟiyāy,
இவள் யார் மகளாயினும் நீ அதை அறியாய்!
whose – daughter – you wont know
நீ யார் மகனை, எம் பற்றியோயே?
nī yār makaṉai, em paṟṟiyōyē?
நீ யாருடைய மகன் எங்கள் கையைப் பற்றுவதற்கு!
you – whose – son – to – grasp us